ரெனோ டீலரிலேயே பழைய கார்களை அழிக்கக் கொடுக்கலாம்... டூவீலரை கொடுப்பவர்களுக்கும் அதிரடி சலுகை!

பழைய காரை அழிப்பதற்கான நடைமுறைகளை தனது டீலர் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை ரெனோ அறிவித்துள்ளது. டூவீலர்களை அழிப்பதற்கான நடைமுறைகளையும் மேற்கொள்ள இருப்பதாகவும் ரெனோ தெரிவித்துள்ளது.

ரெனோ டீலரிலேயே பழைய கார்களை அழிக்கக் கொடுக்கலாம்... டூவீலரை கொடுப்பவர்களுக்கும் அதிரடி சலுகை!

அதிக மாசு உமிழ்வு மற்றும் சாலை விபத்துக்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள தகுதியற்ற பழைய வாகனங்களை ஒழித்துக் கட்டுவதற்கான திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. மேலும், பழைய வாகனங்களை அழிக்கக் கொடுக்கும் உரிமையாளர்கள் புதிய வாகனங்கள் வாங்கும்போது சேமிப்புச் சலுகைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளது.

ரெனோ டீலரிலேயே பழைய கார்களை அழிக்கக் கொடுக்கலாம்... டூவீலரை கொடுப்பவர்களுக்கும் அதிரடி சலுகை!

இந்த நிலையில், பழைய கார் அழிப்புத் திட்டத்தை வாகன உரிமையாளர்கள் எளிதாக பெறுவதற்கான நடைமுறைகளை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது டீலர்கள் மூலமாக வழங்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளன. மஹிந்திரா நிறுவனம் தனது டீலர் மூலமாக பழைய கார் அழிப்புத் திட்டத்தை எளிதாக வழங்க இருப்பதாக அறிவித்தது.

ரெனோ டீலரிலேயே பழைய கார்களை அழிக்கக் கொடுக்கலாம்... டூவீலரை கொடுப்பவர்களுக்கும் அதிரடி சலுகை!

இதைத்தொடர்ந்து, ரெனோ கார் நிறுவனமும் தனது டீலர்கள் மூலமாக பழைய கார் அழிப்புத் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. எந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் பழைய காராக இருந்தாலும், அழிப்பதற்கான நடைமுறைகளுக்கான சேவையை வழங்குவதாக ரெனோ தெரிவித்துள்ளது.

ரெனோ டீலரிலேயே பழைய கார்களை அழிக்கக் கொடுக்கலாம்... டூவீலரை கொடுப்பவர்களுக்கும் அதிரடி சலுகை!

பழைய காரை அழிக்கக் கொடுத்து புதிய ரெனோ கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தை எந்த சிரமும் இல்லாமல் செய்து தர உள்ளதாக ரெனோ தெரிவித்துள்ளது.

ரெனோ டீலரிலேயே பழைய கார்களை அழிக்கக் கொடுக்கலாம்... டூவீலரை கொடுப்பவர்களுக்கும் அதிரடி சலுகை!

பழைய கார் அழிப்புத் திட்டத்தை அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் மேற்கொள்ள இருக்கும் எம்எஸ்டிசி அரசு நிறுவனமும், மஹிந்திரா இன்டர்ட்ரேட் லிமிடேட் நிறுவனமும் இணைந்து CERO என்ற நிறுவனத்தை உருவாக்கி இருக்கின்றன. இந்த CERO நிறுவனத்துடன் இணைந்து இந்த பழைய கார் அழிப்புத் திட்டத்தை ரெனோ கார் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது.

ரெனோ டீலரிலேயே பழைய கார்களை அழிக்கக் கொடுக்கலாம்... டூவீலரை கொடுப்பவர்களுக்கும் அதிரடி சலுகை!

அதாவது, பழைய காரை அழிக்கக் கொடுத்து புதிய ரெனோ கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான சிரமமும் இல்லாமல், நடைமுறைகளை மேற்கொள்ள இது ஏதுவாகும். மேலும், பழைய கார் அழிப்பதற்காக அரசு வழங்கும் சிறப்புச் சேமிப்புச் சலுகைகளும் புதிய ரெனோ கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் எளிதாக பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

ரெனோ டீலரிலேயே பழைய கார்களை அழிக்கக் கொடுக்கலாம்... டூவீலரை கொடுப்பவர்களுக்கும் அதிரடி சலுகை!

பழைய காரை மதிப்பீடு செய்வது, அழிப்பு மையத்திற்கு எடுத்துச் சென்று ஒப்படைப்பது, அழித்ததற்கான சான்று உள்ளிட்ட நடைமுறைகளை ரெனோ டீலர் மூலமாக வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

ரெனோ டீலரிலேயே பழைய கார்களை அழிக்கக் கொடுக்கலாம்... டூவீலரை கொடுப்பவர்களுக்கும் அதிரடி சலுகை!

மேலும், பழைய இருசக்கர வாகனங்களை அழிக்கக் கொடுத்து புதிய ரெனோ கார் வாங்குவோருக்கு 7.99 சதவீத வட்டிவிகிதத்தில் சிறப்புகடன் திட்டத்தையும் வழங்க இருப்பதாக ரெனோ தெரிவித்துள்ளது.

ரெனோ டீலரிலேயே பழைய கார்களை அழிக்கக் கொடுக்கலாம்... டூவீலரை கொடுப்பவர்களுக்கும் அதிரடி சலுகை!

சென்னை, பெங்களூர், மும்பை, புனே, டெல்லி மற்றும் வடமத்திய பிராந்திய பிரதேசத்தில் உள்ள ரெனோ டீலர்கள் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நாட்டின் இதர நகரங்களிலும் இந்த திட்டத்தை கொண்டு செல்ல ரெனோ திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 9, 2021, 13:01 [IST]
English summary
Renault has announced old vehicle scrapping scheme through dealers in India.
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+