புதிய கோடியாக்கின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஸ்கோடா!! 2022 ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம்!

2021 ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள படத்தினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய கோடியாக்கின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஸ்கோடா!! 2022 ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம்!

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் கோடியாக்கின் புதிய ஃபேஸ்லிஃப்ட் காரினை வருகிற ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. ஆயுட்காலத்தை அதிகப்படுத்தும் வகையில் வழங்கப்படவுள்ள ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினை பெற்றுள்ள கோடியாக் நம் நாட்டு சந்தையில் முதற்கட்டமாக பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கோடியாக்கின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஸ்கோடா!! 2022 ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம்!

இதற்கிடையில் தான் கோடியாக் கார்களின் தயாரிப்பு பணிகள் அவ்ரங்காபாத்தில் உள்ள ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் தொழிற்சாலையில் துவங்கப்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள படத்தினை கீழே காணலாம். ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்களின் மூலம் மிகவும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் புதிய கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்டின் வெளிப்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய கோடியாக்கின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஸ்கோடா!! 2022 ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம்!

இதில் திருத்தியமைக்கப்பட்ட முன்பக்க க்ரில், ஹெட்லேம்ப்கள் மற்றும் புதிய முன்பக்க பம்பர் உள்ளிட்டவையும் அடங்குகின்றன. அத்துடன் பின்புறத்திலும் சில கவனிக்கத்தக்க தோற்ற மாற்றங்களை கோடியாக் பெற்று வரவுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட கோடியாக்கை ஸ்போர்ட்லைன் ட்ரிம் நிலையிலும் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.

புதிய கோடியாக்கின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஸ்கோடா!! 2022 ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த வேரியண்ட்டில் சற்று ஸ்போர்டியான கருப்பு நிற க்ரில், கருப்பு நிற பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் & ஜன்னல்கள், கருப்பு நிறத்தில் மேற்கூரை தண்டவாள கம்பிகள் & அலாய் சக்கரங்கள் மற்றும் கருப்பு நிறத்தில் பின்பக்க ஸ்பாய்லர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

புதிய கோடியாக்கின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஸ்கோடா!! 2022 ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம்!

ஸ்கோடா கோடியாக்கிலும் வழக்கமான 2.0 லிட்டர், டர்போ-பெட்ரோல் என்ஜினே பொருத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். ஸ்கோடா கோடியாக் & சூப்பர்ப் கார்களில் வழங்கப்படுகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 187 பிஎச்பி-ஐ வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

புதிய கோடியாக்கின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஸ்கோடா!! 2022 ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம்!

அத்துடன் அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டமும் ஸ்கோடா கோடியாக்கில் வழங்கப்படுகிறது. புதிய கோடியாக்கின் ஃபேஸ்லிஃப்ட்டிலும் சில மாற்றங்களை காண முடிகிறது. இதன் கேபினில் 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் புதியதாக வழங்கப்பட்டுள்ளது. இதனை இந்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்டேவியா காரில் காணலாம். அதேபோல் முன்பக்க இருக்கைகளும் சற்று சவுகரியமானதாக அப்கிரேட் செய்யப்பட்டுள்ளன.

புதிய கோடியாக்கின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஸ்கோடா!! 2022 ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம்!

கூடுதல் தேர்வுகளுடன் இருக்கைகளை மடக்கும் வசதி மற்றும் மஸாஜிங் செயல்பாடு உள்ளிட்டவற்றை கொண்ட கேபின் உள்ளமைவை ஸ்கோடா புதிய கோடியாக் எஸ்யூவியில் வழங்கியுள்ளது. இதன் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளாஸ்ட்டர் பகுதியில் இணைய இணைப்பு வசதி மற்றும் லாரா குரல் கட்டுப்பாட்டு உதவியை கொண்ட 9.2 இன்ச்சில் தொடுத்திரை கொடுக்கப்பட உள்ளது.

புதிய கோடியாக்கின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஸ்கோடா!! 2022 ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம்!

காரின் உட்புற ஆடியோ அமைப்பானது 12-ஸ்பீக்கர் அமைப்பிற்கு அப்டேட் ஆகியுள்ளது. பனோராமிக் சன்ரூஃப், இரட்டை-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், 360-கோண கேமிரா மற்றும் ஆட்டோ-பார்க்கிங் ஆகிய அம்சங்கள் அப்படியே முந்தைய கோடியாக்கில் இருந்து தொடரப்பட உள்ளன. வருகிற ஜனவரி மாத அறிமுகத்திற்கு முன்னதாக கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார்கள் இந்திய சாலைகளில் கடந்த மாதங்களில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு இருந்தன.

புதிய கோடியாக்கின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஸ்கோடா!! 2022 ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம்!

அப்போது நமக்கு கிடைக்க பெற்ற ஸ்பை படங்களின் மூலமாகவே காரை பற்றிய தகவல்களை மேலே கூறியுள்ளோம். தீவிரமாக நடத்தப்பட்ட சோதனை ஓட்டங்களினால் இந்த காரின் அறிமுகத்தை இந்த 2021ஆம் ஆண்டிற்க்குள்ளாக எதிர்பார்த்தோம். ஆனால் 2022 ஜனவரிக்கு சற்று தாமதமாகியுள்ளது. தற்போது தயாரிப்பு பணிகள் நம் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இதன் அறிமுகம் வருகிற ஜனவரியில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

புதிய கோடியாக்கின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஸ்கோடா!! 2022 ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் இந்த எஸ்யூவி காரின் விலை ரூ.34 லட்சத்தில் இருந்து ரூ.36 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். விற்பனையில் இந்த ஸ்கோடா எஸ்யூவி காருக்கு டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி க்ளோஸ்டர் உள்ளிட்டவையும், அதேநேரம் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 உள்ளிட்டவையும் போட்டியாக விளங்கவுள்ளன.

புதிய கோடியாக்கின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஸ்கோடா!! 2022 ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம்!

கோடியாக் எஸ்யூவியின் அறிமுகம் ஒருபக்கம் இருக்க, மறுப்பக்கம் கரோக் எஸ்யூவி காரின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்களும் வெளியாகி வந்தன. ஆனால் இதனை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ஸாக் ஹொல்லிஸ் சமீபத்தில் அவரது டுவிட்டர் பக்கத்தில் முற்றிலுமாக மறுத்துள்ளார். அதாவது கரோக் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லையாம்.

புதிய கோடியாக்கின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஸ்கோடா!! 2022 ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டில் மே மாதத்தில் ஸ்கோடா கரோக் அறிமுகப்படுத்தப்பட்டது. மொத்தமாகவே 1000 யூனிட்கள் விற்பனை செய்வது என்ற முடிவுடன் தான் இந்த எஸ்யூவி கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த 1000 யூனிட்களின் விற்பனை கடந்த 2021 ஜனவரி மாதத்துடன் நிறைவு பெற்றன. மீண்டும் எப்போது கரோக்கின் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம்? என்ற நெட்டிசனின் கேள்விக்கு தான், ஸாக் ஹொல்லிஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
skoda kodiaq production starts
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X