2022 ஸ்கோடா ஃபேபியா காரின் உள்ளே இப்படிதான் இருக்கும்!! ஸ்கெட்ச் படம் வெளியீடு

2022 ஃபேபியா காரின் உட்புற கேபினை வெளிக்காட்டும் ஸ்கெட்ச் படத்தை ஸ்கோடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை பற்றிய கூடுதல் தகவல்களை இனி பார்ப்போம்.

2022 ஸ்கோடா ஃபேபியா காரின் உள்ளே இப்படிதான் இருக்கும்!! ஸ்கெட்ச் படம் வெளியீடு

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் உலக சந்தைக்களுக்காக தயாரித்து வரும் கார்களுள் புதிய தலைமுறை ஃபேபியாவும் ஒன்று. இந்த கார் இந்தியாவிலும் அறிமுகமாகுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

2022 ஸ்கோடா ஃபேபியா காரின் உள்ளே இப்படிதான் இருக்கும்!! ஸ்கெட்ச் படம் வெளியீடு

இதற்கிடையில் தான் தற்போது 2022 ஃபேபியாவின் உட்புற கேபினின் ஸ்கெட்ச் படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் இந்த ஹேட்ச்பேக் கார் 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரத்தை பெற்றுவரவுள்ளதை அறிய முடிகிறது.

2022 ஸ்கோடா ஃபேபியா காரின் உள்ளே இப்படிதான் இருக்கும்!! ஸ்கெட்ச் படம் வெளியீடு

இதனுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் மற்ற இணைப்பு தொழிற்நுட்ப வசதிகளை கொண்ட பெரிய மைய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் 2022 ஃபேபியாவின் கேபினில் எதிர்பார்க்கலாம்.

2022 ஸ்கோடா ஃபேபியா காரின் உள்ளே இப்படிதான் இருக்கும்!! ஸ்கெட்ச் படம் வெளியீடு

இவை மட்டுமின்றி புதிய ஃபேபியாவின் கேபினில் பிராண்டின் கஸ்டமைஸ்ட் செய்யக்கூடிய விர்டியுவல் காக்பிட், வண்ண நிறங்களில் ஹைலைட்களை கொண்ட டேஸ்போர்டின் இரு முனைகளில் வட்ட வடிவில் ஏசி துளைகள் உள்ளிட்டவையும் எதிர்பார்க்கப்படுகின்றன.

2022 ஸ்கோடா ஃபேபியா காரின் உள்ளே இப்படிதான் இருக்கும்!! ஸ்கெட்ச் படம் வெளியீடு

அதேபோல் வண்ண நிறங்களில் ஹைலைட்கள் கதவுகளின் உட்பக்கத்திலும் வழங்கப்படலாம். 2022 ஃபேபியா, பிராண்டின் எம்க்யுபி-ஏ0 ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

2022 ஸ்கோடா ஃபேபியா காரின் உள்ளே இப்படிதான் இருக்கும்!! ஸ்கெட்ச் படம் வெளியீடு

இந்த கட்டமைப்பின் விளைவாக காரின் பரிமாண அளவுகள் அனைத்தும் அதிகரித்துள்ளன. இதன் எதிரொலியாக உட்புற கேபின் முன் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கு நன்கு விசாலமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

2022 ஸ்கோடா ஃபேபியா காரின் உள்ளே இப்படிதான் இருக்கும்!! ஸ்கெட்ச் படம் வெளியீடு

நான்காம் தலைமுறை ஸ்கோடா ஃபேபியா உலகளவில் வரும் மே மாத துவக்கத்தில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது. அப்போது தான் காரை பற்றிய கூடுதல் விபரங்களை ஸ்கோடா நிறுவனம் வெளியிடும்.

2022 ஸ்கோடா ஃபேபியா காரின் உள்ளே இப்படிதான் இருக்கும்!! ஸ்கெட்ச் படம் வெளியீடு

இதனால் 2022 ஃபேபியா ஹேட்ச்பேக் காரை பற்றிய முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள இதன் உலகளாவிய வெளியீடு வரையில் காத்திருக்க வேண்டும். இந்த ஸ்கோடா கார் இந்தியாவிற்கும் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாக கூறியதை மறந்துவிட வேண்டாம்.

2022 ஸ்கோடா ஃபேபியா காரின் உள்ளே இப்படிதான் இருக்கும்!! ஸ்கெட்ச் படம் வெளியீடு

ஸ்கோடா ஃபேபியா காரின் முதல் தலைமுறை 1999ல் அறிமுகம் செய்யப்பட்டது. பல வெளிநாட்டு சந்தைகளில் ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வுகளுள் ஒன்றாக விளங்கும் ஃபேபியா இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
2022 Skoda Fabia interior design sketch released. Read Details In Tamil.
Story first published: Friday, April 30, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X