பேரரசர் வந்து விட்டார்... ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்... கிலியில் ஹூண்டாய், கியா...

ஸ்கோடா குஷாக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பேரரசர் வந்து விட்டார்... ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்... கிலியில் ஹூண்டாய், கியா...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்று (ஜூன் 28) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. குஷாக் எஸ்யூவியை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை ஸ்கோடா இந்தியா நிறுவனம் வரும் ஜூலை 10ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

பேரரசர் வந்து விட்டார்... ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்... கிலியில் ஹூண்டாய், கியா...

இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் ஆகிய கார்களுடன் போட்டியிடவுள்ள ஸ்கோடா குஷாக் எஸ்யூவி, MQB-A0-IN பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. போட்டி நிறைந்த செக்மெண்ட் என்பதால், குஷாக் எஸ்யூவியில் ஸ்கோடா நிறுவனமானது பல்வேறு வசதிகளை வழங்கியுள்ளது.

பேரரசர் வந்து விட்டார்... ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்... கிலியில் ஹூண்டாய், கியா...

இதில், ஆட்டோமேட்டிக் ஏசி, வென்டிலேட்டர் வசதியுடன் முன் பக்க இருக்கைகள், சப்-வூஃபர் உடன் 6 ஸ்பீக்கர் சவுண்டு சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் முக்கியமானவை.

பேரரசர் வந்து விட்டார்... ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்... கிலியில் ஹூண்டாய், கியா...

1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் இரண்டு டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், 1.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

பேரரசர் வந்து விட்டார்... ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்... கிலியில் ஹூண்டாய், கியா...

அதே நேரத்தில் 1.5 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ விலை இன்று அறிவிக்கப்பட்டது.

பேரரசர் வந்து விட்டார்... ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்... கிலியில் ஹூண்டாய், கியா...

இதன்படி ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் ஆரம்ப விலை 10.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 17.59 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கிடைக்கும்.

பேரரசர் வந்து விட்டார்... ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்... கிலியில் ஹூண்டாய், கியா...

பேரரசர் என பொருள்படும் சமஸ்கிருத வார்த்தையில் இருந்து குஷாக் என்ற பெயர் தருவிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே இந்த செக்மெண்ட்டின் அரசனாக குஷாக் திகழுமா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம். குஷாக் எஸ்யூவி காருக்கு தற்போது முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மூலமாக நீங்கள் முன்பதிவு செய்யலாம்.

பேரரசர் வந்து விட்டார்... ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்... கிலியில் ஹூண்டாய், கியா...

அல்லது நாடு முழுவதும் உள்ள ஸ்கோடா டீலர்ஷிப்கள் வாயிலாகவும் குஷாக் எஸ்யூவியை முன்பதிவு செய்து கொள்ளலாம். 1.0 லிட்டர் டிஎஸ்ஐ வேரியண்ட்களின் டெலிவரிதான் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. 1.5 லிட்டர் டிஎஸ்ஐ வேரியண்ட்களின் டெலிவரி வரும் ஆகஸ்ட் மாதம்தான் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, June 28, 2021, 11:56 [IST]
English summary
Skoda Kushaq SUV Launched In India: Here Are All The Details. Read in Tamil
மேலும்... #ஸ்கோடா #skoda #skoda kushaq
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+