“ஃபோர்டு போயாச்சு, அடுத்து நீங்க எப்போ சார்?” - நெட்டிசன் கேட்ட கேள்விக்கு நச்சுனு பதிலளித்த ஸ்கோடா சிஇஓ

அமெரிக்காவை சேர்ந்த பழமை வாய்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு சமீபத்தில் இந்தியாவில் இருந்து வெளியேற உள்ளதாக அறிவித்தது தான் கடந்த சில வாரங்களாக கார் ஆர்வலர்களிடையே பேச்சாக உள்ளது.

“ஃபோர்டு போயாச்சு, அடுத்து நீங்க எப்போ சார்?” - நெட்டிசன் கேட்ட கேள்விக்கு நச்சுனு பதிலளித்த ஸ்கோடா சிஇஓ

ஃபோர்டின் இந்த முடிவால் தற்சமயம் விற்பனையில் உள்ள ஃபோர்டு கார்களின் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட உள்ளது. அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்த தயாராகிய மாடல்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

“ஃபோர்டு போயாச்சு, அடுத்து நீங்க எப்போ சார்?” - நெட்டிசன் கேட்ட கேள்விக்கு நச்சுனு பதிலளித்த ஸ்கோடா சிஇஓ

ஏனெனில் ஃபோர்டின் குஜராத், சனத் தொழிற்சாலை மற்றும் சென்னை தொழிற்சாலை விரைவில் மூடப்பட உள்ளது. இதில் சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை சொந்தமாக்க டாடா மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகள் தமிழக முதலமைச்சரை சந்தித்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியானது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

“ஃபோர்டு போயாச்சு, அடுத்து நீங்க எப்போ சார்?” - நெட்டிசன் கேட்ட கேள்விக்கு நச்சுனு பதிலளித்த ஸ்கோடா சிஇஓ

வெளியேற்றத்திற்கு காரணமாக, கார்களின் விற்பனை சிறப்பாக இல்லாததினால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஃபோர்டு கூறியுள்ளது. 1995இல் நுழைந்து, இந்தியாவில் தொழிற்சாலை & விற்பனை மையங்களை அமைத்து கிட்டத்தட்ட 26 வருடங்களாக செயல்பட்டு வந்துள்ள இந்த அமெரிக்க நிறுவனம் உண்மையில் நமது இந்திய வாடிக்கையாளர்களை முழுவதுமாக புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.

“ஃபோர்டு போயாச்சு, அடுத்து நீங்க எப்போ சார்?” - நெட்டிசன் கேட்ட கேள்விக்கு நச்சுனு பதிலளித்த ஸ்கோடா சிஇஓ

ஃபோர்டு இந்தியாவையும் அமெரிக்காவிற்கு இணையாகவே வைத்து பார்த்தது. இதில் தான் அந்த நிறுவனம் தவறிழைத்துவிட்டது என்று சொல்ல வேண்டும். ஃபோர்டு போன்று வெளிநாட்டு சந்தைகளில் பிரபலமானதாக விளங்கும் சில பிராண்ட்கள் நம் நாட்டு சந்தையில் நீண்ட காலத்திற்கு தாக்கு பிடிக்காமல் விடைப்பெற்று சென்றுள்ளன.

“ஃபோர்டு போயாச்சு, அடுத்து நீங்க எப்போ சார்?” - நெட்டிசன் கேட்ட கேள்விக்கு நச்சுனு பதிலளித்த ஸ்கோடா சிஇஓ

செவ்ரோலெட், ஃபியாட் என இதற்கு உதாரணங்களை சொல்லி கொண்டே போகலாம். இதனாலேயே இந்தியர்களை கவர தவறிய நிறுவனம் விடைப்பெற்று செல்லும்போது, அதற்கு இணையாக கடந்த காலங்களில் கார்களை விற்பனை செய்துவரும் நிறுவனங்களை நெட்டிசன்கள் பார்க்க ஆரம்பித்துவிடுவர். அவ்வாறுதான் டுவிட்டர் ஓர் சம்பவம் நடைபெற்றுள்ளது.

