புதிய ரெனால்ட் கைகரின் விலை குறைவான வேரியண்ட்டிலேயே இவ்வளவு வசதிகளா!! கார் இப்படிதான் இருக்கும்போல...

ரெனால்ட் கைகர் காரின் விலை குறைவான வேரியண்ட் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய ரெனால்ட் கைகரின் விலை குறைவான வேரியண்ட்டிலேயே இவ்வளவு வசதிகளா!! கார் இப்படிதான் இருக்கும்போல...

ரெனால்ட் நிறுவனம் அதன் புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காராக கைகரை கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர்களின் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளாகி இருக்கும் இந்த ரெனால்ட் கார் ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ரெனால்ட் கைகரின் விலை குறைவான வேரியண்ட்டிலேயே இவ்வளவு வசதிகளா!! கார் இப்படிதான் இருக்கும்போல...

இந்த நிலையில் தற்போது கைகரின் விலை குறைவான வேரியண்ட் இவ்வாறுதான் இருக்கும் என சில படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. கைகரின் இந்த ஆரம்ப நிலை வேரியண்ட் ஆர்எக்ஸ்இ என அழைக்கப்படும் என கூறப்படுகிறது.

புதிய ரெனால்ட் கைகரின் விலை குறைவான வேரியண்ட்டிலேயே இவ்வளவு வசதிகளா!! கார் இப்படிதான் இருக்கும்போல...

இதன் விலை குறைவாக நிர்ணயிக்கப்பட உள்ளதால் அதற்கு ஏற்ப சக்கர கவர்களுடன் இரும்பு சக்கரங்கள், ஹாலோஜன் ஹெட்லேம்ப்களை ஒற்றை நிறத்துடன் கொண்டுள்ளதை இந்த படங்களின் மூலம் அறிய முடிகிறது. இருப்பினும் மேற்கூரை தண்டவாளங்களையும் காரில் பார்க்க முடிகிறது.

புதிய ரெனால்ட் கைகரின் விலை குறைவான வேரியண்ட்டிலேயே இவ்வளவு வசதிகளா!! கார் இப்படிதான் இருக்கும்போல...

கைகரின் மத்திய-வேரியண்ட்களில் ரெனால்ட் ட்ரைபரை போன்று ஸ்டைலிஷான சக்கர மூடிகளுடன் இரும்பு சக்கரங்களே பொருத்தப்படவுள்ளன. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த புதிய ரெனால்ட் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வெர்சனிலும், டர்போசார்ஜ்டு வெர்சனிலும் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளது.

புதிய ரெனால்ட் கைகரின் விலை குறைவான வேரியண்ட்டிலேயே இவ்வளவு வசதிகளா!! கார் இப்படிதான் இருக்கும்போல...

இதில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வெர்சனில் அதிகப்பட்சமாக 71 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனையும், டர்போசார்ஜ்டு வெர்சனில் 98 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனையும் இந்த பெட்ரோல் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

புதிய ரெனால்ட் கைகரின் விலை குறைவான வேரியண்ட்டிலேயே இவ்வளவு வசதிகளா!! கார் இப்படிதான் இருக்கும்போல...

இந்த இரு வெர்சன்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டாகவும், நேச்சுரலி அஸ்பிரேடட் வெர்சனுக்கு ஏஎம்டி கியர்பாக்ஸும், டர்போசார்ஜ்டு வெர்சனுக்கு சிவிடி கியர்பாக்ஸும் கூடுதல் தேர்வாக வழங்கப்படவுள்ளன.

புதிய ரெனால்ட் கைகரின் விலை குறைவான வேரியண்ட்டிலேயே இவ்வளவு வசதிகளா!! கார் இப்படிதான் இருக்கும்போல...

உட்புறத்தில் 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர் இல்லா சார்ஜிங் வசதி, க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், காற்று சுத்திகரிப்பான், நான்கு ஏர்பேக்ஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவற்றை சிறப்பம்சங்களாக பெற்றுவரவுள்ள ரெனால்ட் கைகர் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய ஏற்கனவே துவங்கிவிட்டது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 10, 2021, 15:30 [IST]
English summary
Renault Kiger base variant model revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+