மாருதி சியாஸின் அடிப்படையில் உருவாகும் டொயோட்டா காரின் பெயர் இதுதானா!! கார் எப்படி இருக்கும்?

மாருதி சுஸுகி சியாஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்படும் டொயோட்டா கார், பெல்டா என்ற பெயரில் வெளிவரவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மாருதி சியாஸின் அடிப்படையில் உருவாகும் டொயோட்டா காரின் பெயர் இதுதானா!! கார் எப்படி இருக்கும்?

மாருதி சுஸுகி சியாஸ் மற்றும் எர்டிகா கார்களின் ரீபேட்ஜ்டு வெர்சன்களை உருவாக்கும் பணிகளில் தற்சமயம் ஈடுப்பட்டு வருவதாக டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் தெரிவித்து இருந்தது.

மாருதி சியாஸின் அடிப்படையில் உருவாகும் டொயோட்டா காரின் பெயர் இதுதானா!! கார் எப்படி இருக்கும்?

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி பார்க்கும்போது, சியாஸின் அடிப்படையில் உருவாகும் டொயோட்டா காருக்கு பெல்டா என பெயர் வைக்கப்படலாம். பெல்டோ என்கிற பெயரில் தற்சமயம் செடான் கார் ஒன்றையும் ஜப்பானிய சந்தையில் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

மாருதி சியாஸின் அடிப்படையில் உருவாகும் டொயோட்டா காரின் பெயர் இதுதானா!! கார் எப்படி இருக்கும்?

மாருதி சியாஸில் இருந்து வடிவமைக்கப்பட்டாலும், டொயோட்டா பெல்டா சற்று வித்தியாசமான தோற்றத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முன்பகுதியில் சில மாறுப்பாடுகளை காணலாம்.

மாருதி சியாஸின் அடிப்படையில் உருவாகும் டொயோட்டா காரின் பெயர் இதுதானா!! கார் எப்படி இருக்கும்?

அதாவது டொயோட்டா முத்திரை உடன் முன்பக்க பம்பரின் வடிவம் திருத்தியமைக்கப்படலாம். ஆனால் உட்புறத்தில் இந்த இரு செடான் கார்களுக்கும் இடையே பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இருக்க வாய்ப்பில்லை என தகவல்கள் கூறுகின்றன.

மாருதி சியாஸின் அடிப்படையில் உருவாகும் டொயோட்டா காரின் பெயர் இதுதானா!! கார் எப்படி இருக்கும்?

சியாஸில் மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் தான் டொயோட்டா பெல்டாவும் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. அதிகப்பட்சமாக 103 பிஎச்பி மற்றும் 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் யூனிட் தேர்வுகளாக வழங்கப்படலாம்.

மாருதி சியாஸின் அடிப்படையில் உருவாகும் டொயோட்டா காரின் பெயர் இதுதானா!! கார் எப்படி இருக்கும்?

டொயோட்டா பெல்டாவில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லேம்ப்கள், அலாய் சக்கரங்கள், க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட ஜன்னல் லைன் உள்ளிட்டவற்றை நிச்சயமாக எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

மாருதி சியாஸின் அடிப்படையில் உருவாகும் டொயோட்டா காரின் பெயர் இதுதானா!! கார் எப்படி இருக்கும்?

சியாஸின் உட்புறத்தில் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வயர் இல்லா ஸ்மார்ட்போன் இணைப்புகளை ஏற்கக்கூடிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செமி-டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

மாருதி சியாஸின் அடிப்படையில் உருவாகும் டொயோட்டா காரின் பெயர் இதுதானா!! கார் எப்படி இருக்கும்?

சியாஸின் செடான் பிரிவில் டொயோட்டா நிறுவனத்தில் இருந்து தற்சமயம் யாரிஸ் மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய ரீபேட்ஜ்டு வெர்சன் கொண்டுவரப்பட்டால் தற்போதைய யாரிஸின் விற்பனை நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புள்ளது.

மாருதி சியாஸின் அடிப்படையில் உருவாகும் டொயோட்டா காரின் பெயர் இதுதானா!! கார் எப்படி இருக்கும்?

இந்திய சந்தையில் டொயோட்டா பிராண்டிலும் விற்பனை செய்யப்பட உள்ள மூன்றாவது சுஸுகி காராக சியாஸ் விளங்கவுள்ளது. ஏனெனில் இதற்கு முன்பு பலேனோவின் டொயோட்டா ரீபேட்ஜ்டு வெர்சனாக க்ளான்ஸாவும், விட்டாரா பிரெஸ்ஸாவில் இருந்து அர்பன் க்ரூஸர் காம்பெக்ட் எஸ்யூவி காரும் கொண்டுவரப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 20, 2021, 11:45 [IST]
English summary
Rebadged Maruti Suzuki Ciaz could be called the Toyota Belta.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+