17-இன்ச் அலாய் சக்கரங்களுடன் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்!! இந்த மாடிஃபிகேஷனும் நல்லா இருக்கே!

நடப்பு 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் ரெனால்ட் நிறுவனம் அதன் சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி காராக கிகர் காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது. விற்பனையில் இந்த காருக்கு நிஸான் மேக்னைட், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.

17-இன்ச் அலாய் சக்கரங்களுடன் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்!! இந்த மாடிஃபிகேஷனும் நல்லா இருக்கே!

இந்திய சந்தையில் தற்சமயம் விற்பனைக்கு கிடைக்கும் மலிவான சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி காராக விளங்கும் கிகர் அதன் குறைவான விலையினால் மட்டுமில்லாமல், ஸ்டைலான தோற்றத்தினாலும் சாலையில் பரவலாக காணப்படும் காராக விளங்குகிறது.

17-இன்ச் அலாய் சக்கரங்களுடன் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்!! இந்த மாடிஃபிகேஷனும் நல்லா இருக்கே!

அதேநேரம் இந்த ரெனால்ட் காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு ஆக்ஸஸரீகளும் சந்தையில் எளிமையாக கிடைக்கின்றன. இதனால் கிகரை மாடிஃபை செய்து பயன்படுத்துவோரும் அதிகரித்து வருகின்றனர். இந்த வகையில் 17-இன்ச் சந்தைக்கு பிறகான அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்ட கிகர் எஸ்யூவி காரினை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

17-இன்ச் அலாய் சக்கரங்களுடன் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்!! இந்த மாடிஃபிகேஷனும் நல்லா இருக்கே!

Image Courtesy: Plati Alloy Wheels

முகேஷ் ஆட்டோ விலாக் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் காட்சி தருவதுதான் எங்களுக்கு தெரிந்தவரையில் 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன் மாடிஃபை செய்யப்பட்ட முதல் கிகர் காராக இருக்க வேண்டும். இதனை ஹைலைட்டாக சுட்டிக்காட்டியே இந்த வீடியோவினை பதிவிட்டுள்ளனர்.

17-இன்ச் அலாய் சக்கரங்களுடன் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்!! இந்த மாடிஃபிகேஷனும் நல்லா இருக்கே!

மேலும் இந்த வீடியோ இது கிகரின் ஆரம்ப நிலை வேரியண்ட் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. ஏனெனில் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்களை இந்த கார் கொண்டுள்ளது. கார் தரையில் கம்பீரமாக நிற்பதற்கு காரணமே சக்கரங்கள் தான். அவை இங்கு மாற்றப்பட்டுள்ளதால் காரின் நிற்கும் நிலைப்பாடே மொத்தமாக மாறியுள்ளது.

17-இன்ச் அலாய் சக்கரங்களுடன் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்!! இந்த மாடிஃபிகேஷனும் நல்லா இருக்கே!

சக்கரங்கள் பெரியதாகி உள்ளதால், இந்த குறிப்பிட்ட ரெனால்ட் கிகர் கார் அளவில் பெரியதாக மாறியுள்ளது. ஒற்றை நிறத்தில் ப்ரஷ்டு ஷேடில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த 5-ஸ்போக் அலாய் சக்கரங்களில் குறை-முகவரி கொண்ட (ஆழமற்ற) டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அளவில் பெரிய சக்கரங்களுடன் இந்த கிகர் கார் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.

17-இன்ச் அலாய் சக்கரங்களுடன் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்!! இந்த மாடிஃபிகேஷனும் நல்லா இருக்கே!

இருப்பினும் இந்த 17-இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்திய பின்னர் காரின் ட்ரைவிங் அனுபவம் மற்றும் ஹேண்ட்லிங் எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளது என்பதை இந்த வீடியோவின் மூலமாக அறிய முடியவில்லை. கிகர் காம்பெக்ட் எஸ்யூவி காரில் டிஸ்க் ப்ரேக்குகளை ரெனால்ட் நிறுவனம் வழங்குகிறது. இந்த டிஸ்க் ப்ரேக்குகள் இந்த மாடிஃபை காரில் சிவப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

17-இன்ச் அலாய் சக்கரங்களுடன் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்!! இந்த மாடிஃபிகேஷனும் நல்லா இருக்கே!

ரெனால்ட்டின் சமீபத்திய அறிமுகங்களுள் ஒன்றான கிகர் மாடல் க்விட் & ட்ரைபர் கார்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. குறிப்பாக கிகரின் முன்பக்க க்ரில் பகுதியினை ட்ரைபரிலும், க்ரில் உடன் நேர்த்தியாக இணைக்கப்பட்டிருக்கும் எல்இடி டிஆர்எல்களை க்விட் மாடலிலும் பார்க்க முடியும்.

17-இன்ச் அலாய் சக்கரங்களுடன் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்!! இந்த மாடிஃபிகேஷனும் நல்லா இருக்கே!

ஹெட்லைட் விளக்குகள் ஐஸ் பனிக்கட்டி வடிவில் பம்பரில் பொருத்தப்படுகின்றன. ரெனால்ட் கிகர் காம்பெக்ட் எஸ்யூவி அளவில் சிறியதாக இருந்தாலும், இதன் முன்பக்கம் அளவில் பெரிய கார்களை போல் உள்ளது. பக்கவாட்டில் வழங்கப்படுகின்ற வளைவுகளும், தடிமனான லைன்களும் கிகரை ஒரு பக்கா எஸ்யூவியாக நம் கண் முன் நிறுத்துகின்றன.

17-இன்ச் அலாய் சக்கரங்களுடன் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்!! இந்த மாடிஃபிகேஷனும் நல்லா இருக்கே!

பின்பக்கத்தில் இந்த ரெனால்ட் காம்பெக்ட் எஸ்யூவி கார் C-வடிவில் டெயில்லேம்ப்களை கொண்டுள்ளது. கிகரின் உட்புறத்தில் மிகவும் எளிமையான கேபின் வழங்கப்படுகிறது. உட்புற டேஸ்போர்டில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் திரை ஆனது ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதியுடன் கொடுக்கப்படுகிறது.

17-இன்ச் அலாய் சக்கரங்களுடன் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்!! இந்த மாடிஃபிகேஷனும் நல்லா இருக்கே!

அத்துடன், பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி துளைகள், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவையும் கிகரின் கேபினில் வழங்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி, மைய கன்சோலின் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய ட்ரைவ் மோட்களும் இந்த காரில் கொடுக்கப்படுகின்றன.

17-இன்ச் அலாய் சக்கரங்களுடன் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்!! இந்த மாடிஃபிகேஷனும் நல்லா இருக்கே!

ரெனால்ட் கிகரில் இரு விதமான பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் ஒன்றான 1.0 லிட்டர், 3-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 72 பிஎஸ் மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாகவும், 1.0 லி, 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 100 பிஎஸ் மற்றும் 160 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கக்கூடியதாகவும் உள்ளன.

Most Read Articles

English summary
Renault kiger suv modified with 17 inch after market alloy wheels
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X