டாடாவிலிருந்து விலகிய பிரதாப் போஸ் மஹிந்திரா டிசைன் பிரிவு தலைவரானார்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வடிவமைப்புப் பிரிவு தலைவர் பதவியில் இருந்து விலகிய பிரதாப் போஸ் மஹிந்திரா நிறுவனத்தில் இணைந்துள்ளார். அவர் மஹிந்திரா நிறுவனத்தின் டிசைன் பிரிவின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.

டாடாவிலிருந்து விலகிய பிரதாப் போஸ் மஹிந்திரா டிசைன் பிரிவு தலைவரானார்!

டாடா கார்கள் என்றாலே வாடிக்கையாளர்கள் காத தூரம் ஓடிய நிலையில், அந்நிறுவனத்தின் பல புதிய கார் மாடல்கள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரத் துவங்கியது. கடந்த சில ஆண்டுகளாக அறிமுகம் செய்யப்பட்ட நெக்ஸான், ஹாரியர், சஃபாரி உள்ளிட்ட பல புதிய கார் மாடல்கள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

டாடாவிலிருந்து விலகிய பிரதாப் போஸ் மஹிந்திரா டிசைன் பிரிவு தலைவரானார்!

இந்த நிலையில், புதிய டாடா கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றதற்கு, டிசைன் சிறப்பாக அமைந்து வருவதும் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

டாடாவிலிருந்து விலகிய பிரதாப் போஸ் மஹிந்திரா டிசைன் பிரிவு தலைவரானார்!

புதிய டாடா கார்களின் வடிவமைப்புக்கு தனி மகத்துவம் கிடைத்துள்ளதற்கு காரணியாக, அந்நிறுவனத்தின் டிசைன்ப பிரிவு தலைவராக இருந்த பிரதாப் போஸ் மிக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார்.

டாடாவிலிருந்து விலகிய பிரதாப் போஸ் மஹிந்திரா டிசைன் பிரிவு தலைவரானார்!

இந்த நிலையில், அவர் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிசைன் பிரிவு தலைவர் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகினார். இது இந்திய ஆட்டோமொபைல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் எங்கு பணியில் சேரப் போகிறார் என்பதும் புதிராக இருந்தது.

டாடாவிலிருந்து விலகிய பிரதாப் போஸ் மஹிந்திரா டிசைன் பிரிவு தலைவரானார்!

இந்த நிலையில், எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில், நாட்டின் மற்றொரு மிகப்பெரிய உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராவில் இணைந்துள்ளார். அதாவது, மஹிந்திரா நிறுவனத்தின் டிசைன் பிரிவின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

டாடாவிலிருந்து விலகிய பிரதாப் போஸ் மஹிந்திரா டிசைன் பிரிவு தலைவரானார்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் மஹிந்திரா நிறுவனத்தின் வாகன வடிவமைப்பு மையங்கள் இனி இவரது கட்டுப்பாட்டில் செயல்படும். மேலும், இங்கிலாந்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புதிய டிசைன் மையமும் இவரது கட்டுப்பாட்டில்தான் செயல்பட உள்ளது.

டாடாவிலிருந்து விலகிய பிரதாப் போஸ் மஹிந்திரா டிசைன் பிரிவு தலைவரானார்!

வரும் ஜூன் 24ந் தேதி மஹிந்திரா நிறுவனத்தின் வாகன வடிவமைப்புப் பிரிவின் தலைவராக பிரதாப் போஸ் பதவி ஏற்க உள்ளார். மஹிந்திரா நிறுவனத்தின் வாகன மற்றும் விவசாய வாகன பிரிவு நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெஜுரிகருக்கு கீழ் பிரதாப் போஸ் பணியாற்ற உள்ளார்.

டாடாவிலிருந்து விலகிய பிரதாப் போஸ் மஹிந்திரா டிசைன் பிரிவு தலைவரானார்!

கடந்த 20 ஆண்டுகளாக வாகன வடிவமைப்புத் துறையில் பாண்டித்தியம் பெற்றவர் பிரதாப் போஸ். இதில், 14 ஆண்டுகள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். பியாஜியோ மற்றும் டெய்ம்லர் க்றைஸ்ல் நிறுவனங்களிலும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra appoints Pratap Bose to lead the brand's design organization. He is the Executive Vice President and Chief Design Officer to the newly formed Global Design organization by Mahindra Group.
Story first published: Monday, June 14, 2021, 11:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X