ஷாருக்கானிடம் இப்படிப்பட்ட அரிய கார் எல்லாம் இருக்கா!! அப்போவே இதன் விலை எவ்வளவு தெரியுமா?

ஷாருக்கானிடம் உள்ள அரிய லெக்ஸஸ் கன்வெர்டபிள் கார் மும்பை விமான நிலையத்தில் காட்சி தந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஷாருக்கானிடம் இப்படிப்பட்ட அரிய கார் எல்லாம் இருக்கா!! அப்போவே இதன் விலை எவ்வளவு தெரியுமா?

பாலிவுட்டின் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான் கார்களை வாங்கி குவிப்பதில் ஆர்வமிக்கவர் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். இதனால் வெவ்வேறான சொகுசு கார்களில் அவர் மும்பை சாலைகளில் உலா வந்ததை பார்த்திருக்கிறோம்.

ஷாருக்கானிடம் இப்படிப்பட்ட அரிய கார் எல்லாம் இருக்கா!! அப்போவே இதன் விலை எவ்வளவு தெரியுமா?

இவரிடம் இருக்கும் பெரும்பான்மையான கார்கள் ஹூண்டாய் நிறுவனத்துடையது என கூறப்படுகிறது. இதனால்தான் என்னவோ ஹூண்டாய் மோட்ட்டார்ஸ் நிறுவனம் ஷாருக்கானை பிராண்ட் அம்பாஸிடராக அமர்த்தியுள்ளது.

ஷாருக்கானிடம் இப்படிப்பட்ட அரிய கார் எல்லாம் இருக்கா!! அப்போவே இதன் விலை எவ்வளவு தெரியுமா?

அதேநேரம் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ், ரேஞ்ச் ரோவர் எஸ்யூவிகள், பெண்ட்லீ காண்டினென்ஷியல் ஜிடி உள்பட அரிதான லெக்ஸஸ் எஸ்சி430 கன்வெர்டபிள் காருக்கும் உரிமையாளராக ஷாருக்கான் உள்ளார். இதில் சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும் லெக்ஸஸ் கன்வெர்டபிள் காரை மகளை வழியனுப்பி வைப்பதற்காக ஷாருக்கானே மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு ஓட்டி சென்றுள்ளார்.

ஷாருக்கான் மற்றும் அவரது மகள் சுஹானா கான் உடன் ஷாருக்கானின் மகனையும் ஹோம் பாலிவுட் என்ற யுடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவில் பார்க்க முடிகிறது. லெக்ஸஸ் எஸ்சி430 காரை பொறுத்தவரையில், தற்போதைய காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் இது பழமையான கார் ஆகும்.

ஷாருக்கானிடம் இப்படிப்பட்ட அரிய கார் எல்லாம் இருக்கா!! அப்போவே இதன் விலை எவ்வளவு தெரியுமா?

ஷாருக்கானின் கேரேஜில் பல ஆண்டுகளாக இருந்திருக்கும். ஆனால் வீடியோவில் கார் அவ்வளவு பழையதுபோல் தோற்றமளிக்கவில்லை, இதனால் இந்த லெக்ஸஸ்காரை ஷாருக்கான் அவ்வப்போது பராமரித்து வந்திருப்பதை அறிய முடிகிறது.

ஷாருக்கானிடம் இப்படிப்பட்ட அரிய கார் எல்லாம் இருக்கா!! அப்போவே இதன் விலை எவ்வளவு தெரியுமா?

கிட்டத்தட்ட 15 வருடம் பழையான காரான எஸ்சி430 கன்வெர்டபிள், 4 இருக்கைகளை கொண்ட இரு-கதவு காராகும். இதன் உலோக மேற்கூரையை ஒரு பொத்தானின் மூலம் பொனெட்டில் மடக்கி வைத்துவிடலாம். மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல் காரின் மலிவான மாற்று காராக கொண்டுவரப்பட்ட லெக்ஸஸ் எஸ்சி430-ல் 4.3 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு வந்தது.

ஷாருக்கானிடம் இப்படிப்பட்ட அரிய கார் எல்லாம் இருக்கா!! அப்போவே இதன் விலை எவ்வளவு தெரியுமா?

அதிகப்பட்சமாக 282 பிஎச்பி மற்றும் 419 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உதவியுடன் காரை அதிகப்பட்சமாக மணிக்கு 250கிமீ வேகத்தில் ஓட்டலாம். இதன் என்ஜின் உடன் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டது.

ஷாருக்கானிடம் இப்படிப்பட்ட அரிய கார் எல்லாம் இருக்கா!! அப்போவே இதன் விலை எவ்வளவு தெரியுமா?

0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 7 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த லெக்ஸஸ் எஸ்சி430 காரின் உட்புறத்தில் அலுமினியம் உள்ளீடுகள் உடன் இருக்கைகள் மற்றும் ஸ்டேரிங் சக்கரம் லெதரால் மூடப்பட்டுள்ளது.

தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்டு வழங்கப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் திரை நாவிகேஷனை வழங்கும் விதத்திலும், ப்ரீமியம் தோற்றத்திற்காக கதவு மற்றும் டேஸ்போர்டில் மரத்தினாலான பேனல்களும் பொருத்தப்பட்டுள்ளன.

ஷாருக்கானிடம் இப்படிப்பட்ட அரிய கார் எல்லாம் இருக்கா!! அப்போவே இதன் விலை எவ்வளவு தெரியுமா?

இப்போது விற்பனையில் இல்லா

த இந்த லெக்ஸஸ் காரின் விலை விற்பனையில் இருந்த சமயத்தில் ரூ.25 லட்சம் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கிங் கான் ஷாருக்கான் பலமுறை வெவ்வேறான சொகுசு கார்களில் காட்சி தந்திருந்தாலும், இந்த லெக்ஸஸ் கன்வெர்டபிள் காரில் அவரை பார்ப்பது இதுவே முதல்முறையாகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Shahrukh Khan’s rare Lexus convertible spotted outside Mumbai airport
Story first published: Saturday, February 6, 2021, 15:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X