ரொம்ப பாதுகாப்பான காருக்கு சலுகை அறிவிப்பு... எவ்ளோ தெரிஞ்சா உடனே புக் பண்ண ஆசைப்படுவீங்க... செம்ம ஆஃபர்!

தனது ரொம்ப பாதுகாப்பான கார் மாடல் உட்பட நான்கு கார்களுக்கு ரெனால்ட் நிறுவனம் சிறப்பு ஆஃபரை அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ரொம்ப பாதுகாப்பான காருக்கு சலுகை அறிவிப்பு... எவ்ளோ தெரிஞ்சா உடனே புக் பண்ண ஆசைப்படுவீங்க... செம்ம ஆஃபர்!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ரெனால்ட் அதன் நான்கு முக்கிய தயாரிப்புகளுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதில், அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார் மாடலான ட்ரைபர் எம்பிவியும் ஒன்றாகும். இது ஓர் நான்கு நட்சத்திர பாதுகாப்பு திறன் கொண்ட எம்பிவியாகும்.

ரொம்ப பாதுகாப்பான காருக்கு சலுகை அறிவிப்பு... எவ்ளோ தெரிஞ்சா உடனே புக் பண்ண ஆசைப்படுவீங்க... செம்ம ஆஃபர்!

குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய பாதுகாப்புகுறித்த (மோதல் பரிசோதனையில்) ஆய்வில் இந்த கார் ஐந்திற்கு நான்கு நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றது. இது பெரியவர்களுக்கான பாதுகாப்பில் ரெனால்ட் ட்ரைபர் பெற்ற மதிப்பாகும். இந்த கார் சிறியவர்களின் பாதுகாப்பு குறித்து செய்யப்பட்ட ஆய்வில் மூன்று நட்சத்திர ரேட்டிங்கை பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ரொம்ப பாதுகாப்பான காருக்கு சலுகை அறிவிப்பு... எவ்ளோ தெரிஞ்சா உடனே புக் பண்ண ஆசைப்படுவீங்க... செம்ம ஆஃபர்!

இத்தகைய ஓர் சிறப்பு வாய்ந்த கார் மாடலுக்கே ரெனால்ட் ஆஃபரை அறிவித்திருக்கின்றது. ரெனால்டின் இந்த செயல் இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் எம்பிவி காருடன் சேர்த்து மற்ற புகழ்மிக்க கார் மாடல்களான டஸ்டர், கைகர் மற்றும் க்விட் ஆகிய கார் மாடல்களுக்கும் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

ரொம்ப பாதுகாப்பான காருக்கு சலுகை அறிவிப்பு... எவ்ளோ தெரிஞ்சா உடனே புக் பண்ண ஆசைப்படுவீங்க... செம்ம ஆஃபர்!

அது என்ன சலுகை என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். ரெனால்ட் நிறுவனம் இந்த சிறப்பு சலுகையை, விற்பனையை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் அறிவித்துள்ளது. இத்துடன், கடந்த கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இழந்த விற்பனை இலக்கை மீண்டும் எட்டும் நோக்கிலும் அறிவித்திருக்கின்றது.

ரொம்ப பாதுகாப்பான காருக்கு சலுகை அறிவிப்பு... எவ்ளோ தெரிஞ்சா உடனே புக் பண்ண ஆசைப்படுவீங்க... செம்ம ஆஃபர்!

சலுகைகள் பற்றிய விபரம்:

டஸ்டர் எஸ்யூவி:

ரெனால்ட் டஸ்டர் எஸ்யூவி இந்தியாவில் ரூ. 9.86 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காருக்கே மிக உச்சபட்சமாக ரூ. 90 ஆயிரம் வரை சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், இந்த சலுகை மஹாராஷ்டிரா, குஜராத், கோவா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ரொம்ப பாதுகாப்பான காருக்கு சலுகை அறிவிப்பு... எவ்ளோ தெரிஞ்சா உடனே புக் பண்ண ஆசைப்படுவீங்க... செம்ம ஆஃபர்!