“ஃபோர்டு போயாச்சு, அடுத்து நீங்க எப்போ சார்?” - நெட்டிசன் கேட்ட கேள்விக்கு நச்சுனு பதிலளித்த ஸ்கோடா சிஇஓ

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ஸாக் ஹோலிஸ் மற்றும் ஸ்கோடா நிறுவனத்தின் இந்திய டுவிட்டர் முகவரியை பதிவிட்டு ஒருவர், "ஃபோர்டை போல் நீங்களும் இந்தியாவை விட்டு வெளியேற திட்டமிட்டு வருகிறீர்களா?" என கேள்வி எழுப்பியுள்ளார். ஸாக் ஹோலிஸ் எப்போதுமே சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவ்-ஆக இருக்கக்கூடியவர்.

“ஃபோர்டு போயாச்சு, அடுத்து நீங்க எப்போ சார்?” - நெட்டிசன் கேட்ட கேள்விக்கு நச்சுனு பதிலளித்த ஸ்கோடா சிஇஓ

அதிலும் டுவிட்டரில் தன்னை மென்சன் செய்து நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிப்பார். அவ்வாறு தான் இந்த கேள்விக்கும் உடனே பதிலளித்த அவர், "இந்திய சந்தையை விட்டு வெளியேறுவதை பற்றி யோசிக்கிறோம் என்றால், ஏன் நாங்கள் கடந்த மூன்று வருடங்களில் 8000 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்துள்ளோம்?.

“ஃபோர்டு போயாச்சு, அடுத்து நீங்க எப்போ சார்?” - நெட்டிசன் கேட்ட கேள்விக்கு நச்சுனு பதிலளித்த ஸ்கோடா சிஇஓ

புதிய தயாரிப்புகளுடன் இந்தியாவில் நீண்ட கால எதிர்காலத்திற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்" என்றார். ஸ்கோடா சிஇஓ-வின் இந்த கூற்றை நாம் நம்ப வேண்டுமென்றால், இந்த செக் குடியரசு கார் பிராண்டின் இந்தியாவிற்கான எதிர்கால திட்டங்களை பற்றி நாம் பார்த்தாக வேண்டும். இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் உடன் இணைந்து ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் பணியாற்றி வருகிறது.

“ஃபோர்டு போயாச்சு, அடுத்து நீங்க எப்போ சார்?” - நெட்டிசன் கேட்ட கேள்விக்கு நச்சுனு பதிலளித்த ஸ்கோடா சிஇஓ

2019ஆம் ஆண்டில் இருந்து இருக்கும் இந்த கூட்டணியால், ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் (SAIPL), ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (VWIPL) மற்றும் ஃபோக்ஸ்வேகன் க்ரூப் சேல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (NSC) ஆகியவை மூன்றும் இணைத்து தற்போது ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் என அழைக்கப்பட்டு வருகிறது.

“ஃபோர்டு போயாச்சு, அடுத்து நீங்க எப்போ சார்?” - நெட்டிசன் கேட்ட கேள்விக்கு நச்சுனு பதிலளித்த ஸ்கோடா சிஇஓ

ஸ்கோடா நிறுவனம் மிக சமீபத்தில் அதன் குஷாக் காம்பெக்ட் எஸ்யூவி மாடலில் 6-காற்றுப்பைகளை அறிமுகப்படுத்தி இருந்தது. முன்பு 2 காற்றுப்பைகளை மட்டுமே பெற்றுவந்த ஸ்கோடா குஷாக், இந்த அறிமுகத்தினால் அதிகபட்சமாக 6 காற்றுப்பைகளை பெற்றுள்ளது. அதேநேரம் குஷாக் கார்கள் சிலவற்றில் பிரச்சனைகள் எழுவதாகவும் புகார்கள் எழுந்தன. அதற்கு தீர்வு உள்ளதாக ஸாக் ஹோலிஸ் தெரிவித்திருந்தார்.

“ஃபோர்டு போயாச்சு, அடுத்து நீங்க எப்போ சார்?” - நெட்டிசன் கேட்ட கேள்விக்கு நச்சுனு பதிலளித்த ஸ்கோடா சிஇஓ

இந்திய சந்தையில் அடுத்ததாக ஸ்கோடா பிராண்டில் இருந்து, விற்பனையில் போராடிவரும் ரேபிட் மாடலுக்கு மாற்றாக செடான் கார் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், எதிர்காலத்தில், அதாவது இன்னும் ஐந்து வருடங்களில் தங்களது முதல் எலக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் என்றும் சமீபத்தில் டுவிட்டரில் ஸாக் ஹோலிஸ் தெரிவித்திருந்தார்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
After Ford India exit, this automaker assures it will not abandon India.
Story first published: Thursday, September 30, 2021, 21:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X