கல்யாண நாள் அன்று ஷாக்ஷிக்கு கிடைத்த பரிசு! இப்படி ஒரு பரிசை அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!

திருமண நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தோனியின் மனைவி ஷாக்ஷிக்கு அழகிய விண்டேஜ் கார் ஒன்று பரிசளிக்குப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கல்யாண நாள் அன்று ஷாக்ஷிக்கு கிடைத்த பரிசு! இப்படி ஒரு பரிசை அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி ஓர் மிகப் பெரிய கார் பிரியர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் தன்னுடைய இல்லத்தில் வாகனங்களுக்கு என்றே ஓர் பிரத்யேகமாக (பிரமாண்ட) பார்க்கிங் பகுதியையே உருவாக்கியிருக்கின்றனர்.

கல்யாண நாள் அன்று ஷாக்ஷிக்கு கிடைத்த பரிசு! இப்படி ஒரு பரிசை அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!

அதில் பல விலையுயர்ந்த மற்றும் அரிய வகை வாகனங்களே அதிகம் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, விண்டேஜ் வாகனங்கள் எனப்படும் பழைமையான வாகனங்களே மிக அதிகளவில் உள்ளன. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஓர் மிகப் பெரிய வாகன பிரியர் என்பதற்கு அவருடைய இந்த கராஜே சான்று.

கல்யாண நாள் அன்று ஷாக்ஷிக்கு கிடைத்த பரிசு! இப்படி ஒரு பரிசை அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!

இவருக்கு ஷாக்ஷி உடன் திருமணமாகி நேற்றுடன் 11 ஆண்டுகள் ஆகின்றன. நேற்றே (ஜூலை 4) இவர்களின் திருமண நாளாகும். இந்த தினத்தில் ஷாக்ஷிக்கு ஓர் அழகிய விண்டேஜ் காரை பரிசளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கல்யாண நாள் அன்று ஷாக்ஷிக்கு கிடைத்த பரிசு! இப்படி ஒரு பரிசை அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!

இதுகுறித்த தகவலை ஷாக்ஷியே அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். "திருமண நாள் பரிசுக்கு நன்றி" என கூறி காரின் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரில் அவர் பகிர்ந்திருக்கின்றார். ஆனால், அந்த அழகிய காரை பரிசளித்தது யார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.

கல்யாண நாள் அன்று ஷாக்ஷிக்கு கிடைத்த பரிசு! இப்படி ஒரு பரிசை அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!

தோனி ஓர் விண்டேஜ் வாகன பிரியர் என்பதால், அவரே அக்காரை பரிசளித்திருக்க வேண்டும் என யூகிக்கப்படுகின்றது. பரிசளிக்கப்பட்டிருப்பது ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காராகும். இதனை இந்தியாவில் ஒரு சிலர பயன்படுத்தி வருகின்றனர்.

கல்யாண நாள் அன்று ஷாக்ஷிக்கு கிடைத்த பரிசு! இப்படி ஒரு பரிசை அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!

வாகனங்கள் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர்களே இக்காரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது தோனியும் இணைந்திருக்கின்றார். காரின் புகைப்படம் தற்போது தோனியின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. இவர் தற்போது கிரிக்கெட் போட்டிகளை விட்டு வெளியே வந்திருந்தாலும், ரசிகர்கள் பட்டாளம் சற்றும் குறையாமல் இருக்கின்றது.

கல்யாண நாள் அன்று ஷாக்ஷிக்கு கிடைத்த பரிசு! இப்படி ஒரு பரிசை அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!

தோனி மற்ற கார் பிரியர்களிடம் இருந்து சற்று மாறுபட்டவராக தென்படுகின்றார். தன்னுடைய வாகன நிறுத்துமிடத்தில் விலையுயர்ந்த வாகனங்களைக் காட்டிலும் விண்டேஜ் மற்றும் அரிய ரக வாகனங்களே பெருமளவில் இருக்கின்றன. இதன் வரிசையிலேயே புதிதாக மற்றுமொரு விண்டேஜ் கார் இணைந்திருக்கின்றது.

கல்யாண நாள் அன்று ஷாக்ஷிக்கு கிடைத்த பரிசு! இப்படி ஒரு பரிசை அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!

முக்கியமாக தோனியிடத்தில் பல அரிய வகை இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. இவற்றை நிறுத்துவதற்கென கண்காட்சியகம் போன்ற ஓர் பார்க்கிங் பகுதியை அவர் நிறுவியிருக்கின்றார். அதில், யமஹா ஆர்டி350, ஆர்எக்ஸ்100, நிஞ்சா எச்2 போன்ற பல அரிய வகை பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

இதுமட்டுமின்றி பிஎஸ்ஏ, ஹார்லி டேவிட்சன் போன்ற விண்டேஜ் ப்ராண்டுகளின் பைக்குகளும் அவரிடத்தில் உள்ளன. இதுதவிர, மிக அரிய ரக காரான நிஸான் 1 டன் ட்ரக், ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ் ஐ போன்ற பாரம்பரியமிக்க கார்களும் அவரிடத்தில் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Sakshi Dhoni Reveals Their Special Day Gift. Read In Tamil.
Story first published: Monday, July 5, 2021, 13:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X