என்ஜாய் பண்ணுங்க... டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு சூப்பரான பரிசு... அசத்தும் Renault!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு Renault நிறுவனம் சூப்பரான பரிசை வழங்கி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

என்ஜாய் பண்ணுங்க... டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு சூப்பரான பரிசு... அசத்தும் Renault!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியாவின் மல்யுத்த வீரர்கள் ரவி குமார் தாஹியா மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோருக்கு Renault நிறுவனம் Kiger எஸ்யூவி காரை பரிசாக வழங்கியுள்ளது. இதில், ரவி குமார் தாஹியா டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்தத்தில் வெள்ளி பதக்கம் வென்றவர் ஆவார்.

என்ஜாய் பண்ணுங்க... டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு சூப்பரான பரிசு... அசத்தும் Renault!

அதே சமயம் பஜ்ரங் பூனியா டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். இந்த சாதனை வெற்றியை கௌரவிக்கும் வகையில், Renault நிறுவனம் Kiger எஸ்யூவி காரை தற்போது பரிசாக வழங்கியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்களை Renault நிறுவனம் கௌரவிப்பது இது நான்காவது முறையாகும்.

என்ஜாய் பண்ணுங்க... டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு சூப்பரான பரிசு... அசத்தும் Renault!

முன்னதாக மீராபாய் சானு மற்றும் லவ்லினா போர்ஹோஹெயின் ஆகியோருக்கும் Renault நிறுவனம் Kiger எஸ்யூவி காரை பரிசாக வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், மீராபாய் சானு டோக்கியோ ஒலிம்பிக் பளு தூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். அதே சமயம் லவ்லினா போர்ஹோஹெயின் டோக்கியோ ஒலிம்பிக் குத்து சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்.

என்ஜாய் பண்ணுங்க... டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு சூப்பரான பரிசு... அசத்தும் Renault!

அவர்களை தொடர்ந்து தற்போது ரவி குமார் தாஹியா மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோருக்கும் Renault நிறுவனம் தனது Kiger எஸ்யூவி காரை பரிசாக வழங்கி அசத்தியுள்ளது. Renault Kiger, இந்திய சந்தையில் கடுமையான போட்டி நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

என்ஜாய் பண்ணுங்க... டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு சூப்பரான பரிசு... அசத்தும் Renault!

Kia Sonet, Hyundai Venue, Maruti Suzuki Vitara Brezza, Toyota Urban Cruiser, Tata Nexon, Mahindra XUV300, Nissan Magnite மற்றும் Ford EcoSport உள்ளிட்ட கார்களுடன் Renault Kiger போட்டியிட்டு வருகிறது. வரும் காலங்களில் இந்த செக்மெண்ட்டில் இன்னும் நிறைய கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன.

என்ஜாய் பண்ணுங்க... டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு சூப்பரான பரிசு... அசத்தும் Renault!

Renault Kiger எஸ்யூவி காரில் மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு மூன்று-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் Renault Kiger எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

என்ஜாய் பண்ணுங்க... டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு சூப்பரான பரிசு... அசத்தும் Renault!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. Renault Kiger எஸ்யூவி காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த காரின் விலையும் போட்டியாளர்களை வலுவாக எதிர்கொள்ளும் வகையில் மிக சவாலான முறையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

என்ஜாய் பண்ணுங்க... டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு சூப்பரான பரிசு... அசத்தும் Renault!

எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை Renault Kiger பெற்றுள்ளது. தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு Renault நிறுவனம் Kiger எஸ்யூவி காரை பரிசளிப்பதன் மூலம், இந்த கார் இந்திய சந்தையில் இன்னும் நன்கு பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ஜாய் பண்ணுங்க... டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு சூப்பரான பரிசு... அசத்தும் Renault!

முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் நீரஜ் சோப்ராவிற்கு, Mahindra XUV700 கார் பரிசாக வழங்கப்படும் என மஹிந்திரா குழுமத்தின் தலைவர் Anand Mahindra அறிவித்துள்ளார். Mahindra XUV700, எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

என்ஜாய் பண்ணுங்க... டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு சூப்பரான பரிசு... அசத்தும் Renault!

வெகு சமீபத்தில்தான் Mahindra XUV700 எஸ்யூவி கார் வெளியிடப்பட்டது. அடுத்த சில மணி நேரத்திலேயே ஆச்சரியம் அளிக்கும் வகையில் அதன் விலையும் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில வேரியண்ட்களுக்கான விலை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில வேரியண்ட்களுக்கான விலை அறிவிக்கப்பட வேண்டியுள்ளது.

என்ஜாய் பண்ணுங்க... டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு சூப்பரான பரிசு... அசத்தும் Renault!

கூடிய விரைவில் Mahindra XUV700 எஸ்யூவி காரின் முழுமையான மற்றும் அதிகாரப்பூர்வ விலையை Mahindra நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புத்தம் புதிய எஸ்யூவி காரை நாங்கள் ஏற்கனவே சென்னையில் வைத்து சோதனை செய்து விட்டோம். அப்போது இந்த காரின் செயல்திறன் மற்றும் பல்வேறு பிரீமியமான அம்சங்கள் எங்களை கவர்ந்தன.

என்ஜாய் பண்ணுங்க... டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு சூப்பரான பரிசு... அசத்தும் Renault!

Mahindra XUV700 எஸ்யூவி காரின் உற்பத்தி பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. எனவே வெகு விரைவில் நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்களில் Mahindra XUV700 எஸ்யூவி காரை நாம் பார்க்க முடியும். இந்த காரின் டெலிவரி பணிகள் எப்போது தொடங்கப்படும்? என தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

Most Read Articles

English summary
Renault india gifts kiger compact suv to tokyo olympic medal winners ravi kumar dahiya bajrang punia
Story first published: Monday, August 23, 2021, 12:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X