ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி மார்ச் 3ல் தொடக்கம்... விலையை கேட்டால் நீங்களும் புக் பண்ணீருவீங்க...

ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி பணிகள் வரும் மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி மார்ச் 3ல் தொடக்கம்... விலையை கேட்டால் நீங்களும் புக் பண்ணீருவீங்க...

ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி பணிகள் வரும் மார்ச் 3ம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதனை ரெனால்ட் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ரெனால்ட் கைகர் கார் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அன்றைய தினமே ரெனால்ட் கைகர் காருக்கு முன்பதிவும் தொடங்கியது.

ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி மார்ச் 3ல் தொடக்கம்... விலையை கேட்டால் நீங்களும் புக் பண்ணீருவீங்க...

11 ஆயிரம் ரூபாய் செலுத்தி ரெனால்ட் கைகர் காரை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவில் 5.45 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் ரெனால்ட் கைகர் கார் கிடைக்கும். அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டிற்கு 9.55 லட்ச ரூபாய் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி மார்ச் 3ல் தொடக்கம்... விலையை கேட்டால் நீங்களும் புக் பண்ணீருவீங்க...

இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிஸான் மேக்னைட் காரின் பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ரெனால்ட் கைகர் காரும் உருவாக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுடன் ரெனால்ட் கைகர் போட்டியிடுகிறது.

ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி மார்ச் 3ல் தொடக்கம்... விலையை கேட்டால் நீங்களும் புக் பண்ணீருவீங்க...

இதுதவிர நிஸான் மேக்னைட் காருக்கும், ரெனால்ட் கைகர் விற்பனையில் சவால் அளிக்கும். தற்போது விற்பனைக்கு வரும் மற்ற ரெனால்ட் கார்களை போலவே, ரெனால்ட் கைகர் காரும் கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி பகல் நேர விளக்குகள் மற்றும் 'C' வடிவ எல்இடி டெயில்லைட்கள் ஆகியவற்றை ரெனால்ட் கைகர் பெற்றுள்ளது.

ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி மார்ச் 3ல் தொடக்கம்... விலையை கேட்டால் நீங்களும் புக் பண்ணீருவீங்க...

அத்துடன் 16 இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்கள் மற்றும் ரூஃப்ரெயில்கள் ஆகியவையும் ரெனால்ட் கைகர் காரில் வழங்கப்பட்டுள்ளன. கேபினை பொறுத்தவரை வயர்லெஸ் கனெக்டிவிட்டி, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமை ரெனால்ட் கைகர் கார் பெற்றுள்ளது.

ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி மார்ச் 3ல் தொடக்கம்... விலையை கேட்டால் நீங்களும் புக் பண்ணீருவீங்க...

இதுதவிர 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜர், பிஎம் 2.5 ஏர் ஃபில்டர், ஆம்பியண்ட் லைட்டிங் உள்ளிட்ட வசதிகளும் ரெனால்ட் கைகர் காரில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரில், 2 பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி மார்ச் 3ல் தொடக்கம்... விலையை கேட்டால் நீங்களும் புக் பண்ணீருவீங்க...

இதில், 1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர 72 பிஎஸ் பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வும் ரெனால்ட் கைகர் காரில் வழங்கப்படுகிறது.

ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி மார்ச் 3ல் தொடக்கம்... விலையை கேட்டால் நீங்களும் புக் பண்ணீருவீங்க...

இந்தியாவில் தற்போது ரெனால்ட் கைகர் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மிக குறைவான விலை நிர்ணயமே இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. ரெனால்ட் கைகர் காரை தொடர்ந்து இன்னும் பல்வேறு நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, February 26, 2021, 22:25 [IST]
English summary
Renault Kiger Compact SUV Deliveries To Commence On March 3 - Here Are All The Details. Read in Tamil
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+