குவியும் ரெனால்ட்டின் புதிய கைகர் காருக்கான முன்பதிவு!! டெலிவிரி எடுக்க 2 மாதம் வரையில் காத்திருக்க வேண்டுமாம்

ரெனால்ட் கைகர் காருக்கான காத்திருப்பு காலம் 2 மாதங்கள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

குவியும் ரெனால்ட்டின் புதிய கைகர் காருக்கான முன்பதிவு!! டெலிவிரி எடுக்க 2 மாதம் வரையில் காத்திருக்க வேண்டுமாம்

இந்தியாவில் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் நுழைந்த கைகர் மாடலின் இரு-நிற வேரியண்டகளுக்கு தான் அதிகளவில் தேவை இந்திய சந்தையில் உள்ளது.

குவியும் ரெனால்ட்டின் புதிய கைகர் காருக்கான முன்பதிவு!! டெலிவிரி எடுக்க 2 மாதம் வரையில் காத்திருக்க வேண்டுமாம்

இதனால் இந்த வேரியண்ட்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் காத்திருப்பதற்கான கால அளவு 6- 8 வாரங்கள் (கிட்டத்தட்ட 2 மாதங்கள்)-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெனால்ட்டின் இந்த புதிய தயாரிப்பு 6 விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

குவியும் ரெனால்ட்டின் புதிய கைகர் காருக்கான முன்பதிவு!! டெலிவிரி எடுக்க 2 மாதம் வரையில் காத்திருக்க வேண்டுமாம்

இந்த ஆறு நிறங்களில் பிளானட் க்ரே, ஐஸ் கூல் வெள்ளை, நிலவொளியின் க்ரே, காஸ்பியன் நீலம், மஹோகனி ப்ரவுன் மற்றும் ரேடியண்ட் சிவப்பு என்ற நிறங்கள் அடங்குகின்றன. இதில் ரேடியண்ட் சிவப்பு நிறத்தேர்வு தொழிற்நுட்ப அம்சங்களால் நிரப்பப்பட்ட ஆர் எக்ஸ் இசட் வேரியண்ட்டில் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது.

குவியும் ரெனால்ட்டின் புதிய கைகர் காருக்கான முன்பதிவு!! டெலிவிரி எடுக்க 2 மாதம் வரையில் காத்திருக்க வேண்டுமாம்

அனைத்து ஒற்றை-நிற தேர்விலும் கைகர் கருப்பு நிற மேற்கூரை உடன் வழங்கப்படுகிறது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ரெனால்ட் கைகரில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டர்ட்போசார்ஜ்டு என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

குவியும் ரெனால்ட்டின் புதிய கைகர் காருக்கான முன்பதிவு!! டெலிவிரி எடுக்க 2 மாதம் வரையில் காத்திருக்க வேண்டுமாம்

இதில் முதலாவது நேச்சுரலி அஸ்பிரேட்டட் என்ஜின் அதிகப்பட்சமாக 72 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனையும், இரண்டாவது என்ஜின் 100 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக வழங்கப்படுகின்றன.

குவியும் ரெனால்ட்டின் புதிய கைகர் காருக்கான முன்பதிவு!! டெலிவிரி எடுக்க 2 மாதம் வரையில் காத்திருக்க வேண்டுமாம்

இதில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும், டர்போசார்ஜ்டு என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

குவியும் ரெனால்ட்டின் புதிய கைகர் காருக்கான முன்பதிவு!! டெலிவிரி எடுக்க 2 மாதம் வரையில் காத்திருக்க வேண்டுமாம்

டாப் வேரியண்ட்டான கைகர் ஆர்எக்ஸ்இசட்-இன் எக்ஸ்ஷோரூம் விலை மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் ரூ.7.55 லட்சமாகவும், சிவிடி ட்ரான்ஸ்மிஷனில் ரூ.9.55 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமான வசதிகளுடன் கைகரை ஐந்து கூடுதல் ஆக்ஸஸரீ தொகுப்புகளுடனும் ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

குவியும் ரெனால்ட்டின் புதிய கைகர் காருக்கான முன்பதிவு!! டெலிவிரி எடுக்க 2 மாதம் வரையில் காத்திருக்க வேண்டுமாம்

இதில் அத்தியாவசியமான தொகுப்பு, கவர்ச்சிகரமான தொகுப்பு, எஸ்யூவி தொகுப்பு, ஸ்மார்ட் தொகுப்பு மற்றும் ஸ்மார்ட்+ தொகுப்பு என்ற ஐந்து தொகுப்புகள் அடங்குகின்றன. இவற்றை பெற காரின் வழக்கமான விலையுடன் கூடுதல் தொகையினை செலுத்த வேண்டிவரும்.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Kiger waiting period only between six to eight weeks. Read in Tamil.
Story first published: Sunday, February 21, 2021, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X