புதிய Renault Megane E-Tech வெளியீடு... இந்த மின்சார காரோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

Renault நிறுவனம் அதன் புதிய Megane E-Tech எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்துள்ளது. ஜெர்மனியில் நடைபெற்று வரும் மோட்டார் ஷோ ஒன்றிலேயே இக்காரை நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த மேலும் முக்கிய விபரங்களை இப்பதிவில் காணலாம், வாங்க.

புதிய Renault Megane E-Tech வெளியீடு... இந்த மின்சார காரோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

Renault நிறுவனம் புதிய Megane E-Tech எனும் எலெக்ட்ரிக் காரை உலகளவில் வெளியீடு செய்துள்ளது. இதன் பயண தூரம் மற்றும் காரில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் இக்காரை உடனே வாங்க வேண்டும் என ஆசையைத் தூண்டும் வகையில் இருக்கின்றன. ஆனால், இந்த காரை இப்போது வாங்க முடியாது என்பதே உண்மை.

புதிய Renault Megane E-Tech வெளியீடு... இந்த மின்சார காரோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

ஜெர்மன் நாட்டின் முனிச் எனும் பகுதியில் ஐஏஏ முனிச் 2021 வாகன கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இந்த மோட்டார் ஷோவில் உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்களின் புதுமுக வாகனங்களைக் காட்சிப்படுத்தி வருகின்றன. அந்தவகையில், ரெனால்ட் நிறுவனம் அதன் புதுமுக மீகேன் இ-டெக் எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்துள்ளது.

புதிய Renault Megane E-Tech வெளியீடு... இந்த மின்சார காரோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

ஆம், இந்த காரை இன்னும் விற்பனைக்காக அறிமுகம் செய்யவில்லை. இப்போது நிறுவனம் வெளியீடு மட்டுமே செய்துள்ளது. மிக விரைவில் உலக நாடுகள் சிலவற்றின் மின் வாகன சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. ரெனால்ட் நிறுவனம் மீகேன் மாடலை பல விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

புதிய Renault Megane E-Tech வெளியீடு... இந்த மின்சார காரோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

அந்தவகையில் நிறுவனம் மீகேன் வரிசையில் எலெக்ட்ரிக் காரையும் விற்பனைச் செய்யும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. இதனடிப்படையிலேயே தனது புதிய பூஜ்ஜியம் உமிழ்வு வசதிக் கொண்ட மீகேன் இ-டெக் எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருக்கின்றது. இக்காரை தனது CMF-EV எனும் பிளாட்பாரத்தில் வைத்து கட்டமைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

புதிய Renault Megane E-Tech வெளியீடு... இந்த மின்சார காரோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த பிளாட்பாரமானது எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காகவே உருவாக்கிய தளம் ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 470 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இதுமட்டுமின்றி 300 பயண தூர திறனிலும் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த சிறந்த திறனை வழங்குவதற்காக 40 kWh and 60 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கை மீகேன் எலெக்ட்ரிக் காரில் ரெனால்ட் பயன்படுத்த இருக்கின்றது.

புதிய Renault Megane E-Tech வெளியீடு... இந்த மின்சார காரோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

பேட்டரி பேக்கில் மட்டுமின்றி மின் மோட்டார் விஷயத்திலும் இரு விதமான தேர்வை மீகேன் எலெக்ட்ரிக் காரில் வழங்க ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 130 எச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனிலும், 218 எச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறனிலும் அது கிடைக்கும். இதுமட்டுமின்றி இன்னும் பல சிறப்பு அம்சங்களுடன் மீகேன் இ-டெக் எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

புதிய Renault Megane E-Tech வெளியீடு... இந்த மின்சார காரோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

அந்தவகையில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், சென்ட்ரல் கன்சோல் மல்டிமீடியோ திரை ஆகிய இரண்டும் அடங்கிய ஒற்றை ஓபன்ஆர் திரை இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், புதிய தலைமுறை குவால்கம் ஸ்நேப்டிராகன் ப்ராசஸஸர், அட்வான்ஸ்ட் இணைப்பு வசதி, யுஎஸ்பி-சி போர்ட் மற்றும் அடாஸ் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் மீகேன் இ-டெக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

புதிய Renault Megane E-Tech வெளியீடு... இந்த மின்சார காரோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

ரெனால்ட் மீகேன் இ-டெக் எலெக்ட்ரிக் கார் ஒட்டுமொத்தமாக ஆறு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ரஃபேல் கிரே, ஸ்கிஸ்ட் கிரே, மிட்நைட் நீலம், ஃப்ளேம் ரெட், டைமண்ட் கருப்பு மற்றும் கிளாசியர் வெள்ளை ஆகிய நிற தேர்வுகளில் மீகேன் கிடைக்கும். இத்துடன் நிற தேர்வை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் வசதியையும் நிறுவனம் வழங்குகின்றது.

புதிய Renault Megane E-Tech வெளியீடு... இந்த மின்சார காரோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

எலெக்ட்ரிக் காரை ரெனால்ட் நிறுவனம் மிகவும் கவர்ச்சியான வாகனமாக உருவாக்கியிருக்கின்றது. இது ஓர் க்ராஸோவர் ரக வாகனம் ஆகும். இதன் கவர்ச்சியான தோற்றத்தை அதிகம் மெருகேற்றும் வகையில் 20 இன்சிலான வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் 4.21 மீட்டர் நீளம் கொண்ட வாகனம் ஆகும்.

புதிய Renault Megane E-Tech வெளியீடு... இந்த மின்சார காரோட பயண தூரம் எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இதேபோல் இதன் வீல் பேஸ் 2.7 மீட்டராக இருக்கின்றது. மேலும், இக்காரின் ஒட்டுமொத்த எடை 1,624 கிலோவாக இருக்கின்றது. இத்துடன் இக்காரை மிக சிறந்த டைனோமிக்ஸில் ரெனால்ட் வடிவமைத்திருக்கின்றது. ஆகையால், ரேஞ்ஜ் வெளிப்பாடு மற்றும் திறன் வெளிப்பாட்டில் எந்த குறைபாடும் இருக்காது என்பது தெரிகின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் வாகனமாகவே மீகேன் இ-டெக் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault reveals megane e tech electric suv in iaa munich 2021
Story first published: Monday, September 6, 2021, 20:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X