இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா...!! 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...!

ரத்தன் டாடா முதல் தலைமுறை டாடா சஃபாரி & இண்டிகா கார்களை 1998ல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்திய போது காட்சிப்படுத்தப்பட்ட அரிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா...!! 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...!

இந்திய சந்தையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் கொரோனா வைரஸுக்கு மத்தியிலும் விற்பனையில் குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றத்தை கண்டு வருகிறது.

இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா...!! 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...!

கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 27,225 கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் 12,340 டாடா கார்களே விற்கப்பட்டு இருந்தன.

இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா...!! 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...!

ஆரம்ப காலக்கட்டத்தில் மற்ற நிறுவனங்களை போல் டாடா மோட்டார்ஸும் பல இன்னல்களை கடந்த வந்துள்ளது. கமர்ஷியல் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துவந்த டாடா நிறுவனம் சியாரா கார் மூலம் பயணிகள் கார்கள் பிரிவில் நுழைந்தது.

இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா...!! 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...!

1998 ஆட்டோ எக்ஸ்போவில் சஃபாரி எஸ்யூவி மற்றும் இண்டிகா ஹேட்ச்பேக் என்ற இரு மாடல்கள் டாடா நிறுவனத்தின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது ரத்தன் டாடா முன்னிலையில் இந்த கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட அரிய வீடியோ வைல்ட் ஃப்லிம்ஸ் இந்தியா என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Image Courtesy: WildFilmsIndia

நீல நிறத்தில் காட்சி தரும் இண்டிகா காரை அறிமுகப்படுத்தி ரத்தன் டாடா ஆற்றிய சொற்பொழிவுகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. சிவப்பு மற்றும் பழுப்பு நிறங்களில் ஆஃப்-ரோட்டிற்கான பண்புகளுடன் சுழன்றபடி சஃபாரி காட்சி தருகிறது.

இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா...!! 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...!

இண்டிகா அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு வாரங்களுக்குள், அந்த காருக்கு சுமார் 1,15,000 முன்பதிவுகள் குவிந்தன. இவ்வாறு அதிகப்படியான வரவேற்பு ஆரம்பத்தில் இருந்தே கிடைக்க துவங்கியதால் அடுத்த இரண்டு வருடங்களில் அதிகம் விற்பனையாகும் காராக இண்டிகா உருவெடுத்தது.

இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா...!! 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...!

டாடா மோட்டாஸின் இந்த பிரபலமான ஹேட்ச்பேக் காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின்கள் தேர்வுகளாக 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்பட்டன.

இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா...!! 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...!

டாடா இண்டிகாவின் ஆரம்ப எக்ஸ்ஷோம் விலை ரூ.2.59 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. முழு வசதிகளையும் பெற்ற டாப் டிஎல்எக்ஸ் வேரியண்ட்டின் விலை ரூ.3.9 லட்சங்களாக இருந்தது.

இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா...!! 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...!

நான்கு ஜன்னல்களுக்கும் பவர் கண்ணாடிகளை இண்டிகாவின் மூலம் டாடா நிறுவனம் ஹேட்ச்பேக் பிரிவில் அறிமுகப்படுத்தியது. உண்மை சொல்ல வேண்டுமென்றால், இந்த அம்சம் தான் இண்டிகாவின் அடையாளமாக அந்த சமயத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் விளங்கியது.

இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா...!! 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...!

இந்த வசதி மட்டுமின்றி ரிமோட் உடன் செண்ட்ரல் லாக்கிங், பின்பக்க கண்ணாடிக்கும் வைபர், சிறு சிறு பொருட்களை வைப்பதற்கு பார்சல் அலமாரி, டேஸ்போர்டின் மையத்தில் டிஜிட்டல் கடிகாரம், டச்சோமீட்டர் உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் டாடா வழங்கியது.

இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா...!! 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...!

பெரிய தோற்றம் கொண்ட சஃபாரி எஸ்யூவி காரில் அதிகப்பட்சமாக 90 எச்பி மற்றும் 186 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டது. விற்பனையில் இருந்த சமயத்தில் சஃபாரி கொடுத்ததை போல் வேறெந்த காரும் சாலையில் ஒரு கம்பீர தோற்றத்தை கொடுக்கவில்லை என்பது உண்மையே.

இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா...!! 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...!

சஃபாரியின் ஆரம்ப விலை ரூ.8.25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த காரை விளம்பரப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட பழைய தொலைக்காட்சி கமர்ஷியல் வீடியோ இப்போதும் பலருக்கு நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இண்டிகாவின் விற்பனை 2018ல் சில காரணங்களினால் நிறுத்தப்பட்டது. சஃபாரி ஸ்ட்ரோம் கார்களின் விற்பனை புதிய மாசு உமிழ்வு விதிமுறைகளின் காரணமாக 2019ல் நிறுத்தப்பட்டது. இருப்பினும் மக்களிடையே பிரபலமான சஃபாரி பெயர்பலகையை கைவிடுவதாக இல்லாமல் முற்றிலும் புதிய சஃபாரி காரை சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

Most Read Articles

English summary
Rare video of Ratan Tata launching the Tata Safari & Indica at Auto Expo 1998.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X