ஆக்டேவியா காரின் பெயர் பற்றிய சுவாரஸ்யம்... பகிர்ந்து கொண்ட ஸ்கோடா இந்தியா தலைவர்!

ஆக்டேவியா காரின் இந்திய அறிமுகத் தேதியை உறுதி செய்த கையோடு, இந்த காரின் பெயர் பற்றிய சுவாரஸ்யத் தகவலுடன் அறிமுக தேதியை உறுதி செய்துள்ளார் ஸ்கோடா இந்தியா தலைவர் ஸாக் ஹொல்லிஸ். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆக்டேவியா காரின் பெயர் பற்றிய சுவாரஸ்யம்... பகிர்ந்து கொண்ட ஸ்கோடா இந்தியா தலைவர்!

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட மாடலாக புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா பிரச்னை காரணமாக, இந்த காரின் அறிமுகம் தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டு வந்தது. வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டி இந்த காரின் வருகை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆக்டேவியா காரின் பெயர் பற்றிய சுவாரஸ்யம்... பகிர்ந்து கொண்ட ஸ்கோடா இந்தியா தலைவர்!

அதாவது, நான்காம் தலைமுறை ஆக்டேவியா கார் வரும் 10ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஸ்கோடா இந்தியா தலைவர் ஸாக் ஹொல்லிஸ் தெரிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக, ஆக்டேவியா காரின் பெயர் காரணம் குறித்த தகவலையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆக்டேவியா காரின் பெயர் பற்றிய சுவாரஸ்யம்... பகிர்ந்து கொண்ட ஸ்கோடா இந்தியா தலைவர்!

லத்தீன் மொழியில் ஆக்டேவியா என்றால் 8வது என்று பொருள்படுகிறதாம். அதாவது, இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஸ்கோடா நிறுவனம் அறிமுகப்படுத்திய 8வது கார் மாடல் என்பதால், ஆக்டேவியா என்ற பெயர் சூட்டப்பட்டதாம். 1959ம் ஆண்டு இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆக்டேவியா காரின் பெயர் பற்றிய சுவாரஸ்யம்... பகிர்ந்து கொண்ட ஸ்கோடா இந்தியா தலைவர்!

இந்த நிலையில், புதிய ஆக்டேவியா கார் முந்தைய மாடலைவிட பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில்லைட்டுகள், பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

ஆக்டேவியா காரின் பெயர் பற்றிய சுவாரஸ்யம்... பகிர்ந்து கொண்ட ஸ்கோடா இந்தியா தலைவர்!

டாப் வேரியண்ட்டில் டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் முன் இருக்கைகள், டிரைவ் பை ஒயர் கியர் ஷிஃப்ட் தொழில்நுட்படம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

ஆக்டேவியா காரின் பெயர் பற்றிய சுவாரஸ்யம்... பகிர்ந்து கொண்ட ஸ்கோடா இந்தியா தலைவர்!

இந்த காரில் ஏர்பேக்ககள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் வியூ கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு தொழில்நுட்பம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

ஆக்டேவியா காரின் பெயர் பற்றிய சுவாரஸ்யம்... பகிர்ந்து கொண்ட ஸ்கோடா இந்தியா தலைவர்!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரை வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வு இடம்பெறுகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் இந்த கார் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்டேவியா காரின் பெயர் பற்றிய சுவாரஸ்யம்... பகிர்ந்து கொண்ட ஸ்கோடா இந்தியா தலைவர்!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் ரூ.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் எலான்ட்ரா காருக்கு இது நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda India CEO has shared interesting thing about Octavia name meaning in Latin.
Story first published: Thursday, June 3, 2021, 12:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X