பார்த்தவுடன் வாங்க தோணுதே... ரெனால்ட் கைகர் காருக்கான முன்பதிவு வெகு விரைவில் தொடங்குகிறது...

ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பார்த்தவுடன் வாங்க தோணுதே... ரெனால்ட் கைகர் காருக்கான முன்பதிவு வெகு விரைவில் தொடங்குகிறது...

மிகவும் சவால் நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் அடுத்து நுழையவுள்ள தயாரிப்பு ரெனால்ட் கைகர். ரெனால்ட் நிறுவனம் கைகர் காம்பேக்ட் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை வெர்ஷனை வெகு சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வந்தது. இதன் கவர்ச்சிகரமான டிசைன் மற்றும் அட்டகாசமான வசதிகள் வாடிக்கையாளர்கள் பலரின் ஆவலை தூண்டியுள்ளன.

பார்த்தவுடன் வாங்க தோணுதே... ரெனால்ட் கைகர் காருக்கான முன்பதிவு வெகு விரைவில் தொடங்குகிறது...

ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் வெகு விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து நடப்பு பிப்ரவரி மாத இறுதிக்குள் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பார்த்தவுடன் வாங்க தோணுதே... ரெனால்ட் கைகர் காருக்கான முன்பதிவு வெகு விரைவில் தொடங்குகிறது...

அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்னதாக, ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை ரெனால்ட் நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது. டீலர்ஷிப்களில் இந்த கார் நிறுத்தப்பட்டிருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பார்த்தவுடன் வாங்க தோணுதே... ரெனால்ட் கைகர் காருக்கான முன்பதிவு வெகு விரைவில் தொடங்குகிறது...

இந்த வரிசையில் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவியின் சில்வர், ப்ளூ மற்றும் ப்ரவுன் வண்ண தேர்வுகளை இந்த புகைப்படங்களில் காண முடிகிறது. தயாரிப்பு நிலை வெர்ஷன் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டபோது சிகப்பு வண்ண தேர்வும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்தவுடன் வாங்க தோணுதே... ரெனால்ட் கைகர் காருக்கான முன்பதிவு வெகு விரைவில் தொடங்குகிறது...

ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவியின் கேபின் பிரீமியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வசதிகளை பொறுத்தவரை இந்த காம்பேக்ட் எஸ்யூவி, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி வசதிகளுடன் 8.0 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமை பெற்றுள்ளது. அத்துடன் 7.0 இன்ச் முழு டிஜிட்டல் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் வழங்கப்பட்டுள்ளது.

பார்த்தவுடன் வாங்க தோணுதே... ரெனால்ட் கைகர் காருக்கான முன்பதிவு வெகு விரைவில் தொடங்குகிறது...

இதுதவிர வயர்லெஸ் போன் சார்ஜிங், பல்வேறு கண்ட்ரோல்களுக்கான ஸ்விட்ச்களுடன் கூடிய ஸ்டியரிங் வீல், கீலெஸ் எண்ட்ரி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளையும் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி பெற்றுள்ளது. வசதிகளில் அமர்க்களப்படுத்தும் அதே நேரத்தில், விசாலமான கேபினையும் ரெனால்ட் கைகர் பெற்றுள்ளது.

பார்த்தவுடன் வாங்க தோணுதே... ரெனால்ட் கைகர் காருக்கான முன்பதிவு வெகு விரைவில் தொடங்குகிறது...

அத்துடன் நிறைய ஸ்டோரேஜ் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளதால், ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி நடைமுறை பயன்பாட்டிற்கு சிறப்பானதாக இருக்கும். அதே சமயம் ரெனால்ட் கைகர் காரில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மொத்தம் இரண்டு இன்ஜின் தேர்வுகள் கிடைக்கும்.

பார்த்தவுடன் வாங்க தோணுதே... ரெனால்ட் கைகர் காருக்கான முன்பதிவு வெகு விரைவில் தொடங்குகிறது...

இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, டொயோட்டா அர்பன் க்ரூஸர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் நிஸான் மேக்னைட் உள்ளிட்ட காம்பேக்ட் எஸ்யூவிகளுடன், ரெனால்ட் கைகர் போட்டியிடும்.

Image Courtesy: Ketul Patel/Rushlane Spylane

More from DriveSpark

Article Published On: Friday, February 5, 2021, 9:29 [IST]
English summary
Renault Kiger Compact SUV Bookings Open Soon - Here Are All The Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+