பொங்கல் முடிந்த பின்பும் கார்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள ரெனால்ட்!! ரூ.65,000 வரையில் தள்ளுபடிகள்

டஸ்டர், ட்ரைப்பர் மற்றும் க்விட் கார்களுக்கு இந்த 2021 பிப்ரவரி மாதத்திற்கான சலுகைகளை ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பொங்கல் முடிந்த பின்பும் கார்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள ரெனால்ட்!! ரூ.65,000 வரையில் தள்ளுபடிகள்

ரெனால்ட் அறிவித்துள்ள 2021 பிப்ரவரி மாதத்திற்கான சலுகைகளில் பணம் தள்ளுபடி, கார்பிரேட் சலுகைகள், லாயலிட்டி மற்றும் எக்ஸ்சேன்ஞ் போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன.

பொங்கல் முடிந்த பின்பும் கார்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள ரெனால்ட்!! ரூ.65,000 வரையில் தள்ளுபடிகள்

பிரெஞ்சு ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனால்ட்டின் விலைமிக்க இந்திய கார்களுள் ஒன்றான ட்ரைபர் எம்பிவி-யின் ஏஎம்டி வேரியண்ட்களை இந்த பிப்ரவரி மாதத்தில் வாங்குவோர் ரூ.30,000 வரையிலான பணத்தை மிச்சப்படுத்தலாம்.

பொங்கல் முடிந்த பின்பும் கார்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள ரெனால்ட்!! ரூ.65,000 வரையில் தள்ளுபடிகள்

அதுவே ட்ரைபரின் மை2021 மாடல்களின் மேனுவல் ட்ரிம்களை வாங்குவோர் ரூ.10,000 மதிப்பிலான பணம் தள்ளுபடியுடனும், மை2020 மாடல்களின் மேனுவல் ட்ரிம்களை வாங்குவோர் ரூ.15,000 மதிப்பிலான பணம் தள்ளுபடியுடனும் கார்களை வாங்கலாம்.

பொங்கல் முடிந்த பின்பும் கார்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள ரெனால்ட்!! ரூ.65,000 வரையில் தள்ளுபடிகள்

இந்த எம்பிவி காருக்கு எக்ஸ்சேன்ஞ் சலுகை ரூ.20,000ஆகவும், ஆர்எக்ஸ்இ வேரியண்ட்களுக்கு லாயலிட்டி போனஸ் ரூ.10,000ஆகவும் நிற்ணயிக்கப்பட்டுள்ளது. தனித்துவமான கிராமப்புற சலுகையான ரூ.5,000 விவசாயிகளுக்கும், சர்பஞ்ச், மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

பொங்கல் முடிந்த பின்பும் கார்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள ரெனால்ட்!! ரூ.65,000 வரையில் தள்ளுபடிகள்

ட்ரைபரை வாங்கும் கார்பிரேட் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கார்பிரேட் போனஸையும் ரெனால்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. ரெனால்ட்டின் சிறந்த விற்பனை கார் மாடலான க்விட்டை வாங்கும் வாடிக்கையாளர்கள் மை2021 மாடல்களில் ரூ.20,000 அளவிலும், மை2020 மாடல்களில் ரூ.10,000 அளவிலும் பணம் தள்ளுபடியை பெறலாம்.

பொங்கல் முடிந்த பின்பும் கார்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள ரெனால்ட்!! ரூ.65,000 வரையில் தள்ளுபடிகள்

இதனுடன் கூடுதலாக ரூ.20,000ல் எக்ஸ்சேன்ஞ் போனஸும் க்விட்டிற்கு இந்த மாதத்திற்கான சலுகையாக வழங்கப்பட்டுள்ளது. ட்ரைபரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள அதே ரூ.10,000 கார்பிரேட் போனஸ் மற்றும் ரூ.5,000 கிராமப்புற சலுகைகள் க்விட் காருக்கும் தொடரப்பட்டுள்ளன.

பொங்கல் முடிந்த பின்பும் கார்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள ரெனால்ட்!! ரூ.65,000 வரையில் தள்ளுபடிகள்

ஆனால் ரூ.10,000 லாயலிட்டி சலுகை க்விட்டின் விலை குறைவான ஸ்டாண்டர்ட் மற்றும் ஆர்எக்ஸ்இ 0.8 லிட்டர் வேரியண்ட்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. டஸ்டர் எஸ்யூவி காரை பொறுத்தவரையில், இது 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

பொங்கல் முடிந்த பின்பும் கார்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள ரெனால்ட்!! ரூ.65,000 வரையில் தள்ளுபடிகள்

இதில் 1.5 லிட்டர் என்ஜினின் ஆர்எக்ஸ்எஸ் மற்றும் ஆர்எக்ஸ்இசட் ட்ரிம்கள் ரூ.30,000ல் எக்ஸ்சேன்ஞ் சலுகை, ரூ.15,000ல் லாயலிட்டி போனஸ் மற்றும் கிராமப்புற தள்ளுபடிகளை ஏற்றுள்ளன. இந்த ட்ரிம்களுக்கு கார்பிரேட் போனஸ் ரூ.30,000ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் முடிந்த பின்பும் கார்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள ரெனால்ட்!! ரூ.65,000 வரையில் தள்ளுபடிகள்

இதே லாயலிட்டி போனஸ், கிராமப்புற சலுகைகள் மற்றும் கார்பிரேட் சலுகைகள்தான் ட்ரைபரின் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை பெறும் மை2020 ஆர்எக்ஸ்எஸ் மேனுவல் மற்றும் சிவிடி ட்ரிம்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பொங்கல் முடிந்த பின்பும் கார்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள ரெனால்ட்!! ரூ.65,000 வரையில் தள்ளுபடிகள்

ஆனால் இந்த ட்ரிம்களுக்கு பணம் தள்ளுபடி ரூ.20,000 என்ற அளவிலேயே வழங்கப்பட்டுள்ளது. ரெனால்ட் நிறுவனத்தின் இந்த 2021 பிப்ரவரி மாதத்திற்கான சலுகைகள் அனைத்தும் பிப்ரவரி 28ஆம் தேதி வரையில் மட்டுமே செல்லுபடியாகும்.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Discounts up to Rs 65,000 on Renault Duster, Triber, and Kwid in February 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X