இவ்வளவு பழமையான நிறுவனமா ஸ்கோடா!! கார் பந்தயங்களில் 120 வருடங்கள் நிறைவு... தயாராகும் ஸ்பெஷல் எடிசன்

ஸ்கோடா மோட்டார்ஸ்போர்ட் பிரிவில் குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படவுள்ள ஃபேபியா ராலி2 எவொ எடிசன் 120 காரை பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வளவு பழமையான நிறுவனமா ஸ்கோடா!! கார் பந்தயங்களில் 120 வருடங்கள் நிறைவு... தயாராகும் ஸ்பெஷல் எடிசன்

ஸ்கோடா பிராண்ட் மோட்டார்ஸ்போர்ட் பந்தயங்களில் முதன்முதலில் நுழைந்து 120 ஆண்டுகள் நிறைவு பெறுவதை சிறப்பிக்கும் வகையில் கொண்டுவரப்படும் இந்த ஸ்பெஷல் எடிசன் காரை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் 12 யூனிட்களில் மட்டுமே சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படவுள்ள, ஃபேபியா கார் மாடலில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த லிமிடெட் எடிசனில் கூடுதல் தொழிற்நுட்ப பாகங்கள், கூடுதல் ஆக்ஸஸரீகள் மற்றும் பிரத்யேகமான பெயிண்ட் & கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வளவு பழமையான நிறுவனமா ஸ்கோடா!! கார் பந்தயங்களில் 120 வருடங்கள் நிறைவு... தயாராகும் ஸ்பெஷல் எடிசன்

பளிச்சிடும் பச்சை நிறத்தில் மாங்கனீசு சக்கரங்கள் மற்றும் எல்இடி கார்னரிங் விளக்குகளுடன் முன்பக்கத்தில் கூடுதல் எண்ணிக்கையில் துணை விளக்குகளை டைமண்ட் வடிவில் முக்கிய சிறப்பம்சங்களாக பெற்றுவரும் இந்த ஸ்பெஷல் எடிசன் காருக்கான ஆர்டர்களை ஏற்பதை ஏற்கனவே ஸ்கோடா நிறுவனம் துவங்கிவிட்டது.

தனித்துவமான வண்ணத்தை பெறவுள்ள இந்த 12 ஸ்பெஷல் எடிசன் கார்களிலும் சீரியல் எண்ணை (வரிசைப்படி இருக்கலாம்) கொண்ட தகடுகளும் பொருத்தப்படவுள்ளன. "இந்த ஸ்பெஷல் எடிசன் எங்களது ஸ்பெஷலின் (ராலி கார்) மேம்படுத்தப்பட்ட வெர்சனாக மட்டும் இல்லாமல், பிரத்தியேக கருவிகளினால் எடிசன் 120 கார் ஆனது உண்மையான சேமிப்பாளர்களின் காராகவும் விளங்கும்" என ஸ்கோடா மோட்டார்ஸ்போர்ட் பிரிவின் முதன்மை அதிகாரி மைக்கேல் ஹ்ராபெனெக் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பழமையான நிறுவனமா ஸ்கோடா!! கார் பந்தயங்களில் 120 வருடங்கள் நிறைவு... தயாராகும் ஸ்பெஷல் எடிசன்

வாயு பரிமாற்றத்தை மேம்படுத்தும் வகையிலும், எரிப்பு குடுவையில் பற்றவைப்பு கலவையை தயாரிக்கவும் மேம்படுத்தப்பட்ட என்ஜின், மிகவும் செயல்திறன்மிக்க அழுத்தப்பட்ட காற்று குளிரூட்டி (ஏர் கூலர்), இவற்றிற்கு ஏற்ற வடிவிலான எக்ஸாஸ்ட் அமைப்பு, புதிய வால்வு டைமிங் மற்றும் புதிய எலக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட் வடிவமைப்பு உள்ளிட்டவை எடிசன் 120 காரில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாடிஃபிகேஷன்களாக அடங்குகின்றன.

புதியதாக ட்யூன் செய்யப்பட்டுள்ள ஷாக் அப்சார்பர்களினால் எந்தவொரு சாலையாக இருந்தாலும், கார் சிறப்பான ட்ராக்‌ஷனை பெறும். 2021 ஸ்கோடா ஃபேபியா ராலி2 எவொ-ஐ போன்று அதன் புதிய எடிசன் 120 காரும் டைனாமிக் மோட்களில் மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகளுடன் என்ஜின் அமைப்பில் உராய்வை குறைக்கும் சிஸ்டத்தை ரீடிசைனில் பெற்றுள்ளது.

இவ்வளவு பழமையான நிறுவனமா ஸ்கோடா!! கார் பந்தயங்களில் 120 வருடங்கள் நிறைவு... தயாராகும் ஸ்பெஷல் எடிசன்

இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் கொண்டுவரப்பட்டுள்ள மற்ற மாற்றங்கள் என்று பார்த்தால், ஆயில் பயன்பாடு சற்று குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதியதாக வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ள ஸ்டேரிங் சக்கரத்தின் பொத்தான்கள் 8 விதமான செயல்பாடுகளை வழங்கவல்லன.

இந்த ஸ்பெஷல் எடிசன் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரீடிசைனில் வழங்கப்படவுள்ள ஜாக் ஹோல்டர் கூடுதல் சவுகரியமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட கியர் அமைப்பு இந்த காரை அதிகப்பட்சமாக மணிக்கு 202கிமீ வேகத்தில் இயக்கும் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda celebrates 120 years of racing with special Fabia Rally2 evo Edition 120. Read In Tamil.
Story first published: Wednesday, March 17, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X