மைக்ரோ-எஸ்யூவி காரை வடிவமைப்பதில் இத்தனை சிக்கல்களா!! சந்தையில் கவனத்தை பெறாததற்கு என்ன காரணம்?

வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து கார்களின் டிசைனும், வடிவமும், தொழிற்நுட்பங்களும் மாறுப்படுவது வழக்கமான ஒன்று. தற்சமயம் 10 விதமான உடற் அமைப்புகளில் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மைக்ரோ-எஸ்யூவி காரை வடிவமைப்பதில் இத்தனை சிக்கல்களா!! சந்தையில் கவனத்தை பெறாததற்கு என்ன காரணம்?

இதில் தற்போதைய வாடிக்கையாளர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கக்கூடிய கார் ஸ்டைலாக எஸ்யூவி மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக அளவில் மிகவும் சிறிய மைக்ரோ எஸ்யூவி கார்கள் தான் எதிர்காலத்தில் அதிகளவில் சாலையில் உலா வருவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோ-எஸ்யூவி காரை வடிவமைப்பதில் இத்தனை சிக்கல்களா!! சந்தையில் கவனத்தை பெறாததற்கு என்ன காரணம்?

மைக்ரோ எஸ்யூவி என்றால் என்ன? இதற்கு எதிர்காலம் உள்ளதா என்பது உள்ளிட்ட விபரங்களை தான் இனி இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். ஏற்கனவே கூறியது போல் இவை காம்பெக்ட் எஸ்யூவி கார்களை காட்டிலும் அளவில் சிறியது.

மைக்ரோ-எஸ்யூவி காரை வடிவமைப்பதில் இத்தனை சிக்கல்களா!! சந்தையில் கவனத்தை பெறாததற்கு என்ன காரணம்?

எந்தவொரு பொருளையும் அளவில் சிறியதாக செய்வது சற்று சிரமமான காரியம் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். அளவில் சிறியதான காரின் சிக்கலான ஸ்டைலினை வடிவமைப்பதில் இன்னும் நம் நாட்டில் குறைவானவர்களே உள்ளனர் என்பதை ஒத்து கொண்டாக வேண்டும்.

மைக்ரோ-எஸ்யூவி காரை வடிவமைப்பதில் இத்தனை சிக்கல்களா!! சந்தையில் கவனத்தை பெறாததற்கு என்ன காரணம்?

மைக்ரோ எஸ்யூவி காரை வடிவமைப்பதில் அப்படி என்ன கஷ்டம் உள்ளது என நீங்கள் கேட்கலாம். அதன் கேபின், இதனை பயிற்சி பெறாதவர்கள் வடிவமைத்தால் சிறுவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். பெரியவர்கள் குதித்து விளையாடும் அளவிற்கு தரமான கேபினை மைக்ரோ-எஸ்யூவி காரில் வடிவமைப்பது உண்மையில் கடினம். ஏனெனில் இந்த இடத்தில் உட்புற பரப்பு முக்கிய பங்காற்றுகிறது.

மைக்ரோ-எஸ்யூவி காரை வடிவமைப்பதில் இத்தனை சிக்கல்களா!! சந்தையில் கவனத்தை பெறாததற்கு என்ன காரணம்?

அதேபோல் காரின் வெளிப்புற பேனல்களை வடிவமைப்பதும் சற்று சிரமமானதே. இந்தியர்கள் கார்களின் ஸ்டைலை உன்னிப்பாக கவனிக்கக்கூடியவர்கள். ஆதலால் மைக்ரோ-எஸ்யூவி காரின் வடிவமைப்பில் சிறு தவறு கூட செய்துவிடக்கூடாது என்பதில் தயாரிப்பு நிறுவனங்கள் உறுதியாக இருக்கின்றன.

மைக்ரோ-எஸ்யூவி காரை வடிவமைப்பதில் இத்தனை சிக்கல்களா!! சந்தையில் கவனத்தை பெறாததற்கு என்ன காரணம்?

சந்தை நிலவரப்படி பார்த்தோமேயானால், இனி வரும் மைக்ரோ எஸ்யூவி கார்கள் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டும் மேனுவல் & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்படலாம். அளவில் சிறியது என்பதால் இறுக்கமான உணர்வு வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக நன்கு விசாலமான கேபினை வழங்க தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சிக்கும் என்பது மட்டும் உறுதி.

மைக்ரோ-எஸ்யூவி காரை வடிவமைப்பதில் இத்தனை சிக்கல்களா!! சந்தையில் கவனத்தை பெறாததற்கு என்ன காரணம்?

அதேபோல், ஆட்டோமேட்டிக் ஏசி, தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றிலும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் எந்த குறையையும் வைக்க வாய்ப்பில்லை. மைக்ரோ-எஸ்யூவி கார்களை பொறுத்தவரையில், விலை தான் மிக முக்கியமாகும்.

