கார் கேபினின் சூட்டை குறைப்பதற்கு எளிய வழி இதோ!! ஆனால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்!

இந்தியாவில் கோடை காலம் தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. சமீப நாட்களாக காலை நேரத்திலேயே சூரியன் சுட்டெரிப்பதை நம்மால் உணர முடிகிறது. இந்த சூட்டில் இருந்து தப்பிக்க என்னென்ன வழிகள் உள்ளதோ அத்தனையையும் மக்கள் முயற்சி செய்து பார்த்து வருகின்றன.

கார் கேபினின் சூட்டை குறைப்பதற்கு எளிய வழி இதோ!! ஆனால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்!

இதில் மக்களின் பிரதான வழியாக இருப்பது ஏசி தான். கிராமங்களிலாவது மரங்கள் அதிகமாக இருக்கும் வெயில் அவ்வளவாக தெரியாது. வெயில் அதிகமானாலும் மர நிழல்களில் ஒதுங்கிவிடலாம்.

கார் கேபினின் சூட்டை குறைப்பதற்கு எளிய வழி இதோ!! ஆனால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்!

ஆனால் நகர்புறத்தில் வசிப்பவர்களின் பாடு தான் திண்டாட்டமாக உள்ளது. இதனால் வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ, முக்கியமாக ஏசி இருக்க வேண்டும் என்றாகிவிட்டது. அதிலும் பயணம் செய்யும் கார்களில் ஏசி இல்லை என்றால் பயணத்தை ரத்து செய்கின்றவர்கள் கூட உள்ளனர்.

கார் கேபினின் சூட்டை குறைப்பதற்கு எளிய வழி இதோ!! ஆனால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்!

இதனால் தற்போது உள்ள கார்கள் பெரும்பான்மையானவற்றில் ஏசி கட்டாயமாக வழங்கப்படுகிறது. ஆனால் பின் இருக்கை பயணிகளுக்கான ஏசி மிகவும் சில கார்களில் மட்டும் கொடுக்கப்படுகிறது. வழக்கமான முன்பக்க ஏசி காற்று காரின் பின்பக்கத்திற்கு வர சற்று நேரம் எடுத்து கொள்ளும்.

கார் கேபினின் சூட்டை குறைப்பதற்கு எளிய வழி இதோ!! ஆனால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்!

சிலரால் அதுவரையில் கூட சூட்டில் தாங்க முடியாது. அத்தகையவர்களுக்காகவே எளிமையாக காரின் பின் இருக்கைக்கான ஏசியை எவ்வாறு பொருத்துவது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். ஈஸி லைஃப் ஐடியாஸ் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவில் இத்தகைய ஏசியை வெறும் 80 ரூபாயில் காரில் கொண்டுவரலாம் என தெரிவித்துள்ளனர்.

Image Courtesy: EASY LIFE IDEAS

மைய கன்சோலை சுற்றிலும் கொடுக்கப்படுகின்ற திருகுகளை கழற்றுவதில் இருந்து இந்த வீடியோ ஆரம்பிக்கிறது. திருகுகளை கழற்றுவதால் ஒரு கட்டத்தில் மைய கன்சோலின் மேல் மூடியை எளிதாக கழற்றிவிடுகின்றனர்.

கார் கேபினின் சூட்டை குறைப்பதற்கு எளிய வழி இதோ!! ஆனால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்!

மைய கன்சோலின் மேல் மூடியின் பின்பக்க இறுதி முனையில் துளை ஒன்றை ஏற்படுத்தி அதில் பிளாஸ்டிக் குழாய் ஒன்றை பொருத்துகின்றனர். இதன் வழியாக தான் ஏசி காற்று காரின் பின்பக்கத்திற்கும் வருகிறது.

கார் கேபினின் சூட்டை குறைப்பதற்கு எளிய வழி இதோ!! ஆனால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்!

இந்த துளை யாராலும் எளிதில் அடையாளம் காண முடியாத வகையில் உள்ளதை சொல்லிதான் ஆக வேண்டும். இந்த பிளாஸ்டிக் குழாயின் மற்றொரு முனை டேஸ்போர்டில் முன் இருக்கை பயணிகளுக்கான ஏசி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

கார் கேபினின் சூட்டை குறைப்பதற்கு எளிய வழி இதோ!! ஆனால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்!

இந்த குறிப்பிட்ட காரில் முன்பக்க ஏசி காற்று ஆனது முன் இருக்கை பயணிகளின் முகத்திற்கு, கால்களுக்கென இரு விதமாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இரண்டையும் ஒரே நேரத்திலும் பெற முடியும். இதில் கால்களுக்கு செல்லும் ஏசி காற்று தான் பின் இருக்கை பயணிகளுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.

கார் கேபினின் சூட்டை குறைப்பதற்கு எளிய வழி இதோ!! ஆனால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்!

அதாவது புதியதாக ஏசி அமைப்பு எதுவும் உருவாக்கப்படவில்லை, இருப்பதையே தேவைக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தியுள்ளனர். அவ்வளவுதான். இத்தகைய அமைப்பில் சில பழுதுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது கியர் லிவருக்கு அடியில் தான் கொண்டுவரப்பட்டுள்ள புதிய பிளாஸ்டிக் குழாய் ஆனது கியர்பாக்ஸில் உருவாகும் வெப்பத்தினால் உருகி போகுவதற்கு வாய்ப்புள்ளது.

கார் கேபினின் சூட்டை குறைப்பதற்கு எளிய வழி இதோ!! ஆனால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்!

அவ்வாறு உருக நேர்ந்ததால் குழாயில் துளை ஏற்பட்டு ஏசி காற்று மைய கன்சோலின் உட்பகுதியை பதம் பார்க்கும். இதன் விளைவாக காரின் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு பாதிப்படைய வாய்ப்புள்ளது. அதேநேரம் கியர்பாக்ஸின் வெப்பத்தினால் குழாயில் இருந்து வெளியேறும் ஏசி காற்று சூடாகுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Install rear AC vents for just Rs. 80 Beat the heat. Read In Tamil.
Story first published: Saturday, April 24, 2021, 17:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X