வாடிக்கையாளர்கள் குறைந்தனர், செலிரியோவின் விற்பனையை நிறுத்தி கொண்டது மாருதி சுஸுகி!!

மாருதி செலிரியோ காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது. இதனால் புதிய தலைமுறை செலிரியோ கார் எப்போது அறிமுகமாகும் என்பது உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வாடிக்கையாளர்கள் குறைந்தனர், செலிரியோவின் விற்பனையை நிறுத்தி கொண்டது மாருதி சுஸுகி!!

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் செலிரியோ மாடலை முதன்முறையாக 2014இல் அறிமுகப்படுத்தியது. ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டட்-மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் கொண்டுவரப்பட்டதால் செலிரியோவிற்கு துவக்கத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது.

வாடிக்கையாளர்கள் குறைந்தனர், செலிரியோவின் விற்பனையை நிறுத்தி கொண்டது மாருதி சுஸுகி!!

பட்ஜெட் விலையில் மக்கள் மிகவும் விரும்பி வாங்கக்கூடிய ஹேட்ச்பேக் காராக செலிரியோ விளங்கினாலும் அதிகரித்துவரும் போட்டியினால் இதன் புதிய தலைமுறையை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் உள்ளது.

வாடிக்கையாளர்கள் குறைந்தனர், செலிரியோவின் விற்பனையை நிறுத்தி கொண்டது மாருதி சுஸுகி!!

இந்த நிலையில் தான் தற்போது செலிரியோவின் விற்பனையை மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் செலிரியோவின் விற்பனையும் பெரிய அளவில் குறைந்து வருகிறது.

வாடிக்கையாளர்கள் குறைந்தனர், செலிரியோவின் விற்பனையை நிறுத்தி கொண்டது மாருதி சுஸுகி!!

2020 ஜூன் மாதத்தில் மொத்தமாக 50 ஆயிரத்திற்கு சற்று அதிகமான கார்களையே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இருப்பினும் அந்த மாதத்திலேயே 4,145 செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

வாடிக்கையாளர்கள் குறைந்தனர், செலிரியோவின் விற்பனையை நிறுத்தி கொண்டது மாருதி சுஸுகி!!

ஆனால் இம்முறை 1.24 லட்ச கார்களை மாருதி விற்பனை செய்த போதிலும் அதில் வெறும் 752 செலிரியோ கார்கள் மட்டுமே அடங்குகின்றன. 2021 மே மாதத்தில் (159) அதனை காட்டிலும் குறைவு. இதில் இருந்து வாடிக்கையாளர்கள் அடுத்த தலைமுறை செலிரியோவை எதிர்பார்க்கிறார்கள் என்பது தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் குறைந்தனர், செலிரியோவின் விற்பனையை நிறுத்தி கொண்டது மாருதி சுஸுகி!!

இந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற புதிய தலைமுறை செலிரியோ கார் பல முறை சோதனை ஓட்டங்களின் போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் குறைந்தனர், செலிரியோவின் விற்பனையை நிறுத்தி கொண்டது மாருதி சுஸுகி!!

தோற்றத்தில் புதிய தலைமுறைக்கும் தற்போது விற்பனை நிறுத்தப்பட்டுள்ள செலிரியோவிற்கும் இடையில் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இருக்காது. ஆனால் இந்த புதிய தலைமுறை ஹேட்ச்பேக் கார் எடைகுறைவான ஹெர்டெக் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படவுள்ளது.

வாடிக்கையாளர்கள் குறைந்தனர், செலிரியோவின் விற்பனையை நிறுத்தி கொண்டது மாருதி சுஸுகி!!

இதே ப்ளாட்ஃபாரத்தில் தான் வேகன்ஆர், இக்னிஸ், ஸ்விஃப்ட், எஸ்-பிரெஸ்ஸோ, பலேனோ உள்ளிட்டவையும் தயாரிக்கப்படுகின்றன. இதனால் உருவத்தில் சற்று பெரியதாக புதிய செலிரியோ இருக்கலாம்.

Most Read Articles

English summary
Current-Gen Maruti Celerio Discontinued, New-Gen Coming This Year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X