ரெனால்ட் கிகர் தயாரிப்பு நிலை வெர்ஷன் ஜனவரி 28ம் தேதி வெளியீடு... குறைந்த விலையில் விற்பனைக்கு வரப்போகுது...

ரெனால்ட் கிகர் காரின் தயாரிப்பு நிலை வெர்ஷன் வரும் ஜனவரி 28ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரெனால்ட் கிகர் தயாரிப்பு நிலை வெர்ஷன் ஜனவரி 28ம் தேதி வெளியீடு... குறைந்த விலையில் விற்பனைக்கு வரப்போகுது...

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய கார்கள் விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன. வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்துள்ள அமோக வரவேற்பே இதற்கு முக்கியமான காரணம். கியா சொனெட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகிய கார்கள் கடந்த 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

ரெனால்ட் கிகர் தயாரிப்பு நிலை வெர்ஷன் ஜனவரி 28ம் தேதி வெளியீடு... குறைந்த விலையில் விற்பனைக்கு வரப்போகுது...

2020ம் ஆண்டின் கடைசியில், அதாவது கடந்த டிசம்பர் 2ம் தேதி நிஸான் மேக்னைட் காரும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மிகவும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டதால் நிஸான் மேக்னைட் காருக்கு 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. அத்துடன் 1.80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காரை வாங்குவது தொடர்பாக விசாரித்துள்ளனர்.

ரெனால்ட் கிகர் தயாரிப்பு நிலை வெர்ஷன் ஜனவரி 28ம் தேதி வெளியீடு... குறைந்த விலையில் விற்பனைக்கு வரப்போகுது...

சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் ஏற்கனவே கடும் போட்டி நிறைந்தது. இதில் நிஸான் மேக்னைட்டின் வருகை போட்டியை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது. இந்த வரிசையில் போட்டியை இன்னும் அதிகரிக்க செய்யும் வகையில் மற்றொரு காரும் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. ரெனால்ட் கிகர் (Renault Kiger) காரை பற்றிதான் இங்கே பேசி கொண்டுள்ளோம்.

ரெனால்ட் கிகர் தயாரிப்பு நிலை வெர்ஷன் ஜனவரி 28ம் தேதி வெளியீடு... குறைந்த விலையில் விற்பனைக்கு வரப்போகுது...

ரெனால்ட் கிகர் காரின் கான்செப்ட் மாடல் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அப்போதே இதன் டிசைன் அனைவரையும் கவர்ந்தது. இந்த சூழலில் ரெனால்ட் கிகர் காரின் தயாரிப்பு நிலை வெர்ஷன் வரும் ஜனவரி 28ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. இதை தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் ரெனால்ட் கிகர் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் கிகர் தயாரிப்பு நிலை வெர்ஷன் ஜனவரி 28ம் தேதி வெளியீடு... குறைந்த விலையில் விற்பனைக்கு வரப்போகுது...

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் நிஸான் மேக்னைட் உள்ளிட்ட கார்களுடன் ரெனால்ட் கிகர் போட்டியிடும். ரெனால்ட் கிகர் காரில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் கிகர் தயாரிப்பு நிலை வெர்ஷன் ஜனவரி 28ம் தேதி வெளியீடு... குறைந்த விலையில் விற்பனைக்கு வரப்போகுது...

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி தேர்வுகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் ரெனால்ட் கிகர் காரில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

ரெனால்ட் கிகர் தயாரிப்பு நிலை வெர்ஷன் ஜனவரி 28ம் தேதி வெளியீடு... குறைந்த விலையில் விற்பனைக்கு வரப்போகுது...

இதுதவிர ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல், சன் ரூஃப் உள்ளிட்ட வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் கிகர் காரின் தொழில்நுட்ப விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தயாரிப்பு நிலை வெர்ஷன் வெளியிடப்படும்போது கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம்.

ரெனால்ட் கிகர் தயாரிப்பு நிலை வெர்ஷன் ஜனவரி 28ம் தேதி வெளியீடு... குறைந்த விலையில் விற்பனைக்கு வரப்போகுது...

நிஸான் மேக்னைட் காரை போலவே ரெனால்ட் கிகர் காரும் மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி ரெனால்ட் கிகர் காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 5 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 9.50 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் (எக்ஸ் ஷோரூம்).

More from DriveSpark

Article Published On: Tuesday, January 5, 2021, 18:30 [IST]
English summary
Renault To Unveil Production-Spec Kiger On January 28 - Here Are All The Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+