Just In
- 1 hr ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் உச்சகட்ட போட்டி! புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸாவை களமிறக்கும் மாருதி சுஸுகி
விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் தயாராகி வருகிறது.

இந்திய சந்தையில் விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் அடுத்த தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஆட்டோகார் இந்தியா தளம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது விற்பனையில் இருந்து வரும் மாடலுடன் ஒப்பிடும்போது புதிய தலைமுறை மாடலின் டிசைனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் கேபினும் மேம்படுத்தப்படவுள்ளது. மேலும் புதிய வசதிகளும், உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன. காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய தலைமுறை மாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி நடப்பு ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விற்பனைக்கு வரவிருப்பது மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் இரண்டாவது தலைமுறை மாடல் ஆகும்.

டிசைன் உள்ளிட்ட அம்சங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டாலும், தற்போதைய தலைமுறை மாடலின் பரிமாணங்கள்தான் அடுத்த தலைமுறை மாடலுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புதிய தலைமுறை மாடலின் இன்டீரியரை பற்றி பெரிதாக தகவல்கள் கிடைக்கவில்லை.

இருந்தாலும் தற்போதைய மாடலுடன் ஒப்பிடும்போது கேபினில் இடவசதி சிறப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் உடன் பெரிய டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

இதுதவிர வயர்லெஸ் சார்ஜிங், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் தற்போது வழங்கப்பட்டு வரும் 1.5 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் புதிய தலைமுறை மாடலுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம். அதே நேரத்தில் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியில் மாருதி சுஸுகி நிறுவனம் டீசல் இன்ஜினை மீண்டும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

ஏனெனில் அதன் பெரும்பாலான போட்டி மாடல்கள் டீசல் இன்ஜின் தேர்வை கொண்டுள்ளன. விற்பனைக்கு வந்தவுடன், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, நிஸான் மேக்னைட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட காம்பேக்ட் எஸ்யூவிகளுக்கு, புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் தொடர்ந்து சவால் அளிக்கும்.