இந்த மாநிலத்தைச் சேர்ந்த கார்பரேட் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சிறப்பு தள்ளுபடியாக ரூ. 30 ஆயிரம் வரை ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், எக்ஸ்சேஞ்ஜ் பலனாக ரூ. 10,000 சிறப்பு சலுகை வழங்கப்பட இருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

ரொம்ப பாதுகாப்பான காருக்கு சலுகை அறிவிப்பு... எவ்ளோ தெரிஞ்சா உடனே புக் பண்ண ஆசைப்படுவீங்க... செம்ம ஆஃபர்!

இந்த சிறப்பு சலுகை மேலே கூறப்பட்டு நான்கு மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதேபோன்று சிறப்பு சலுகை இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், மஹாராஷ்டிரா, குஜராத், கோவா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை தவிர நாட்டின் பிற மாநிலத்தவர்களுக்கு ரூ. 65 ஆயிரம் வரை சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேலே கூறப்பட்ட மாநிலங்களைக் காட்டிலும் 25 ரூபாய் குறைவாகும்.

ரொம்ப பாதுகாப்பான காருக்கு சலுகை அறிவிப்பு... எவ்ளோ தெரிஞ்சா உடனே புக் பண்ண ஆசைப்படுவீங்க... செம்ம ஆஃபர்!

இதைத்தவிர மற்ற ஆஃபர்கள் அனைத்தும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. அதாவது, மஹாராஷ்டிரா, குஜராத், கோவா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் கார்பரேட் மற்றும் கிராமப்புற வாசிகளுக்கு அறிவிக்கப்பட்டதைப் போலவே நாட்டின் பிற மாநில கார்பரேட் மற்றும் கிராமப்புற வாசிகளுக்கு ரூ. 30 ஆயிரம் ஸ்பெஷல் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொம்ப பாதுகாப்பான காருக்கு சலுகை அறிவிப்பு... எவ்ளோ தெரிஞ்சா உடனே புக் பண்ண ஆசைப்படுவீங்க... செம்ம ஆஃபர்!

இத்துடன் ஃபீரிடம் ஆஃபர் என ரூ. 5 ஆயிரத்திற்கான பண பலன் வழங்க இருப்பதாக ரெனால்ட் அறிவித்துள்ளது. தொடர்ந்து, ஸ்கிராப் அல்லது எக்ஸ்சேஞ்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் கூடுதல் சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொம்ப பாதுகாப்பான காருக்கு சலுகை அறிவிப்பு... எவ்ளோ தெரிஞ்சா உடனே புக் பண்ண ஆசைப்படுவீங்க... செம்ம ஆஃபர்!

கைகர் காருக்கான ஆஃபர்:

ரெனால்ட் நிறுவனம் அதன் டஸ்டர் காருக்கு அறிவித்திருப்பதைப் போலவே கைகர் காருக்கும் பிரித்து பிரித்து ஆஃபரை அறிவித்திருக்கின்றது. அந்தவகையில், நாட்டின் மலிவு விலை கார்களில் ஒன்றான கைகர் காருக்கு சிறப்பு லாயல்டி பலன், ஐந்து வருடங்கள் அல்லது 1 லட்சம் கூட்டப்பட்ட வாரண்டி, இப்போது வாங்கும் காருக்கு 2022ம் ஆண்டில் பணத்தைச் செலுத்தும் திட்டம் மற்றும் கார்பரேட்-கிராமப்புற வாசிகளுக்கான சிறப்பு தள்ளுபடி ஆகியவற்றை நிறுவனம் அறிவித்துள்ளது.

ரொம்ப பாதுகாப்பான காருக்கு சலுகை அறிவிப்பு... எவ்ளோ தெரிஞ்சா உடனே புக் பண்ண ஆசைப்படுவீங்க... செம்ம ஆஃபர்!

