4 லட்சம் ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை... இவ்ளோ கம்மியான ரேட்ல கிடைக்கறப்போ தாராளமா வாங்கலாம்!

இந்தியாவில் ரெனால்ட் க்விட் கார் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

4 லட்சம் ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை... இவ்ளோ கம்மியான ரேட்ல கிடைக்கறப்போ தாராளமா வாங்கலாம்!

இந்தியாவில் ரெனால்ட் க்விட் (Renault Kwid) கார், 4 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை தற்போது கடந்துள்ளது. ரெனால்ட் க்விட் கார் இந்திய சந்தையில் கடந்த 2015ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்து ரெனால்ட் நிறுவனத்திற்கு ஒரு கேம்-சேஞ்சராக க்விட் இருந்து வருகிறது.

4 லட்சம் ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை... இவ்ளோ கம்மியான ரேட்ல கிடைக்கறப்போ தாராளமா வாங்கலாம்!

ரெனால்ட் க்விட் காரின் 4 லட்சமாவது வாடிக்கையாளருக்கு, ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துணை தலைவர் சுதிர் மல்ஹோத்ரா, சாவியை ஒப்படைத்தார். இதற்கிடையே மேம்படுத்தப்பட்ட 2021 ரெனால்ட் க்விட் கார் இந்திய சந்தையில் கடந்த செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

4 லட்சம் ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை... இவ்ளோ கம்மியான ரேட்ல கிடைக்கறப்போ தாராளமா வாங்கலாம்!

தற்போதைய நிலையில் ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப விலை 4.11 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 5.56 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் வசதிகள், பாதுகாப்பு என பல்வேறு அம்சங்களிலும் புதிய மாடல் மேம்பட்டுள்ளது.

4 லட்சம் ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை... இவ்ளோ கம்மியான ரேட்ல கிடைக்கறப்போ தாராளமா வாங்கலாம்!

ரெனால்ட் க்விட் காரில், ஸ்பிளிட் ஹெட்லேம்ப், எல்இடி பகல் நேர விளக்குகள், எல்இடி டெயில்லைட் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. கேபினை பொறுத்தவரை, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் உடன் 8 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் எல்இடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

4 லட்சம் ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை... இவ்ளோ கம்மியான ரேட்ல கிடைக்கறப்போ தாராளமா வாங்கலாம்!

0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் உடன் ரெனால்ட் க்விட் கார் கிடைக்கிறது. இதில், 0.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 53 பிஹெச்பி பவரையும், 72 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 67 பிஹெச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

4 லட்சம் ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை... இவ்ளோ கம்மியான ரேட்ல கிடைக்கறப்போ தாராளமா வாங்கலாம்!

இந்த இரண்டு இன்ஜின்களுடனும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகிறது. ரெனால்ட் நிறுவனத்திற்கு இந்திய சந்தையில் அதிக விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் கார்களில் ஒன்றாக க்விட் திகழ்கிறது.

4 லட்சம் ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை... இவ்ளோ கம்மியான ரேட்ல கிடைக்கறப்போ தாராளமா வாங்கலாம்!

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் வழக்கமான ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை களமிறக்கும் முயற்சிகளில் பெரும்பாலான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்னோடியாக திகழ்கிறது. தனது நெக்ஸான் மற்றும் டிகோர் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை டாடா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

4 லட்சம் ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை... இவ்ளோ கம்மியான ரேட்ல கிடைக்கறப்போ தாராளமா வாங்கலாம்!

இதுதவிர மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டுள்ளது. அதே நேரத்தில் கியா நிறுவனம் தனது செல்டோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வரிசையில் ரெனால்ட் நிறுவனமும் க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிகிறது.

4 லட்சம் ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை... இவ்ளோ கம்மியான ரேட்ல கிடைக்கறப்போ தாராளமா வாங்கலாம்!

ஆட்டோமொபைல் தளங்களில் இந்த செய்திகள் அடிபட்டு வந்தாலும், இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருவதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என கூறப்படுகிறது. க்விட் தவிர கைகர் காரும் இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்திற்கு நல்ல விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தருகிறது.

4 லட்சம் ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை... இவ்ளோ கம்மியான ரேட்ல கிடைக்கறப்போ தாராளமா வாங்கலாம்!

இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும். இது இந்த செக்மெண்ட்டிற்கு புதிதாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கார்களில் ஒன்று. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, நிஸான் மேக்னைட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட கார்களுடன் ரெனால்ட் கைகர் போட்டியிட்டு வருகிறது.

4 லட்சம் ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை... இவ்ளோ கம்மியான ரேட்ல கிடைக்கறப்போ தாராளமா வாங்கலாம்!

இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் விலை குறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாக ரெனால்ட் கைகர் உள்ளது. இந்த சவாலான விலை நிர்ணயம்தான் ரெனால்ட் கைகர் காரின் சிறப்பான விற்பனை எண்ணிக்கைக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ரெனால்ட் கைகர் காரை போலவே, நிஸான் மேக்னைட் காருக்கும் சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault kwid achieves 4 lakh unit sales milestone here are all the details
Story first published: Wednesday, November 17, 2021, 18:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X