மறைப்பு எதுவுமில்லாமல் முதல்முறையாக சாலையில் காட்சிதந்த ஸ்கோடா குஷாக்!! விற்பனை எப்போது ஆரம்பம்?

உலகளவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் ஒன்று முதன்முறையாக எந்தவொரு மறைப்பும் இல்லாமல் சாலையில் காட்சி தந்துள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மறைப்பு எதுவுமில்லாமல் முதல்முறையாக சாலையில் காட்சிதந்த ஸ்கோடா குஷாக்!! விற்பனை எப்போது ஆரம்பம்?

ஸ்கோடா நிறுவனம் அதன் புதிய எஸ்யூவி மாடலாக குஷாக்கை உலகளவில் கடந்த மார்ச் மாத 18ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

மறைப்பு எதுவுமில்லாமல் முதல்முறையாக சாலையில் காட்சிதந்த ஸ்கோடா குஷாக்!! விற்பனை எப்போது ஆரம்பம்?

முன்னதாக கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் விஷன் இன் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்த ஸ்கோடா எஸ்யூவி காரின் பெயர் சில மாதங்களுக்கு முன்பு தான் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

மறைப்பு எதுவுமில்லாமல் முதல்முறையாக சாலையில் காட்சிதந்த ஸ்கோடா குஷாக்!! விற்பனை எப்போது ஆரம்பம்?

இந்தியா 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாகியுள்ள குஷாக், நமது நாட்டு சந்தையில் ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணிக்கு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைப்பு எதுவுமில்லாமல் முதல்முறையாக சாலையில் காட்சிதந்த ஸ்கோடா குஷாக்!! விற்பனை எப்போது ஆரம்பம்?

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் என தற்சமயம் விறுவிறுப்பாக விற்பனையாகி கொண்டிருக்கும் நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக கொண்டுவரப்பட்டுள்ள ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளது.

மறைப்பு எதுவுமில்லாமல் முதல்முறையாக சாலையில் காட்சிதந்த ஸ்கோடா குஷாக்!! விற்பனை எப்போது ஆரம்பம்?

இந்திய பாதுகாப்பு மற்றும் புதிய மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கமாக, நமது நாட்டிற்கென கட்டமைக்கப்பட்ட எம்க்யுபி-ஏ0-இன் ப்ளாட்ஃபாரத்தில் இந்த எஸ்யூவி கார் உருவாக்கப்பட்டு விரைவில் நம் நாட்டிலும் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

மறைப்பு எதுவுமில்லாமல் முதல்முறையாக சாலையில் காட்சிதந்த ஸ்கோடா குஷாக்!! விற்பனை எப்போது ஆரம்பம்?

கிட்டத்தட்ட 95 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படும் பாகங்களை பயன்படுத்தி குஷாக் உருவாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதால், இந்த எஸ்யூவி காரின் விலையை க்ரெட்டா & செல்டோஸிற்கு போட்டியாக ரூ.10- 15 லட்சத்தில் எதிர்பார்க்கலாம்.

மறைப்பு எதுவுமில்லாமல் முதல்முறையாக சாலையில் காட்சிதந்த ஸ்கோடா குஷாக்!! விற்பனை எப்போது ஆரம்பம்?

கார் உலகளவில் வெளியிடப்பட்டாலும், விலைகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. நமக்கு தெரிந்தவரையில் 2021 ஜூன் மாதத்தில் அவை வெளியிடப்படலாம். இதற்கிடையில் தற்போது வெளிநாட்டில் எடுக்கப்பட்ட குஷாக்கின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

மறைப்பு எதுவுமில்லாமல் முதல்முறையாக சாலையில் காட்சிதந்த ஸ்கோடா குஷாக்!! விற்பனை எப்போது ஆரம்பம்?

ஸ்கோடா குஷாக்கின் ஸ்பை படங்கள் அவ்வப்போது வெளியாகுபவை தான் என்றாலும், இந்த புதிய படங்களில் முதன்முறையாக எந்தவொரு மறைப்பும் இல்லாமல் குஷாக் கார் நம் கண்களுக்கு காட்சியளித்துள்ளது.

மறைப்பு எதுவுமில்லாமல் முதல்முறையாக சாலையில் காட்சிதந்த ஸ்கோடா குஷாக்!! விற்பனை எப்போது ஆரம்பம்?

இருப்பினும் சர்வதேச ஸ்பை படங்கள் என்பதால் அவற்றை நமது செய்தி தளத்தில் பதிவிட முடியவில்லை. அந்த படங்களில் கார் வெள்ளை நிறத்தில் இருந்தது. ஆனால் இந்திய சந்தைக்கென மெட்டாலிக் ஹனி ஆரஞ்ச் மற்றும் டொர்னடோ சிவப்பு என்ற நிறங்கள் பிரத்யேகமாக வழங்கப்படவுள்ளன.

மறைப்பு எதுவுமில்லாமல் முதல்முறையாக சாலையில் காட்சிதந்த ஸ்கோடா குஷாக்!! விற்பனை எப்போது ஆரம்பம்?

ஆக்டிவ், அம்பிஷன் & ஸ்டைல் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனையை துவங்கவுள்ள குஷாக்கிற்கான முன்பதிவுகள் ஜூன் மாதத்தில் இருந்து துவங்கப்படவுள்ளன. டெலிவிரிகள் அதன் பின்னரே ஆரம்பிக்கப்படும்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Kushaq Spied Undisguised On Road For First Time.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X