ரெனோ கார்களுக்கு ரூ.65,000 வரை சேமிப்புச் சலுகைகள்... முழு விபரம்!
புத்தாண்டை முன்னிட்டு புதிய ரெனோ கார்களுக்கு ரூ.65,000 வரை சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா பிரச்னைக்கு பிறகு கார் விற்பனையை ஊக்குவிப்பதற்காக தொடர்ந்து சிறப்புச் சேமிப்பு சலுகைகளை கார் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அந்த வகையில், ரெனோ கார் நிறுவனமும் கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இருந்து தொடர்ந்து ஆஃபர்களை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், புத்தாண்டு பிறந்த பின்னரும் சில கார் நிறுவனங்களும் தொடர்ந்து சிறப்பு சேமிப்புச் சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், ரெனோ கார் நிறுவனம் ரூ.65,000 வரை சேமிப்பை பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

ரெனோ நிறுவனத்தின் டஸ்ட்டர் எஸ்யூவி, ட்ரைபர் மினி எம்பிவி மற்றும் க்விட் ஹேட்ச்பேக் கார்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அளிக்கப்படுகின்றன.

ரெனோ டஸ்ட்டர்
ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கு ரூ.65,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. அத்துடன், மூன்று ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ தூரத்திற்கான சிறப்பு பராமரிப்புத் திட்டமும் வழங்கப்படுகிறது. ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி ரூ.9.57 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கிறது.

ரெனோ ட்ரைபர்
ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி காருக்கு ரூ.60,000 வரை சேமிப்புச் சலுகைகள் பெறும் வாய்ப்பு இருக்கின்றது. ரெனோ ட்ரைபர் எம்பிவி கார் ரூ.5.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கிறது.

ரெனோ க்விட்
ரெனோ க்விட் காருக்கு ரூ.50,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த கார் ரூ.3.13 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கிறது.

சிறப்பு வட்டி விகிதம்
ரெனோ க்விட், ட்ரைபர் மற்றும் டஸ்ட்டர் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5.99 சதவீத வட்டி விகிதத்தில் சிறப்பு கடன் திட்டமும் வழங்கப்படுகிறது.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்த சிறப்பு சேமிப்புச் சலுகைகளை ரெனோ கார் நிறுவனம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு புதிய கார் புக்கிங் செய்ய விரும்புவோருக்கு இது சிறப்பானதாக இருக்கும். இந்த சேமிப்பு சலுகைகள் தொடர்பான விரிவானத் தகவல்களை அருகிலுள்ள ரெனோ கார் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