கார்பரேட்-கிராமப்புற வாசிகளுக்கான சிறப்பு தள்ளுபடியாக ரூ. 10 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மஹாராஷ்டிரா, குஜராத், கோவா மற்றும் கேரளா ஆகிய மாநில வாசிகளுக்கான ஆஃபராகும். இதேபோன்று, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு சிறப்பு லாயல்டி, 2022ம் ஆண்டில் இருந்து கடனை திரும்பி செலுத்தும் திட்டம் மற்றும் கார்பரேட்-கிராமவாசிகளுக்கான ஆஃபர் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொம்ப பாதுகாப்பான காருக்கு சலுகை அறிவிப்பு... எவ்ளோ தெரிஞ்சா உடனே புக் பண்ண ஆசைப்படுவீங்க... செம்ம ஆஃபர்!

ரெனால்ட் கைகர் கார் இந்தியாவில் ரூ. 5.64 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. நாட்டின் மலிவு மற்றும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த காருக்கு சிறப்பு சலுகை அறிவித்திருப்பதும் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரொம்ப பாதுகாப்பான காருக்கு சலுகை அறிவிப்பு... எவ்ளோ தெரிஞ்சா உடனே புக் பண்ண ஆசைப்படுவீங்க... செம்ம ஆஃபர்!

ரெனால்ட் க்விட்:

நாட்டின் அதிகம் விற்பனையாகக் கூடிய ஹேட்ச்பேக் கார்களில் க்விட் மாடலும் ஒன்று. இந்த காருக்கும் பல்வேறு சிறப்பு சலுகைகளை ரெனால்ட் அறிவித்திருக்கின்றது. அந்தவகையில், மஹாராஷ்டிரா, குஜராத், கோவா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சில தனித்துவமான ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரொம்ப பாதுகாப்பான காருக்கு சலுகை அறிவிப்பு... எவ்ளோ தெரிஞ்சா உடனே புக் பண்ண ஆசைப்படுவீங்க... செம்ம ஆஃபர்!

ரூ. 50 ஆயிரம் பண பலன், கூடுதல் சிறப்பு ஆஃபராக 20 வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குதல், 2022ம் ஆண்டில் இருந்து கடனை திரும்பி செலுத்துதல், எக்ஸ்சேஞ்ஜ் மற்றும் ஸ்கிராப் செய்வோருக்கு ரூ. 10 ஆயிரத்திற்கான சிறப்பு பண பலன் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

ரொம்ப பாதுகாப்பான காருக்கு சலுகை அறிவிப்பு... எவ்ளோ தெரிஞ்சா உடனே புக் பண்ண ஆசைப்படுவீங்க... செம்ம ஆஃபர்!

இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு ரூ. 40 ஆயிரம் வரை ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், தேர்வு செய்யப்பட்ட 20 வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் சிறப்பு சலுகை, 2022ல் இருந்து கடனை திருப்பி செலுத்துதல், ரூ. 5 ஆயிரம் ஃபீரிடம் ஆஃபர், ரூ. 10 ஆயிரம் எக்ஸ்சேஞ்ஜ் ஆஃபர் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

ரொம்ப பாதுகாப்பான காருக்கு சலுகை அறிவிப்பு... எவ்ளோ தெரிஞ்சா உடனே புக் பண்ண ஆசைப்படுவீங்க... செம்ம ஆஃபர்!

ரெனால்ட் ட்ரைபர்:

ரெனால்ட் நிறுவனத்தின் மிகவும் பாதுகாப்பான காராக ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி இருக்கின்றது. இந்த காருக்கு மிக அதிகளவில் சிறப்பு சலுகைகளை நிறுவனம் அறிவித்திருக்கின்றது. ரூ. 70 ஆயிரம் வரை சிறப்பு தள்ளுபடி, கார்பரேட் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை தள்ளுபடி, 6 மாதங்கள் கழித்து பணத்தை திரும்பி செலுத்தும் திட்டம், எக்ஸ்சேஞ்ஜ் ஆஃபர் என இந்த காருக்கும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

மேலே கூறப்பட்ட அனைத்து ஆஃபரும் ஆகஸ்டு மாதத்திற்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு தள்ளுபடிகளாகும்.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Announced August 2021 Discounts For Duster, Kiger, Kwid and Triber. Read In Tamil.
Story first published: Saturday, August 7, 2021, 19:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X