கோடையில் வருகிறது ஸ்கோடாவின் குஷாக் எஸ்யூவி!! டீசர் மூலம் மீண்டும் உறுதிப்படுத்திய தயாரிப்பு நிறுவனம்
ஸ்கோடாவின் அடுத்த அறிமுகமான குஷாக்கின் புதிய டீசர் படம் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்திய சந்தைக்கான விஷன் இன் கான்செப்ட் எஸ்யூவி காரை காட்சிப்படுத்தி இருந்தது.

அதன்பின் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வந்த இந்த காரின் பெயர் குஷாக் என ஸ்கோடா நிறுவனம் இந்த 2021 ஜனவரி மாத துவக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது குஷாக் எஸ்யூவி காரின் டீசர் படம் ஒன்று ஸ்கோடாவின் இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காரின் அறிமுகம் இந்த ஆண்டு கோடையில் இருக்கும் என நமக்கு ஏற்கனவே தெரிந்த தகவலைதான் ஸ்கோடா நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்தியா 2.0' திட்டத்தில் பணியாற்றி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வெளிவரும் முதல் காராக குஷாக் இந்தியாவில் அறிமுகமாகுகிறது. இந்த ஸ்கோடா கார் இந்த கூட்டணியில் உருவான எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வெளிவரவுள்ளது.

இந்த எஸ்யூவி காரில் பொருத்தப்படவுள்ள 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 148 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக வழங்கப்படவுள்ளது.

இந்த டர்போ என்ஜின் உடன் 7-ஸ்பீடு ட்யுல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அதுவே குஷாக்கின் விலை குறைவான வேரியண்ட்களில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications








