சூப்பர் நியூஸ்... புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது!

வாடிக்கையாளர்களின் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ள புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. புனேயில் உள்ள ஸ்கோடா ஆலையில் முதல் குஷாக் கார் இன்று உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவந்தது.

சூப்பர் நியூஸ்... புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் குஷாக் என்ற புத்தம் புதிய எஸ்யூவி மாடலை ஸ்கோடா களமிறக்க உள்ளது. கொரோனா பிரச்னை இருந்தாலும், ஏற்கனவே திட்டமிட்டது போல, ஜூலை மாதத்தில் இந்த காரின் டெலிவிரிப் பணிகளை துவங்குவதற்கு ஸ்கோடா ஆயத்தப் பணிகளை செய்து வருகிறது.

சூப்பர் நியூஸ்... புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது!

கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு மிகச் சிறந்த மாற்றுத் தேர்வாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவல் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த காரை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது.

சூப்பர் நியூஸ்... புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது!

அதாவது, புனேயில் உள்ள ஸ்கோடா கார் ஆலையில் குஷாக் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கப்பட்டு இருக்கிறது. உற்பத்தி பிரிவில் இருந்து வந்த முதன்முதலாக வந்த குஷாக் எஸ்யூவி கார்களின் படத்தை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் சமூக வலைதளம் மூலமாக தனது ரசிகர்களுக்கு பகிர்ந்து கொண்டுள்ளது.

சூப்பர் நியூஸ்... புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது!

ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கி இருப்பதால், மிக விரைவில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. அதாவது, இந்த மாதத்திலேயே விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது. அடுத்த மாதம் முதல் டெலிவிரிப் பணிகள் முறைப்படி துவங்கும்.

சூப்பர் நியூஸ்... புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி கட்டமைப்புக் கொள்கையை தழுவி இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட எம்க்யூபி ஐஎன் ஏ0 என்ற கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 92 சதவீதம் உள்நாட்டு பாகங்கள்தான் பயன்படுத்தப்பட உள்ளன.

சூப்பர் நியூஸ்... புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது!

இதனால், இந்த காரின் விலை மிக சவாலாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. அதாவது, ரூ.10 லட்சம் முதல் ரூ.17 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

சூப்பர் நியூஸ்... புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 150 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இரண்டு எஞ்சின்களுமே லிட்டருக்கு 18 கிமீ மைலேஜை வழங்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சூப்பர் நியூஸ்... புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி ஆக்டிவ், ஆம்பிஷன், ஸ்டைல் ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. டாப் வேரியண்ட்டில் தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.

சூப்பர் நியூஸ்... புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் டிசைன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் வகையில் இருக்கும். எனவே, விற்பனையிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுடன் வெற்றிகரமான மாடலாக மாறும் என்று தெரிகிறது. கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட நேரடி போட்டியாளர்கள் மட்டுமின்றி, எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட மிட்சைஸ் எஸ்யூவி மாடல்களுடனும் இந்த கார் போட்டி போடும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda #skoda kushaq
English summary
Skoda has commenced Kushaq SUV production in India ahead of launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X