மைக்ரோ-எஸ்யூவி காரை வடிவமைப்பதில் இத்தனை சிக்கல்களா!! சந்தையில் கவனத்தை பெறாததற்கு என்ன காரணம்?

ஏனெனில் மினி சைஸில் லக்சரி காரையோ அல்லது ஸ்போர்ட்ஸ் ரக காரையோ வடிவமைப்பது சரியானதாக இருக்காது. மினி கூப்பர் கார்கள் இதில் வெற்றியடைந்திருப்பது என்னவோ உண்மை. ஆனால் சற்று மிகுந்த விலையுடனான அத்தகைய கார்கள் நம் இந்திய சந்தையில் விற்பனையாகுவது கடினம்.

மைக்ரோ-எஸ்யூவி காரை வடிவமைப்பதில் இத்தனை சிக்கல்களா!! சந்தையில் கவனத்தை பெறாததற்கு என்ன காரணம்?

மிடில்-க்ளாஸும், அதற்கும் கீழ் உள்ளவர்களும் தான் 4,5 பேர் அமர்ந்து சென்றாலே போதும் என எண்ணுகின்றனர். ஆதலால் அவர்களுக்கு ஏற்ற பட்ஜெட் விலையில் தான் மைக்ரோ எஸ்யூவி கார்களை கொண்டுவர வேண்டிய நிர்பந்தம் உள்ளது. அதுமட்டுமில்லாமல், முதல்முறையாக கார் வாங்குபவர்களில் பெரும்பாலானோர் விலையை தான் கவனிக்கின்றனர்.

மைக்ரோ-எஸ்யூவி காரை வடிவமைப்பதில் இத்தனை சிக்கல்களா!! சந்தையில் கவனத்தை பெறாததற்கு என்ன காரணம்?

எரிபொருள்களின் விலை ஒருபக்கம் விண்ணை தொடுகிறது. ஆதலால் வாடிக்கையாளர்களையும் நாம் குறை கூற முடியாது. எனவே குறைந்த விலையில் ஸ்டைலான மைக்ரோ-எஸ்யூவி காரை தரும் நிறுவனங்களே இந்த பிரிவில் விற்பனையை அதிகளவில் அறுவடை செய்யும்.

மைக்ரோ-எஸ்யூவி காரை வடிவமைப்பதில் இத்தனை சிக்கல்களா!! சந்தையில் கவனத்தை பெறாததற்கு என்ன காரணம்?

வாகனத்தின் அளவு சிறியதாகினால் அது செல்லும் தூரம் அதிகரிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். அதேபோல் அளவில் சிறியது என்பதால் மைக்ரோ-எஸ்யூவி கார்களுக்கான பராமரிப்பு செலவு வெகு குறைவாகவே இருக்கும். தற்போதைய காலக்கட்டத்தில் இருந்து பார்த்தால் மைக்ரோ-எஸ்யூவி கார்கள் நிச்சயம் பிரபலமடையும் என்பதுபோல் தான் உள்ளது.

மைக்ரோ-எஸ்யூவி காரை வடிவமைப்பதில் இத்தனை சிக்கல்களா!! சந்தையில் கவனத்தை பெறாததற்கு என்ன காரணம்?

எதிர்காலத்திலும் வரவேற்பை பெற வேண்டுமென்றால் வாடிக்கையாளர்களின் இரசனைக்கு ஏற்ப அவ்வப்போது மைக்ரோ-எஸ்யூவி கார்களின் வடிவமைப்பில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இந்திய சந்தையில் மஹிந்திரா கேயூவி100 தோல்வியை தழுவியது. மற்ற அனைத்து கார்களையும் அதிகளவில் விற்பனை செய்யக்கூடிய மாருதி சுஸுகி நிறுவனமே இக்னிஸ் என்ற அதன் மைக்ரோ-எஸ்யூவி காரை விற்க முடியாமல் தவிக்கிறது.

மைக்ரோ-எஸ்யூவி காரை வடிவமைப்பதில் இத்தனை சிக்கல்களா!! சந்தையில் கவனத்தை பெறாததற்கு என்ன காரணம்?

இதில் இருந்து மைக்ரோ-எஸ்யூவி கார்களுக்கு ஏற்ப நம் நாட்டு சந்தை இன்னும் மாறவில்லை என்பது தெளிவாகிறது. ஹூண்டாய் காஸ்பர், டாடா பஞ்ச் என மற்ற முன்னணி நிறுவனங்களின் மைக்ரோ-எஸ்யூவி மாடல்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. என்ன நடக்கவுள்ளது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles

மேலும்... #எஸ்யூவி #suv
English summary
Reason for the name for the micro-SUV, Problems in designing.
Story first published: Thursday, September 9, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X