"Tata கார்தான் என்னை காப்பாற்றியது"... நெகிழும் பிரபல பாடகி... அடேங்கப்பா இவ்ளோ மோசமான விபத்தா!

பெரும் விபத்தில் இருந்து தன்னை Tata கார்தான் காப்பாற்றியது என ஓர் மலையாள பாடகி தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

உறுதி மற்றும் பாதுகாப்பான வாகனங்களுக்கு பெயர்போனவையாக Tata Motors நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. இந்நிறுவனத்தின் மிக அதிக பாதுகாப்பான காராக Nexon காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் இருக்கின்றது. இந்த கார் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் பரிசோதனையில் ஐந்திற்கு ஐந்து நட்சத்திரங்களைப் பெற்று நாட்டின் மிக அதிக பாதுகாப்பான கார் என்ற பட்டத்தைச் சூடியிருக்கின்றது.

இதேபோன்று அதிக பாதுகாப்பான வாகனம் என்ற பெயரையே Tata Motors இன் மற்றுமொரு தயாரிப்பு தற்போது ஓர் பெண் பாடகியிடம் இருந்து தர சான்று பெற்றிருக்கின்றது. இந்த பட்டத்தைப் பெற்றிருப்பது Tata-வின் Hexa மாடல் காராகும். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் இம்தியாஸ் பீகம். இவரிடத்திலேயே நல்ல கார் என்ற தர சான்றை Hexa பெற்றிருக்கின்றது.

மிக சமீபத்தில் இம்தியாஸ் பீகம், தனது நண்பர் ஒருவருக்கு சொந்தமான Tata Hexa காரில் பயணித்துக் கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக விபத்தைச் சந்தித்திருக்கின்றார். இதனால் காரின் முன் பகுதி மிகக் கடுமையான சேதத்தைச் சந்தித்திருக்கின்றது. இருப்பினும், காருக்குள் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

நல்விஷயமாக அனைவரும் மிக பாதுகாப்பாக காருக்குள் இருந்து வெளியேறியிருக்கின்றனர். இந்த நிகழ்வுகுறித்த தகவலை பெண் பாடகி இம்தியாஸ் பீகம் தனது சமூக வலைதள பக்கம் வாயிலாக தெரிவித்திருக்கின்றார். குறிப்பாக, விபத்து நேர்ந்த கார் என்ன நிலையில் இருந்தது என்பது பற்றிய படத்தையும் அவர் வெளியிட்டிருக்கின்றார்.

அவர் வெளியிட்ட படங்களின்படி, Tata Hexa மிகக் கடுமையாக சேதமடைந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. இதுமாதிரியான விபத்தில் இருந்து பெண் பாடகி சிறு காயமுமின்றி தப்பித்திருக்கின்றார் என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக அமைந்துள்ளது. ஆனால், டாடா கார்கள் இதைவிட கொடிய விபத்துகளில் இருந்துகூட பயணிகளைக் காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

வெளிப்புறத்தில் மிகக் கடுமையாக Tata Hexa சேதமடைந்திருந்தாலும், அதன் உட்புறம் எந்த பாதிப்பையும் சந்திக்கவில்லை. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், விபத்திற்கு முன்னதாக அக்கார் எப்படி இருந்ததோ, அதுபோலவே விபத்திற்கு பின்னரும் சிறு பாதிப்பும் இன்றி காட்சியளிக்கின்றது. இதுகுறித்த படத்தையும் பாடகி வெளியிட்டிருக்கின்றார்.

மேலும், பெரும் விபத்தில் இருந்து தங்களை காத்த Tata Hexa காருக்கு மிகப் பெரிய நன்றி எனவும் அவர் புகழ் பாடியிருக்கின்றார். பெண் பாடகி இம்தியாஸ் பீகம் Toyota Liva காரை பயன்படுத்தி வருகின்றார். இந்த காரை சர்வீஸ் விட்டிருந்த காரணத்தினால், தனது நண்பரின் Tata Hexa காரை எடுத்துக் கொண்டு கோழிகோடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ள சென்றிருக்கின்றார்.

அப்போதே எதிர்பாராத விதமாக விடியற்காலை 4 மணியளவில் Tata Hexa விபத்தைச் சந்தித்திருக்கின்றது. மிகக் கொடிய இவ்விபத்தில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பியிருக்கின்றனர். இவ்விபத்தில் காரின் பின் பகுதி மட்டுமின்றி பின்பகுதியும் மிகக் கடுமையாக உருக்குலைந்திருக்கின்றது.

ஓர் லாரியை முந்திச் செல்ல முயன்றபோதே இவ்விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இருவரும் (லாரியும், ஹெக்ஸாவும்) ஒரே நேரத்தில் அதிக வேகத்தில் வாகனத்தை இயக்கியிருக்கின்றனர். அந்த நேரத்தில் மழை பொழிந்துக் கொண்டிருந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்திருக்கின்றது. இதன் விளைவாகவே மிகக் கடுமையான விபத்தை Tata Hexa சந்தித்துள்ளது.

குளோபல் என்சிஏபி அமைப்பு Tata Hexa காரை இன்னும் தனது மோதல் பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை. இதனை ஆய்வு செய்தாலும் நான்கிற்கும் அதிகமான பாதுகாப்பு தர நட்சத்திரையே பெறும் என இந்த சம்பவம் உறுதிப்படுத்துகின்றது. ஏற்கனவே Tata-வின் Nexon மற்றும் Altroz ஆகிய இரு கார்களும் ஐந்து நட்சத்திரங்களைப் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Source: Imthiyas Beegum

Tata நிறுவனம் ஹெக்ஸா காரை 2.2 லிட்டர் வாரிகோர் டீசல் எஞ்ஜினை பயன்படுத்தியுள்ளது. இது ஓர் பிஎஸ்4 ரக எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 150 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த காரின் விற்பனையை புதிய பிஎஸ்6 விதிகள் காரணமாக நிறுவனம் நிறுத்திவிட்டது. தற்போது நிறுவனம் Safari காரை இதற்கு பதிலாக இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Singer imthiyas beegum thanked to tata motors for hexa solid build quality
Story first published: Monday, August 23, 2021, 15:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X