டாடாவுக்கு சளைச்சது இல்ல... மஹிந்திரா நிறுவன கார்களின் பாதுகாப்பு ரேட்டிங் எவ்ளோ தெரியுமா? ஒவ்வொண்ணும் சூப்பர்

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடாவுக்கு சளைச்சது இல்ல... மஹிந்திரா நிறுவன கார்களின் பாதுகாப்பு ரேட்டிங் எவ்ளோ தெரியுமா? ஒவ்வொண்ணும் சூப்பர்

இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் கார்கள் பாதுகாப்பானவை கிடையாது என்ற பேச்சு முன்பெல்லாம் இருந்து வந்தது. ஆனால் தற்போது குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் 'மேட் இன் இந்தியா' கார்கள் தொடர்ச்சியாக அசத்தி வருகின்றன. டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார்தான் இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது.

டாடாவுக்கு சளைச்சது இல்ல... மஹிந்திரா நிறுவன கார்களின் பாதுகாப்பு ரேட்டிங் எவ்ளோ தெரியுமா? ஒவ்வொண்ணும் சூப்பர்

குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் இந்திய கார் டாடா நெக்ஸான். இதற்கு அடுத்து அதே டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் மற்றும் பன்ச் ஆகிய கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தி விட்டன.

டாடாவுக்கு சளைச்சது இல்ல... மஹிந்திரா நிறுவன கார்களின் பாதுகாப்பு ரேட்டிங் எவ்ளோ தெரியுமா? ஒவ்வொண்ணும் சூப்பர்

இதுதவிர டாடா நிறுவனத்தின் டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார்களும் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் அசத்தியுள்ளன. இந்த இரண்டு கார்களும் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன. டாடா டிகோர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் கூட குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

டாடாவுக்கு சளைச்சது இல்ல... மஹிந்திரா நிறுவன கார்களின் பாதுகாப்பு ரேட்டிங் எவ்ளோ தெரியுமா? ஒவ்வொண்ணும் சூப்பர்

வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான காரை வழங்குவதற்காக டாடா நிறுவனம் மெனக்கெடுவதை நம்மால் கண் கூடாக காண முடிகிறது. டாடா நிறுவனத்திற்கு இணையாக தற்போது இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனமும் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறி கொண்டிருக்கிறது. இது இந்திய கார்கள் பாதுகாப்பற்றவை என்ற வாதத்தை சுக்குநூறாக நொறுக்கி வருகிறது.

டாடாவுக்கு சளைச்சது இல்ல... மஹிந்திரா நிறுவன கார்களின் பாதுகாப்பு ரேட்டிங் எவ்ளோ தெரியுமா? ஒவ்வொண்ணும் சூப்பர்

டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் முதல் முறையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை தன்வசப்படுத்தியபோது, போட்டி நிறுவனம் என்று பாராமல், இந்திய கார் என்ற அடிப்படையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது பாராட்டுக்களை தெரிவித்தார். அத்துடன் 'மேட் இன் இந்தியா' கார்கள் பாதுகாப்பானவை என்பதை நிரூபிப்போம் என்ற சபதத்தையும் ஏற்றார்.

டாடாவுக்கு சளைச்சது இல்ல... மஹிந்திரா நிறுவன கார்களின் பாதுகாப்பு ரேட்டிங் எவ்ளோ தெரியுமா? ஒவ்வொண்ணும் சூப்பர்

இதன் விளைவாக மஹிந்திரா நிறுவனம் தற்போது தனது 2 கார்களுக்கு குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று விட்டது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆகியவைதான் அந்த இரண்டு கார்கள். இந்த 2 கார்களுமே குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளன.

டாடாவுக்கு சளைச்சது இல்ல... மஹிந்திரா நிறுவன கார்களின் பாதுகாப்பு ரேட்டிங் எவ்ளோ தெரியுமா? ஒவ்வொண்ணும் சூப்பர்

அதே சமயம் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் இரண்டு கார்களுமே 4 ஸ்டார்களை பெற்றுள்ளன. புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால் மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17க்கு 16.42 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 37.44 புள்ளிகளையும் ஸ்கோர் செய்து அசத்தியுள்ளது.

டாடாவுக்கு சளைச்சது இல்ல... மஹிந்திரா நிறுவன கார்களின் பாதுகாப்பு ரேட்டிங் எவ்ளோ தெரியுமா? ஒவ்வொண்ணும் சூப்பர்

அதே நேரத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17க்கு 16.03 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 41.66 புள்ளிகளையும் ஸ்கோர் செய்துள்ளது. இதுதவிர மேலும் 2 கார்களுக்கு 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கையும் மஹிந்திரா நிறுவனம் பெற்றுள்ளது. மராஸ்ஸோ மற்றும் தார் ஆகியவைதான் அந்த இரண்டு கார்கள்.

டாடாவுக்கு சளைச்சது இல்ல... மஹிந்திரா நிறுவன கார்களின் பாதுகாப்பு ரேட்டிங் எவ்ளோ தெரியுமா? ஒவ்வொண்ணும் சூப்பர்

இந்த 2 கார்களுமே பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளன. ஆனால் மராஸ்ஸோ கார் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 2 ஸ்டார்களை மட்டுமே பெற்றுள்ளது. அதே நேரத்தில் தார் கார் குழந்தைகளுக்கான பாதுகாப்பிலும் 4 ஸ்டார்களை பெற்று அசத்தியுள்ளது. சமீப காலமாக மஹிந்திரா கார்களில் பாதுகாப்பு அதிகரித்து கொண்டே வருவதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

டாடாவுக்கு சளைச்சது இல்ல... மஹிந்திரா நிறுவன கார்களின் பாதுகாப்பு ரேட்டிங் எவ்ளோ தெரியுமா? ஒவ்வொண்ணும் சூப்பர்

புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால் மஹிந்திரா மராஸ்ஸோ கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17க்கு 12.85 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 22.22 புள்ளிகளையும் ஸ்கோர் செய்துள்ளது. அதே சமயம் மஹிந்திரா தார் கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17க்கு 12.52 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 41.11 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

டாடாவுக்கு சளைச்சது இல்ல... மஹிந்திரா நிறுவன கார்களின் பாதுகாப்பு ரேட்டிங் எவ்ளோ தெரியுமா? ஒவ்வொண்ணும் சூப்பர்

ஆக மொத்தத்தில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் கொண்ட 2 கார்களையும், 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் கொண்ட 2 கார்களையும் மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வரும் காலங்களில் மஹிந்திரா நிறுவனம் இன்னும் பாதுகாப்பான கார்களை தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் என நாம் உறுதியாக நம்பலாம்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Safest mahindra cars xuv300 xuv700 marazzo thar
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X