Porsche Panamera Platinum Edition இந்தியாவில் அறிமுகம்! எப்பப்பா இதோட விலை இவ்ளோ அதிகமா!!
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான போர்ஷே (Porsche), அதன் பனமேரா கார் மாடலில் சிறப்பு பதிப்பு ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பனமேரா பிளாட்டின் எடிசன் (Panamera Platinum Edition) எனும் பெயரில் வந்திருக்கும் இந்த சொகுசு கார் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான போர்ஷே (Porsche), அதன் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்றான பனமேரா மாடலில் சிறப்பு பதிப்பு ஒன்றை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பனமேரா பிளாட்டினம் ( Panamera Platinum Edition) எனும் பதிப்பையே போர்ஷே தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

வழக்கமான பனமேராவைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பு வாய்ந்த பதிப்பாக இதனை போர்ஷே நிறுவனம் உருவாக்கி உள்ளது. குறிப்பாக தோற்றத்தில் இந்த கார் பல மடங்கு கவர்ச்சியானதாக காட்சியளிக்கின்றது. அழகு மற்றும் கவர்ச்சிக்கு பெயர்போன தயாரிப்பாக போர்ஷேவின் அனைத்து தயாரிப்புகளும் இருக்கின்றன.

அந்தவகையில், நிறுவனம் தயாரித்து வரும் வழக்கமான பனமேராவும் மிகுந்த கவர்ச்சியான தயாரிப்புகளில் ஒன்றாக இருக்கின்றது. ஆனால், இதைக்காட்டிலும் பல மடங்கு கூடுதல் ஈர்ப்பான தோற்றத்தைக் கொண்ட சொகுசு வாகனமாக பனமேரா பிளாட்டினம் எடிசன் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு புதிய பனமேரா பிளாட்டினம் எடிசனின் வெளிப்புற தோற்றமே சான்று.

தற்போது இக்காருக்கான புக்கிங் பணிகள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் தொடங்கியுள்ளன. போர்ஷோ கார் விற்பனையாளர்கள் புதிய சிறப்பு பதிப்பிற்கான புக்கிங்குகளை ஏற்க தொடங்கியிருக்கின்றனர். பனமேரா நிறுவனம் இச்சிறப்பு பதிப்பை கடந்த மாதமே உலகளவில் அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையிலேயே தற்போது இந்தியாவில் பனமேரா பிளாட்டினம் எடிசன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இப்பதிப்பிற்கு ரூ. 1.71 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. போர்ஷே ஒட்டுமொத்தமாக நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப நிலை வேரியண்டான ஸ்டாண்டர்டு மாடல் பனமேரா ரூ. 1.55 கோடி என்ற அதிகபட்ச விலையில் இந்தியாவில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

இதன் ஜிடி வெர்ஷன் ரூ. 1.99 கோடிக்கும், டர்போ எஸ் தேர்விற்கு ரூ. 2.31 கோடியும், உயர்நிலை தேர்வான டர்போ எஸ் இ-ஹைபிரிட் தேர்விற்கு ரூ. 2.71 கோடியும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றின் வரிசையிலேயே புதிய அறிமுகமான பனமேரா பிளாட்டினம் எடிசன் தற்போது இணைந்திருக்கின்றது.

இதில் காஸ்மெட்டிக் மாற்றமாக ஸ்போர்ட் மெட்டாலிக் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், சேடின் ஃபினிஷ் நிறம் காற்று வெளியேற்றிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. குளாஸ் கருப்பு நிறம் விண்டோக்களுக்கும், கருப்பு நிற டெயில் பைப்புகளும் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, காரின் இருக்கைகளுக்கு பிரஷ்ட் அலுமினியம் ஃபினிஷ் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதுமாதிரியான சிறப்பு மாற்றத்தையே பனமேரா பிளாட்டினம் எடிசன் பெற்றிருக்கின்றது.

தொடர்ந்து, காரின் கவர்ச்சியான தோற்றத்திற்கு 21 இன்ச் அளவுள்ள அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெளிப்புறத்தைப் போலவே பல மடங்கு சிறப்பு வசதிகள் காருக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் நிறுவனத்தின் லோகோ பொருந்திய பாகங்களை காரின் உட்புறத்தில் பல இடங்களில் நம்மால் காண முடிகின்றது.

இத்துடன், பனமேரா பிளாட்டினம் எடிசன் என்பதைக் குறிக்கக் கூடிய சின்னங்களும் காரின் இருக்கை உள்ளிட்ட சில பகுதிகளில் நிறுவனம் வழங்கியிருக்கின்றது. புதிய பிளாட்டினம் எடிசன் இரு விதமான தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகின்றது. வழக்கமான மற்றும் உயர்நிலை லைன்களில் அது எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் பேஸிக் மாடலில் 330பிஎஸ் மற்றும் 450 என்எம் டார்க் திறன் கொண்ட 2.9 லிட்டர் வி6 ட்வின் டர்போ எஞ்ஜினும், உயர் நிலை தேர்வில் 690 பிஎஸ் மற்றும் 870 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய 4 லிட்டர் வி8 எஞ்ஜினும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எஞ்ஜினுடன் 100-kW வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரும் இதில் இடம் பெற இருக்கின்றது.

போர்ஷே நிறுவனம் மிக சமீபத்தில் டேகான் (Taycan EV) எலெக்ட்ரிக் காரை நாட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு நிறுவனம் மிக மிக உச்சபட்சமாக ரூ. 1.5 கோடி விலையை நிர்ணயித்தது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மிக அதிக திறன் வெளிப்பாடுக் கொண்ட மின்சார காராக இது அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








