ஓபனிங்கே அமர்க்களமா இருக்கே... முதல் நாளிலேயே 1,100 கைகர் கார்கள் டெலிவரி... கெத்து காட்டும் மலிவு விலை கார்!!

ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி பணிகள் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்றைய ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் கைகர் கார்கள் டெலிவரி கொடுக்கப்பட்டிருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஓபனிங்கே அமர்க்களமா இருக்கே... முதல் நாளிலேயே 1,100 கைகர் கார்கள் டெலிவரி... கெத்து காட்டும் மலிவு விலை கார்!!

ரெனால்ட் நிறுவனம் அதன் புதுமுக வாகனமான கைகர் காரை மார்ச் 3ம் தேதி முதல் டெலிவரி கொடுக்க இருப்பதாக மிக சமீபத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கூறியதைப் போலவே இன்று முதல் டெலிவரி பணிகள் நாடு முழுவதும் தொடங்கியிருக்கின்றன. இந்த நிலையில், இக்கார்குறித்த ஆச்சரியமளிக்கக் கூடிய ஓர் தகவல் வெளி வந்திருக்கின்றது.

ஓபனிங்கே அமர்க்களமா இருக்கே... முதல் நாளிலேயே 1,100 கைகர் கார்கள் டெலிவரி... கெத்து காட்டும் மலிவு விலை கார்!!

டெலிவரி பணிகள் தொடங்கப்பட்ட முதல் நாளான இன்றே 1,100 யூனிட் கைகர் கார்களை ரெனால்ட் டெலிவரி கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்திய ஆட்டோமொபைல் துறையே ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கின்றது. இது ஓர் நல்ல தொடக்கம் என அனைவரும் பேசத் தொடங்கியிருக்கின்றனர். அதேசமயம், இந்த அபரீதமான தொடக்கத்தை பார்த்து போட்டி நிறுவனங்கள் பொறாமையில் மூழ்கியிருக்கின்றன.

ஓபனிங்கே அமர்க்களமா இருக்கே... முதல் நாளிலேயே 1,100 கைகர் கார்கள் டெலிவரி... கெத்து காட்டும் மலிவு விலை கார்!!

ரெனால்ட் கைகர் ஓர் சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இக்கார் ரூ. 5.45 லட்சம் என்ற மிகக் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இக்கார் விலைக் குறைவானதாக தென்பட்டாலும், இதில் பிரீமியம் அம்சங்கள் ஏராளமாக உள்ளன. எனவேதான் இந்தியர்கள் மத்தியில் இக்காருக்கு தற்போது அமோக வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது.

ஓபனிங்கே அமர்க்களமா இருக்கே... முதல் நாளிலேயே 1,100 கைகர் கார்கள் டெலிவரி... கெத்து காட்டும் மலிவு விலை கார்!!

ரெனால்ட் கைகர் கவர்ச்சியான உருவ அமைப்பை மட்டுமில்லைங்க மனம் கவர் வசதிகளையும் கொண்டிருக்கின்றது. அதாவது, 8 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் அளவுள்ள டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், அட்ஜெஸ்டபிள் டிரைவர் இருக்கை, ஆர்கேமிஸ் ஆடியோ சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா மற்றும் 4 ஏர் பேக்குகள் என பல்வேறு பிரீமியம் அம்சங்களும் இக்காரில் இடம்பெற்றிருக்கின்றன.

ஓபனிங்கே அமர்க்களமா இருக்கே... முதல் நாளிலேயே 1,100 கைகர் கார்கள் டெலிவரி... கெத்து காட்டும் மலிவு விலை கார்!!

கைகர் கார் இரு விதமான பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.0 நேட்சுரல்லி அஸ்பையர்ட் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் என இரு விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். தொடர்நது, 5 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேட்டிக் மற்றும் சிவிடி ஆகிய வசதிகளிலான கியர்பாக்ஸ் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஓபனிங்கே அமர்க்களமா இருக்கே... முதல் நாளிலேயே 1,100 கைகர் கார்கள் டெலிவரி... கெத்து காட்டும் மலிவு விலை கார்!!

கிகர் காரின் வெளிப்புறத் தோற்றம் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையானதாக காட்சியளிக்கின்றது. இதன் கட்டுமஸ்தான தோற்றமே இந்த பிம்பத்தை கிகருக்கு வழங்குகின்றது. இந்த தோற்றத்தை மேலும் மெருகேற்றும் வகையில் கூடுதல் ஆக்சஸெரீஸ்களை தனிக் கட்டணத்தின் அடிப்படையில் ரெனால்ட் வழங்கி வருகின்றது.

ஓபனிங்கே அமர்க்களமா இருக்கே... முதல் நாளிலேயே 1,100 கைகர் கார்கள் டெலிவரி... கெத்து காட்டும் மலிவு விலை கார்!!

அவை, கார்களின் ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் ஆகிய நான்கு விதமான வேரியண்டுகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பேக்குகளின் வாயிலாக விற்கப்படும் ஒவ்வொரு கூடுதல் அணிகலன்களும் கைகர் காரை கூடுதல் கவர்ச்சியானதாக மாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஓபனிங்கே அமர்க்களமா இருக்கே... முதல் நாளிலேயே 1,100 கைகர் கார்கள் டெலிவரி... கெத்து காட்டும் மலிவு விலை கார்!!

ரெனால்ட் கைகர் கார் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் நிஸான் மேக்னைட், ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், டொயோட்டா அர்பன் க்ரூஸர், மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூ300 ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனையில் கிடைத்து வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Finally Begun Deliveries Of The All-New Kiger In India. Read In Tamil.
Story first published: Wednesday, March 3, 2021, 14:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X