Just In
- 12 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 51 min ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
Don't Miss!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மாதத்திற்கு சராசரியாக 1.5 லட்ச கார்களை விற்பனை செய்யக்கூடிய மாருதி-க்கா இந்த நிலைமை? 21.4% வளர்ச்சியுடன் டாடா!
கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் அதிகளவில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை அட்டவணையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் உள்ளது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு என்பதே இல்லை. இருப்பினும் கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் கார்கள் விற்பனை சுமார் 36.6% குறைந்துள்ளது.
கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் 1,85,636 பயணிகள் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே கடந்த 2020ஆம் ஆண்டு இதே செப்டம்பரில் கிட்டத்தட்ட 2,92,858 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேபோல் இதற்கு முந்தைய 2021 ஆகஸ்ட் மாதத்துடனான ஒப்பிடுகையிலும் தற்போதைய விற்பனை எண்ணிக்கை 28.5% குறைவாகும்.
இவ்வாறு இந்தியாவில் கார்கள் விற்பனை பெரிய அளவில் குறைந்திருப்பதற்கு காரணம், இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுஸுகியின் விற்பனை கடந்த மாதத்தில் வழக்கத்தை காட்டிலும் பாதிக்குமேல் குறைந்துள்ளது. குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் செப்டம்பரில் கார்கள் தயாரிப்பை சுமார் 60% குறைத்து கொள்ளவுள்ளதாக மாருதி சுஸுகி அறிவித்திருந்தது.
இதனால் இந்த நிறுவனத்தின் கார்களை முன்பதிவு செய்தவர்களுக்கு குறித்த நேரத்தில் டெலிவிரி செய்ய முடியவில்லை. இதன் விளைவாகவே மாருதி சுஸுகி கார்களின் விற்பனை 2020 செப்டம்பரை காட்டிலும் 57.3% குறைந்துள்ளது. 2020 செப்டம்பரில் 1,47,912 மாருதி கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த மாதத்தில் வெறும் 63,111 கார்களே விற்கப்பட்டுள்ளன.
Rank | Brand | Sep'21 | Sep'20 | Growth (%) |
1 | Maruti Suzuki | 63,111 | 1,47,912 | -57.3 |
2 | Hyundai | 33,087 | 50,313 | -34.2 |
3 | Tata | 25,729 | 21,200 | 21.4 |
4 | Kia | 14,441 | 18,676 | -22.7 |
5 | Mahindra | 12,863 | 14,663 | -12.3 |
6 | Toyota | 9,284 | 8,116 | 14.4 |
7 | Renault | 7,326 | 8,805 | -16.8 |
8 | Honda | 6,765 | 10,199 | -33.7 |
9 | MG | 3,241 | 2,537 | 27.7 |
10 | Skoda | 3,027 | 1,312 | 130.7 |
11 | Nissan | 2,816 | 780 | 261 |
12 | Volkswagen | 2,563 | 2,026 | 26.5 |
13 | FCA | 1,311 | 554 | 136.6 |
14 | Citroen | 72 | - | - |
அதேபோல் மற்றொரு முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாயின் கார்கள் விற்பனையும் கடந்த மாதத்தில் 34.2% சரிந்துள்ளது. கடந்த செப்டம்பரில் மொத்தம் 33,087 ஹூண்டாய் கார்கள் இந்தியாவிலும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 செப்டம்பரில் 50,313 கார்களை இந்த தென்கொரிய நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
இந்த இரு முன்னணி நிறுவனங்களின் விற்பனை குறைந்திருந்தாலும், டாடா மோட்டார்ஸின் பயணிகள் கார்கள் விற்பனை 21.4% அதிகரித்துள்ளது. 2020 செப்டம்பரில் 21,200 டாடா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால் கடந்த மாதத்தில் 25,719 டாடா கார்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த வகையில் டாடா நிறுவனத்தின் கார்கள் விற்பனை 21.4% உயர்ந்துள்ளது.
கார்களை சந்தைப்படுத்துவதில் டாடா மோட்டார்ஸின் செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக மிக சிறப்பாக இருந்து வருகிறது. இதுவே இந்த 21.4% வளர்ச்சிக்கு காரணமாகும். அதிலும் குறைக்கடத்திகளின் உலகளாவிய பற்றாக்குறையால் மாருதி சுஸுகி, ஹூண்டாய் போன்ற முன்னணி நிறுவனங்களே ஆட்டம் கண்டுள்ள தற்போதைய சூழலில் டாடாவின் விற்பனை அதிகரித்து இருப்பது தான் இதில் ஹைலைட்டே.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி மாடல் இன்று (அக்டோபர் 4) வெளியிடப்பட உள்ளதால் டாடா மோட்டார்ஸின் விற்பனை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்து இந்த லிஸ்ட்டில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் கியா & மஹிந்திரா நிறுவனங்கள் முறையே 14,441 மற்றும் 12,863 யூனிட் கார்களின் விற்பனை உடன் உள்ளது.
2020 செப்டம்பர் மாத விற்பனை உடன் இவை இரண்டின் விற்பனையும் முறையே 22.7% & 12.3% குறைந்துள்ளது. ஆறாவது இடத்தில் ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா உள்ளது. கடந்த மாதத்தில் 14.4% வளர்ச்சி உடன் 9,284 கார்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதனுடன் கடந்த மாதத்தில் ஸ்கோடா, நிஸான் மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களின் விற்பனையும் 2020 செப்டம்பரை காட்டிலும் அதிகரித்துள்ளதை மேலுள்ள லிஸ்ட்டில் காணலாம்.
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!