ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை மிதக்கும் வாகனம்போல் மாற்றிய பிரபல பாடகர்... யார் அந்த பாடகர் தெரியுமா?...

விலையுயர்ந்த சொகுசு காரை மிதக்கும் காரைப் போல் பிரபல ஹாலிவுட் பாப் பாடகர் ஒருவர் மாற்றியமைத்திருக்கின்றார். இந்த சம்பவம் பற்றிய மேலும் பல தகவலை இப்பதிவில் காணலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை மிதக்கும் வாகனம்போல் மாற்றிய பிரபல பாடகர்... யார் அந்த பாடகர் தெரியுமா?...

உலகின் சிறப்பு வாய்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தேவையான சிறப்பு வசதிகளை மாடிஃபிகேஷன் வாயிலாக வழங்கி வருகின்றது. அதாவது, தன்னுடைய கார்களில் வழக்கமாக வழங்கும் சிறப்பு வசதிகளைத் தாண்டியும் அதிக வசதியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மாடிஃபிகேஷன் வாயிலாக பல்வேறு சொகுசு வசதிகளை கூடுதலாக வழங்கி வருகின்றது.

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை மிதக்கும் வாகனம்போல் மாற்றிய பிரபல பாடகர்... யார் அந்த பாடகர் தெரியுமா?...

இத்தைகய சிறப்பு வசதியை ரோல்ஸ் ராய்ஸ் வழங்குவதன் காரணத்தினாலயே மிகப் பெரிய தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்கள் பலர் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்நிறுவனம், காரின் உட்பகுதியை பிரம்மிக்க வைக்குமளவிற்கு மிக அதிக சிறப்புகள் கொண்ட வாகனமாக மாற்றி வழங்கி வருகின்றனர்.

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை மிதக்கும் வாகனம்போல் மாற்றிய பிரபல பாடகர்... யார் அந்த பாடகர் தெரியுமா?...

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்த சேவையை மிஞ்சுமளவிற்கு தனியார் வாகன மாடிஃபிகேஷன் நிறுவனத்தின் வாயிலாக பிரபல ஹாலிவுட் பாப் பாடகர் ஒருவர் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை மிதக்கும் வாகனத்தைப் போல் மாற்றியமைத்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை மிதக்கும் வாகனம்போல் மாற்றிய பிரபல பாடகர்... யார் அந்த பாடகர் தெரியுமா?...

ஜஸ்டின் பைபர், இவரே ரோல்ஸ் ராய்ஸ் காரை ஓர் மிதக்கும் வாகனத்தைப் போல் மாற்றியமைத்தவர் ஆவார். இவர், பிற ரோல்ஸ் ராய்ஸ் கார் உரிமையாளர்களிடத்தில் இருந்து மாறுபடும் விதமாக விசித்திரமான செயலில் ஈடுபட்டிருக்கின்றார். நாங்கள் மேலே கூறியதைப் போல் பெரும்பாலான ரோல்ஸ் ராய்ஸ் கார் உரிமையாளர்கள் தங்களின் காரை அதிக சொகுசு வசதி நிறைந்ததாகவே மாற்றியமைப்பர்.

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை மிதக்கும் வாகனம்போல் மாற்றிய பிரபல பாடகர்... யார் அந்த பாடகர் தெரியுமா?...

ஆனால், பாப் பாடகர் ஜஸ்டின் பைபர், தனது ரோல்ஸ் ராய்ஸ் காரின் உருவத்தை மாற்றியமைத்திருக்கின்றார். இதனால், அவரது ரோல்ஸ் ராய்ஸ் வ்ரெய்த் மாடல் சொகுசு கார் இதுவரை எந்தவொரு சாலையும் கண்டிராத விநோத வாகனமாக மாறியிருக்கின்றது.

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை மிதக்கும் வாகனம்போல் மாற்றிய பிரபல பாடகர்... யார் அந்த பாடகர் தெரியுமா?...

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அண்மையில் 103 இஎக்ஸ் எனும் கான்செப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காரின் உருவத்தையே ஜஸ்டின் பைபர் தனது வ்ரெய்த் காருக்கு வழங்கியிருக்கின்றார். 103இஎக்ஸ் மாடல் ஓர் பூஜ்ஜியம் உமிழ்வு கொண்டு வாகனம் ஆகும். அதாவது, இது ஓர் மின்சார வாகனம் ஆகும். இந்த வாகனத்தின் உருவ தோற்றத்தை ஜஸ்டின் பிபர் தனது காருக்கு வழங்கியிருக்கின்றார்.

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை மிதக்கும் வாகனம்போல் மாற்றிய பிரபல பாடகர்... யார் அந்த பாடகர் தெரியுமா?...

பாடகர் ஜஸ்டின் பிபர் இடம் எக்கசக்கமான சொகுசு மற்றும் விலையுயர்ந்த கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஃபெர்ராரி, லம்போர்கினி, மெர்சிடிஸ் ஏஎம்ஜி, ஆடி ஆர்8, ரேஞ்ஜ் ரோவர் எஸ்யூவி மற்றும் பல்வேறு நிறுவனங்களின் சூப்பர் கார்களையும் இவர் பயன்படுத்தி வருகின்றார்.

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை மிதக்கும் வாகனம்போல் மாற்றிய பிரபல பாடகர்... யார் அந்த பாடகர் தெரியுமா?...

இம்மாதிரியான சூழ்நிலைியல் தனது 6.22 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு காருக்கு கூடுதல் செலவில் மிதக்கும் காரின் உருவத்தை அவர் வழங்கியிருக்கின்றார். இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் 6.6 லிட்டர், வி12 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை மிதக்கும் வாகனம்போல் மாற்றிய பிரபல பாடகர்... யார் அந்த பாடகர் தெரியுமா?...

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 624 பிஎச்பி மற்றும் 820 என்எம் டார்க்கை திறனை வெளியேற்றும் திறன் கொண்டது. இது 4 இருக்கைக்களைக் கொண்ட இரு கதவுகளுடைய கூபே ரக காராகும். மிக முக்கியமான நிகழ்வுகள் போன்ற ஒரு சிலவற்றிற்காக மட்டுமே இக்காரை ஜஸ்டின் பிபர் பயன்படுத்தி வருகின்றார். இது அவருக்கு மிகவும் பிடித்தமான கார்களில் ஒன்று காரணத்தினாலேயே பல லட்சங்கள் செலவில் இந்த புதிய உருவத்தை ரோல்ஸ் ராய்ஸ் வ்ரெய்த் காருக்ககு அவர் வழங்கியிருக்கின்றார்.

Most Read Articles

English summary
Rolls Royce Wraith Luxury Coupe Modified Into Floating Car. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X