ஊரடங்கில் இனி கடற்கரையில் சுற்ற முடியாது... போலீஸாரின் ரோந்து பணிக்கு 10 போலரிஸ் வாகனங்கள்!!

ரோந்து பணிக்காக மும்பை போலீஸார் அனைத்து விதமான சாலைகளிலும் பயன்படுத்தக்கூடிய 10 போலரிஸ் வாகனங்களை வாங்கியுள்ளனர். இந்த அனைத்து-சாலை வாகனங்கள் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஊரடங்கில் இனி கடற்கரையில் சுற்ற முடியாது... போலீஸாரின் ரோந்து பணிக்கு 10 போலரிஸ் வாகனங்கள்!!

மும்பையில் அரபி கடலை ஒட்டிய பகுதி தான் சோவ்பட்டி. இதன் பெரும்பான்மையான பகுதி கடற்கரையினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்படுவதற்காகவே மும்பை போலீஸார் இவ்வாறான வாகனங்களை வாங்கியுள்ளனர்.

ஊரடங்கில் இனி கடற்கரையில் சுற்ற முடியாது... போலீஸாரின் ரோந்து பணிக்கு 10 போலரிஸ் வாகனங்கள்!!

ஏனெனில் அனைத்து விதமான சாலைகளுக்கு ஏற்ற வாகனம் இது என்பதால், மணல் நிறைந்த கடற்கரையிலும் இதனை ஓட்டி செல்ல முடியும். இந்த 10 போலரிஸ் ஆல்-டெர்ரன் வாகனங்களை மஹராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கொடியசைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளார்.

ஊரடங்கில் இனி கடற்கரையில் சுற்ற முடியாது... போலீஸாரின் ரோந்து பணிக்கு 10 போலரிஸ் வாகனங்கள்!!

இந்த நிகழ்ச்சியில் மஹாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவர், உள்துறை அமைச்சர் திலிப் வால்ஸ்-பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மூலமாக வழங்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள் மும்பையின் கடற்கரை பகுதிகளில் ரோந்து செல்வதற்கு பயன்படுத்தப்படும் என்று மும்பை போலீஸ் கமிஷ்னர் ஹெமந்த் நக்ரேல் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கில் இனி கடற்கரையில் சுற்ற முடியாது... போலீஸாரின் ரோந்து பணிக்கு 10 போலரிஸ் வாகனங்கள்!!

அனைத்து விதமான சாலைகளிலும் இந்த வாகனத்தை இயக்கி செல்ல முடியும் என்பதால், கடற்கரையில் ரோந்து மட்டுமில்லாமல் அவசர போக்குவரத்திற்கும் இந்த வாகனங்களை பயன்படுத்த முடியும். இந்த வாகனங்களை தயாரித்த போலரிஸ் மோட்டார், அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமாகும்.

ஊரடங்கில் இனி கடற்கரையில் சுற்ற முடியாது... போலீஸாரின் ரோந்து பணிக்கு 10 போலரிஸ் வாகனங்கள்!!

இந்த அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு தற்போது மும்பை போலீஸாரின் வசம் சென்றுள்ள இந்த ஆல்-டெர்ரன் மாடலின் பெயர், 570 இ.எஃப்.ஐ ரேஞ்சர் ஆகும். இதில் பொருத்தப்படுகின்ற 570சிசி, 4-ஸ்ட்ரோக், டிஒஎச்சி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 44 எச்பி வரையில் வெளிப்படுத்தக்கூடியது.

ஊரடங்கில் இனி கடற்கரையில் சுற்ற முடியாது... போலீஸாரின் ரோந்து பணிக்கு 10 போலரிஸ் வாகனங்கள்!!

10 இன்ச்களில் க்ரவுண்ட் க்ளியரென்ஸை கொண்டுள்ள இந்த போலரிஸ் வாகனத்தில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2,667மிமீ ஆக உள்ளது. இந்த வாகனத்தில் ஒரே நேரத்தில் அதிகப்பட்சமாக 4 பேர் வரையில் பயணிக்க முடியும்.

ஊரடங்கில் இனி கடற்கரையில் சுற்ற முடியாது... போலீஸாரின் ரோந்து பணிக்கு 10 போலரிஸ் வாகனங்கள்!!

இவ்வாறான வாகனங்களில் உள்ளே நுழைவதற்கு ஸ்டேரிங் சக்கரம் சற்று தடையாக இருக்கும். ஆனால் இந்த அனைத்து-சாலை வாகனத்தில் ஸ்டேரிங் சக்கரத்தை தயாரிப்பு நிறுவனம் சற்று சாய்வாகவே பொருத்தியுள்ளது.

ஊரடங்கில் இனி கடற்கரையில் சுற்ற முடியாது... போலீஸாரின் ரோந்து பணிக்கு 10 போலரிஸ் வாகனங்கள்!!

ஓட்டுனர் உதவி அம்சங்களாக, 2-இன்ச் எல்சிடி ஒட்டுனர் தகவல் மையத்துடன் சிங்கிள் அனலாக் டயல், ஸ்பீடோமீட்டர், டச்சோமீட்டர், ஓடோமீட்டர், கியர் இண்டிகேட்டர், எரிபொருள் அளவு காட்டும் அமைப்பு, சீட் பெல்ட் அணியாததை நினைவூட்டும் விளக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai Police gets 10 Polaris all-terrain vehicles to patrol beaches.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X