இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் சீட் அரோனா கார்!! எதற்காக இருக்கும்?
சீட் அரோனா கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சீட் அரோனா கார் இந்தியாவில் விற்பனையில் இல்லை. எதிர்காலத்திலும் விற்பனையாவது போல் தெரியவில்லை. ஆனால் இந்த கார் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதற்கு காரணம் உண்டு.

அதாவது ஃபோக்ஸ்வேகன் -ஸ்கோடா கூட்டணியில் அடுத்ததாக வெளிவரவுள்ள மாடல்கள் அனைத்தும் எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்படவுள்ளன. இவற்றில் பயன்படுத்தப்படவுள்ள பாகங்களை சோதனை செய்வதற்காகவே இதே ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்ட சியட் அரோனா சாலை சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் இருந்து அடுத்ததாக டைகுனும், ஸ்கோடா பிராண்டில் இருந்து விஷன் இன் கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட குஷாக் எஸ்யூவியும் வெளிவரவுள்ளது. இந்த சோதனை சியட் அரோனா காரின் நீளம் 4.14 மீட்டர் ஆக உள்ளது.

இதனால் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் கார்களின் நீளத்தை 4.2 மீட்டர் அளவில் எதிர்பார்க்கலாம். ரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்களில் காரின் பின்பக்கத்தை மட்டுமே பார்க்க முடிகிறது.

பின்பக்கத்தில் காரின் லோகோ மறைக்கப்பட்டுள்ளது. எல்இடி டெயில்லேம்ப்கள் முக்கோண வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த சியட் அரோனா காரில் க்ரூஸ் கண்ட்ரோல், அதிவேகம் எச்சரிப்பான், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 8-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டிருக்கலாம்.
உலகளாவிய என்சிஏபி சோதனையில் 5-நட்சத்திரங்களை பெற்றுள்ள இந்த சியட் அரோனாவில் 1.5 லிட்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் டைகுன் மற்றும் விஷன் இன் காரில் வழங்கப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications








