ஸ்கோடாவின் புதிய செடான் காரை நீங்களும் வடிவமைக்கலாம்!! செக் குடியரசிற்கு செல்லும் வாய்ப்பை பெறுங்கள்

புதிய ஸ்கோடா செடான் காரின் இந்திய அறிமுகத்தை உறுதிப்படுத்தும் வகையில் டீசர் படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஸ்கோடாவின் புதிய செடான் காரை நீங்களும் வடிவமைக்கலாம்!! செக் குடியரசிற்கு செல்லும் வாய்ப்பை பெறுங்கள்

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் அடுத்ததாக தங்களது நிறுவனத்தில் இருந்து இந்த 2021ஆம் வருடத்திற்குள் புதிய கார் வெளிவரவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஸ்கோடாவின் புதிய செடான் காரை நீங்களும் வடிவமைக்கலாம்!! செக் குடியரசிற்கு செல்லும் வாய்ப்பை பெறுங்கள்

ராபிட் செடானின் விற்பனை நீண்ட நாட்களுக்கு இந்தியாவில் இருக்காது என ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ஸாக் ஹோலிஸ் ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். இதனால் ராபிட்டிற்கு மாற்றாக கொண்டுவரப்படவுள்ள செடான் கார் எதுவாக இருக்கும் என்ற கேள்வி இருந்து வந்தது.

ஸ்கோடாவின் புதிய செடான் காரை நீங்களும் வடிவமைக்கலாம்!! செக் குடியரசிற்கு செல்லும் வாய்ப்பை பெறுங்கள்

அது தற்போது ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய டீசர் படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏனெனில் இந்த படத்தில் காட்சியளிப்பது காம்பெக்ட்-செடான் ரக காராகும். ஆனால் கார் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடாவின் புதிய செடான் காரை நீங்களும் வடிவமைக்கலாம்!! செக் குடியரசிற்கு செல்லும் வாய்ப்பை பெறுங்கள்

இருப்பினும் இந்த புதிய ஸ்கோடா காம்பெக்ட் செடான் காரின் வடிவமைப்பு நமது இளம் இந்திய கார் வடிவமைப்பாளர்கள் கற்றுக்கொள்ள ஏற்ற ஒரு பாடமாக உள்ளது. அந்த அளவிற்கு, கூர்மையான லைன்களுடன் கார் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருப்பது மறைப்புகளை தாண்டி நமது கண்களுக்கு புலப்படுகிறது.

ஸ்கோடாவின் புதிய செடான் காரை நீங்களும் வடிவமைக்கலாம்!! செக் குடியரசிற்கு செல்லும் வாய்ப்பை பெறுங்கள்

இதற்கிடையில், இந்திய வாடிக்கையாளர்களுக்கு கார் வடிவமைப்பில் போட்டி ஒன்றினையும் நடத்த ஸ்கோடா நிறுவனம் தயாராகி வருகிறது. இதற்காக இந்தியாவில் கார் வடிவமைப்பு படிப்பை படித்து கொண்டுள்ளவர்களையும், இத்தகைய விஷயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களையும் இந்த செக் குடியரசு கார் தயாரிப்பு நிறுவனம் அழைத்துள்ளது.

ஸ்கோடாவின் புதிய செடான் காரை நீங்களும் வடிவமைக்கலாம்!! செக் குடியரசிற்கு செல்லும் வாய்ப்பை பெறுங்கள்

‘ஸ்கோடா உடன் மறைப்பு' என்கிற பெயரில் நடத்தப்படவுள்ள இந்த போட்டியில் போட்டியாளர்கள் மறைப்புடன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மிட்-சைஸ் செடான் காரினை வடிவமைக்க வேண்டுமாம். இந்த போட்டிக்கான போட்டியாளர்கள் வருகிற ஆக்ஸ்ட் 18ஆம் தேதியில் இருந்து தங்களது பெயர்களை பதிவு செய்யலாம்.

