மலிவு விலை ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி பணிகள் தொடக்கம்! இப்போவே உச்சத்தில் காத்திருப்பு காலம்... முழு விபரம்

மலிவு விலை ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி பணிகள் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. இத்துடன், இக்காருக்கான காத்திருப்பு காலமும் அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மலிவு விலை ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி பணிகள் தொடக்கம்... இப்போவே உச்சத்தில் காத்திருப்பு காலம்... முழு விபரம்!

நிஸான் மேக்னைட் காருக்கு போட்டியளிக்கும் வகையில் குறைந்த விலையில் ரெனால்ட் நிறுவனம் அறிமுகம் செய்த கார் மாடல் கைகர். இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இக்காரின் டெலிவரி பணிகளையே நிறுவனம் இந்தியாவில் இன்று முதல் தொடங்கியிருக்கின்றது. மிக சமீபத்தில் மார்ச் 3ம் தேதியில் இருந்து கார் டெலிவரி பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் கைகர் டெலிவரி தொடங்கியிருக்கின்றது.

மலிவு விலை ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி பணிகள் தொடக்கம்... இப்போவே உச்சத்தில் காத்திருப்பு காலம்... முழு விபரம்!

இந்த காரை ரூ. 5.45 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து ரெனால்ட் விற்பனைச் செய்து வருகின்றது. இதன் உயர்நிலை வேரியண்டின் விலை ரூ. 9.55 லட்சங்கள் ஆகும். இவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பு மட்டுமே ஆகும். மிக மிக குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சூப்பர் தொழில்நுட்பங்கள் அடங்கிய கார் இதுவே ஆகும்.

மலிவு விலை ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி பணிகள் தொடக்கம்... இப்போவே உச்சத்தில் காத்திருப்பு காலம்... முழு விபரம்!

ஆகையால், இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இதனால், தற்போது 8 வாரங்கள் என்ற காத்திருப்பு காலம் நீடிக்க ஆரம்பித்துள்ளது. அதாவது, ரெனால்ட் கைகர் காரை புக் செய்தபின்னர், அக்காரை கைகளில் பெற குறைந்தது இரண்டு மாதங்களாவது காத்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

மலிவு விலை ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி பணிகள் தொடக்கம்... இப்போவே உச்சத்தில் காத்திருப்பு காலம்... முழு விபரம்!

மக்கள் மத்தியில் கிடைத்து அமோகமான வரவேற்பின் காரணத்தினால் இந்த அதிகபட்ச காத்திருப்பு காலம் ஏற்பட்டிருக்கின்றது. அதேசமயம், இக்காத்திருப்பு காலம் நாட்டின் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு மாறுபட்டு காணப்படுகின்றது.

மலிவு விலை ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி பணிகள் தொடக்கம்... இப்போவே உச்சத்தில் காத்திருப்பு காலம்... முழு விபரம்!

ரெனால்ட் கைகர் கார் சிஎம்எஃப்-ஏ+ பிளாட்பாரத்தில் வைத்தே உருவாக்கப்பட்டு வருகின்றது. இதே பிளாட்பாரத்தில் வைத்துதான் நிஸான் மேக்னைட் கார் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஆகையால், நிஸான் மேக்னைட் காரில் தென்படும் அதே இரு எஞ்ஜின் தேர்வுகளே கைகர் காரிலும் காட்சியளிக்கின்றது. 1.0 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் திறன் கொண்ட இன்லைன்-3 பெட்ரோல் மோட்டாரிலும், 1.0 லிட்டர் டர்போசார்ஜட் 3 சிலிண்டர் மோட்டாரிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

மலிவு விலை ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி பணிகள் தொடக்கம்... இப்போவே உச்சத்தில் காத்திருப்பு காலம்... முழு விபரம்!

தொடர்ந்து, எந்த வித தொழில்நுட்ப அம்சங்களுக்கும் குறைச்சலில்லா காராக ரெனால்ட் கைகர் காட்சியளிக்கின்றது. இக்காரில், 8 இன்சிலான தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்சிலான டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக் கூடிய டிரைவர் இருக்கை, ஆர்கேமிஸ் ஆடியோ சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா மற்றும் 4 ஏர் பேக்குகள் இக்காரில் இடம்பெற்றிருக்கின்றன.

மலிவு விலை ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி பணிகள் தொடக்கம்... இப்போவே உச்சத்தில் காத்திருப்பு காலம்... முழு விபரம்!

Image Courtesy: Gopinathji Renault

இதுமட்டுமின்றி, ஒயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், ஆம்பிசியன்ட் கேபின் லைட், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், ட்ரங்க் மின் விளக்கு மற்றும் பட்டிள் விளக்குகள் என பல்வேறு பிரீமியம் அம்சங்களும் இக்காரில் இடம்பெற்றிருக்கின்றன.

மலிவு விலை ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி பணிகள் தொடக்கம்... இப்போவே உச்சத்தில் காத்திருப்பு காலம்... முழு விபரம்!

எனவேதான் ரெனால்ட் கைகர் நாட்டின் பிற பிரீமியம் கார்களுக்கும் போட்டியாக அமைந்திருக்கின்றது. அந்தவகையில்,,கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈகோஸ்போர்ட், டொயோட்டா அர்பன் க்ரூஸர், ஹோண்டா டபிள்யூஆர்-வி மற்றும் பல கார்களுக்கு கைகர் கடுமையான போட்டியை அளித்து வருகின்றது.

Most Read Articles
English summary
Renault Finally Begun Deliveries Of The All-New Kiger In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X