எலக்ட்ரிக் மக்கன் காருக்கு முன்னதாக, 2021 போர்ஷே மக்கன் ஃபேஸ்லிஃப்ட்!! எல்லாவற்றிலும் புதியது!

2021 போர்ஷே மக்கன் ஃபேஸ்லிஃப்ட் கார் உலகளவில் படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய போர்ஷே காரை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எலக்ட்ரிக் மக்கன் காருக்கு முன்னதாக, 2021 போர்ஷே மக்கன் ஃபேஸ்லிஃப்ட்!! எல்லாவற்றிலும் புதியது!

மற்ற லக்சரி கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு போட்டியாக எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் ஈடுப்பட போர்ஷே தயாராகி வருகிறது. இந்த வகையில் இந்த நிறுவனத்தில் இருந்து துவக்கத்தில் வெளிவரவுள்ள எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றாக மக்கனும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு முன்னதாக மீண்டும் ஒருமுறை மக்கன் எரிபொருள் என்ஜின் மாடலுக்கு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.

எலக்ட்ரிக் மக்கன் காருக்கு முன்னதாக, 2021 போர்ஷே மக்கன் ஃபேஸ்லிஃப்ட்!! எல்லாவற்றிலும் புதியது!

போர்ஷேவின் சிறிய அளவிலான எஸ்யூவி காராக விளங்கும் மக்கனின் புதிய தலைமுறை மாடல் (எலக்ட்ரிக்) அடுத்த 2022ஆம் ஆண்டில் வெளியிடப்படவுள்ளது. மக்கன் ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்கள் வரிசையில் மக்கன் மட்டுமே தற்சமயம் அடங்குகின்றது.

எலக்ட்ரிக் மக்கன் காருக்கு முன்னதாக, 2021 போர்ஷே மக்கன் ஃபேஸ்லிஃப்ட்!! எல்லாவற்றிலும் புதியது!

ஏனெனில், மக்கன் டர்போ என்ஜின் உடன் வழங்கப்பட்ட மக்கன் எஸ், மக்கன் ஜிடிஎஸ் கார்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால் காரில் மிக முக்கியமான மாற்றங்கள் முன்பக்கத்தில் தான் வழங்கப்பட்டுள்ளன.

எலக்ட்ரிக் மக்கன் காருக்கு முன்னதாக, 2021 போர்ஷே மக்கன் ஃபேஸ்லிஃப்ட்!! எல்லாவற்றிலும் புதியது!

முன்பக்கத்தில் திருத்தியமைக்கப்பட்ட க்ரில் மற்றும் புதிய எல்இடி ஹெட்லேம்ப்களை பெற்றுவந்துள்ள மக்கன் ஃபேஸ்லிஃப்ட் காரில் சக்கரங்களின் டிசைனும், டிஃப்யூஸரின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளன. உட்புறத்தில் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பிற்கான திரை (10.9 இன்ச்) பெரியதாக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் மக்கன் காருக்கு முன்னதாக, 2021 போர்ஷே மக்கன் ஃபேஸ்லிஃப்ட்!! எல்லாவற்றிலும் புதியது!

அதேபோல் இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் பொத்தான்களுக்கு மாற்றாக தொடு-பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனுடன் அனலாக் கடிகாரத்தையும் நிலையான வசதியாக போர்ஷே நிறுவனம் வழங்கியுள்ளது. இவை மட்டுமின்றி என்ஜின் அமைப்புகளிலும் தயாரிப்பு நிறுவனம் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

எலக்ட்ரிக் மக்கன் காருக்கு முன்னதாக, 2021 போர்ஷே மக்கன் ஃபேஸ்லிஃப்ட்!! எல்லாவற்றிலும் புதியது!

சில மாற்றங்கள் என கூறுவதை காட்டிலும், மொத்த என்ஜின் அமைப்பும் மாற்றப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் முன்பு 3.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டது. அது தற்போது சிறிய அளவிலான 2.9 லிட்டர் வி6 என்ஜின் ஆக மாற்றப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் மக்கன் காருக்கு முன்னதாக, 2021 போர்ஷே மக்கன் ஃபேஸ்லிஃப்ட்!! எல்லாவற்றிலும் புதியது!

அளவில் சிறியதாக இருப்பினும் இந்த புதிய என்ஜின் முந்தைய என்ஜினை காட்டிலும் சற்று அதிகமாக 380 குதிரை ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் என்ஜின் மூலம் கிடைக்கும் டார்க் திறனும் அதிகரித்துள்ளது.

எலக்ட்ரிக் மக்கன் காருக்கு முன்னதாக, 2021 போர்ஷே மக்கன் ஃபேஸ்லிஃப்ட்!! எல்லாவற்றிலும் புதியது!

இதன் விளைவாக 100kmph வேகத்தை முன்பை காட்டிலும் விரைவாகவே போர்ஷே மக்கன் ஃபேஸ்லிஃப்ட் காரில் எட்டிவிடலாம். மேலும், டர்போசார்ஜ்டு 2.0 லிட்டர் என்ஜினும் மக்கன் மாடலில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டர்போ என்ஜின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் 20எச்பி அதிகமாக வெளிப்படுத்தக்கூடியதாக கொண்டுவரப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் மக்கன் காருக்கு முன்னதாக, 2021 போர்ஷே மக்கன் ஃபேஸ்லிஃப்ட்!! எல்லாவற்றிலும் புதியது!

இந்த 2.0 லி டர்போ என்ஜின் தற்போது 265எச்பி-யை வெளிப்படுத்தும். புதிய போர்ஷே மக்கனின் இந்திய அறிமுகம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போதைக்கு இல்லை. இந்தியாவில் அனைத்து கார்களையும் முழுவதுமாக தயாரித்து இறக்குமதி செய்தே போர்ஷே நிறுவனம் விற்பனை செய்கிறது.

எலக்ட்ரிக் மக்கன் காருக்கு முன்னதாக, 2021 போர்ஷே மக்கன் ஃபேஸ்லிஃப்ட்!! எல்லாவற்றிலும் புதியது!

இதனால் மக்கன் ஃபேஸ்லிஃப்ட்டை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதில் போர்ஷேவுக்கு பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இருக்காது. சிறிய அளவில் இருந்தாலும், சிறிது பெரிய தோற்றம் கொண்ட போர்ஷே கேயேனே காரை காட்டிலும் மக்கன் ஃபேஸ்லிஃப்ட்டின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #போர்ஷே #porsche
English summary
2021 Porsche Macan Facelift Official Revealed With Smaller Engine, More Power, New Features.
Story first published: Thursday, July 22, 2021, 23:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X