புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் எஞ்சின் மற்றும் வேரியண்ட் விபரம்

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், அதன் எஞ்சின் மற்றும் வேரியண்ட் விபரங்கள் கசிந்துள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் எஞ்சின் மற்றும் வேரியண்ட் விபரம்

வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மார்க்கெட்டில் ஸ்கோடா நிறுவனம் குஷாக் என்ற புத்தம் புதிய எஸ்யூவியை வரும் 28ந் தேதி விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. டிசைன் உள்பட அனைத்து அம்சங்களிலும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் இந்த எஸ்யூவி வர இருக்கிறது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் எஞ்சின் மற்றும் வேரியண்ட் விபரம்

இந்த நிலையில், இந்த எஸ்யூவியின் எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வுகள் மற்றும் வேரியண்ட்டுகள் குறித்த விபரம் டீம் பிஎச்பி தளத்தின் வாசகர் குழு மூலமாக கசிந்துள்ளது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் எஞ்சின் மற்றும் வேரியண்ட் விபரம்

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி இரண்டு பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் மேனுவல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது. தவிரவும், ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. இதில், எந்தெந்த வேரியண்ட்டில் எந்தெந்த எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளது என்பது குறித்த தகவல்கள்தான் இப்போது வெளியாகி இருக்கிறது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் எஞ்சின் மற்றும் வேரியண்ட் விபரம்

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கப்பட உள்ளன.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் எஞ்சின் மற்றும் வேரியண்ட் விபரம்

இதில், 1.0 லிட்டர் டர்போ மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வானது ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். அதேநேரத்தில், இதன் 1.0 லிட்டர் டர்போ ஆட்டோமேட்டிக் மாடல் ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும். ஆட்டோமேட்டிக் மாடல் பேஸ் வேரியண்ட்டில் கிடைக்காது என்பது தெரிய வந்துள்ளது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் எஞ்சின் மற்றும் வேரியண்ட் விபரம்

மறுபுறத்தில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்கள் ஸ்டைல் என்ற டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். இதில், பேஸ் வேரியண்ட் மற்றும் நடுத்தர வேரியண்ட் தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் எஞ்சின் மற்றும் வேரியண்ட் விபரம்

இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 108 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். அடுத்து, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் எஞ்சின் மற்றும் வேரியண்ட் விபரம்

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் தனித்துவமான க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டுகள், அலாய் வீல்கள் கவனத்தை பெறுகின்றன. இந்த எஸ்யூவியில் 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் கொடுக்கப்படுகின்றன.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் எஞ்சின் மற்றும் வேரியண்ட் விபரம்

இந்த காரில் வயர்லெஸ் சார்ஜர், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கும். எலெக்ட்ரிக் சன்ரூஃப், ரியர் ஏசி வென்ட்டுகளும் உண்டு.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் எஞ்சின் மற்றும் வேரியண்ட் விபரம்

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி ரூ.10 லட்சம் முதல் ரூ.17 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 17, 2021, 12:41 [IST]
English summary
The Skoda Kushaq engine, gearbox and variant combination details are leaked ahead of its launch in India.
மேலும்... #ஸ்கோடா #skoda #skoda kushaq
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+