Just In
- 10 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 13 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 14 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 15 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- News
வேளச்சேரி 92 வது வாக்குச்சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு - வாக்காளர்கள் வாக்களிக்க ஆர்வம்
- Movies
நல்ல இதயம் நீங்கள்.. நிச்சயம் பூரண நலத்தோடு வருவீர்கள்.. விவேக்கிற்காக உருகும் பிரபலங்கள்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 17.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்கவும்…
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பென்ஸ், பிஎம்டபிள்யூ கார்களுக்கு சவால் கொடுத்து வரும் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 கார்!
பென்ஸ், பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களின் ஆரம்ப ரக சொகுசு கார்களுக்கு சவால் கொடுக்கும் வகையில் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 காரின் விற்பனை தொடர்ந்து சிறப்பாக இருந்து வருகிறது. இந்த காருக்கு இந்த அளவுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு இருந்து வருவதற்கான சில முக்கிய காரணங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் ஸ்கோடா ஆக்டேவியா காரின் அதிசெயல்திறன் மிக்க மாடலாக ஆக்டேவியா ஆர்எஸ்245 கார் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண ஆக்டேவியா காரைவிட கூடுதல் வசீகரம் மற்றும் செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வில் கிடைத்து வரும் இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 கார் அறிமுகம் செய்யப்பட்டது. மொத்தமாக 200 யூனிட்டுகள் மட்டுமே இந்தியாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால், எதிர்பாராவிதமாக இந்த காருக்கு அடுத்த சில மாதங்களிலேயே 200 யூனிட்டுகளுக்கும் முன்பதிவு முடிந்து போனது. தொடர்ந்து இந்த காரை வாங்குவதற்கு பல வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டியதால், முன்பதிவை தொடர்ந்து வருகிறது ஸ்கோடா நிறுவனம். இதனை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 கார் ரூ.36 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்களின் ஆரம்ப ரக சொகுசு செடான் கார்களுக்கு கிட்டத்தட்ட இணையான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும், இந்த காருக்கு தனி வாடிக்கையாளர் வட்டமும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விற்பனையும் இருந்து வருகிறது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 காரின் செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகிறது. இந்த கார் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதாவது, காரில் இந்திய விதிகளுக்கு ஏற்ப எந்த மாற்றங்களும் இல்லாமல் 2,500 யூனிட்டுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு புதிய விதிமுறையை வகுத்தது. அதன் அடிப்படையில்தான் இந்த கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 காரில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 242 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும் திறன் வாய்ந்தது. 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பேடில் ஷிஃப்ட் வசதியும் இருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கிறது.

இந்த காரின் செயல்திறன் மிக்க எஞ்சினுக்கு ஏற்றவாறு, இதன் சஸ்பென்ஷன் அமைப்பு தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் அதிக தரைப்பிடிப்பை வழங்கும் விசேஷ டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 6.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும்.

செயல்திறனும், சிறந்த கையாளுமையும் இந்திய வாடிக்கையாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுவதால், இந்த காருக்கு விலை சற்று அதிகமாக இருந்து வருகிறது. எனினும், இறக்குமதி கார் என்ற மதிப்பும், செயல்திறனும் இந்த காருக்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விற்பனை தொடர்ந்து வருகிறது எனினும், விலை இன்னும் சற்று குறைவாக இருந்தால் பெரிய அளவிலான விற்பனை எண்ணிக்கையை இந்த கார் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.