ஸ்கோடாவின் புதிய செடான் காரை நீங்களும் வடிவமைக்கலாம்!! செக் குடியரசிற்கு செல்லும் வாய்ப்பை பெறுங்கள்

இதில் முதல் 5 பதிவுகள் அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 23ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் இருந்து ஒருவர் வெற்றியாளராக தேர்வு பெறுவார். வெற்றியாளரை ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குர்பிரதாப் எஸ்.போபராய் தேர்வு செய்யவுள்ளார்.

ஸ்கோடாவின் புதிய செடான் காரை நீங்களும் வடிவமைக்கலாம்!! செக் குடியரசிற்கு செல்லும் வாய்ப்பை பெறுங்கள்

அத்துடன் ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்டின் இயக்குனர் ஸாக் ஹோலிஸ் மற்றும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் வடிவமைப்பு பிரிவின் மூத்த அதிகாரி ஆலிவர் ஸ்டெஃபானி உள்ளிட்டோரும் இந்த போட்டிக்கு நீதிபதிகளாக பணியாற்றவுள்ளனர். 18 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.

ஸ்கோடாவின் புதிய செடான் காரை நீங்களும் வடிவமைக்கலாம்!! செக் குடியரசிற்கு செல்லும் வாய்ப்பை பெறுங்கள்

போட்டியாளர்கள் தங்களது வடிவமைப்பை www.camowithskoda.com என்ற இணையத்தள பக்கத்தில் பதிவு செய்யலாம். வெற்றி பெறுவர் பராகுவேயில் உள்ள ஸ்கோடா முதன்மை வடிவமைப்பு அதிகாரி ஆலிவர் ஸ்டெஃபானி உடன் நேரில் கலந்துரையாடலாம்.

ஸ்கோடாவின் புதிய செடான் காரை நீங்களும் வடிவமைக்கலாம்!! செக் குடியரசிற்கு செல்லும் வாய்ப்பை பெறுங்கள்

அதுமட்டுமின்றி வெற்றி பெறும் படைப்பு இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள காம்பெக்ட் செடானின் வடிவமைப்பிற்கு பயன்படுத்தி கொள்ளப்பட உள்ளதாம். இரண்டாம் இடத்தை பிடிப்பவருக்கு டிசைன் டேப்லெட் ஒன்றும், அடுத்த மூன்று இடங்களை பெறுவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட உள்ளன.

ஸ்கோடாவின் புதிய செடான் காரை நீங்களும் வடிவமைக்கலாம்!! செக் குடியரசிற்கு செல்லும் வாய்ப்பை பெறுங்கள்

இந்த நிலையில் ஸ்கோடாவின் இந்த புதிய காம்பெக்ட் செடான் கார் ஸ்லாவியா என்கிற பெயரில் வெளிவரவுள்ளதாக, இதனை வெளிப்படுத்தும் வகையிலான ஆவண படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை தான் கீழே காண்கிறீர்கள்.

ஸ்கோடாவின் புதிய செடான் காரை நீங்களும் வடிவமைக்கலாம்!! செக் குடியரசிற்கு செல்லும் வாய்ப்பை பெறுங்கள்

இந்திய சாலையில் இந்த புதிய ஸ்கோடா செடான் கார் பல முறை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது கிடைத்திருந்த ஸ்பை படங்களின் மூலம், சமீபத்திய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காரின் எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்படும் இந்த புதிய மிட்-சைஸ் செடான் தற்போதைய ராபிட் செடான் மாடலை காட்டிலும் அளவில் பெரியதாக வெளிவரவுள்ளதை அறிய முடிந்தது.

ஸ்கோடாவின் புதிய செடான் காரை நீங்களும் வடிவமைக்கலாம்!! செக் குடியரசிற்கு செல்லும் வாய்ப்பை பெறுங்கள்

இந்த வகையில் காரின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரிவிலேயே நீண்ட வீல்பேஸை கொண்ட செடான் காராக ஸ்கோடா ஸ்லாவியா அறிமுகமாகவுள்ளது. அதுமட்டுமின்றி இந்த காரணத்தினால் காரின் உட்புற கேபினிலும் விசாலமான இட வசதி கிடைக்கும்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda rapid successor slavia sedan launch confirmed via official design sketch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X