அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் காட்சிதந்த 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு...

2021 ஸ்கோடா ஆக்டேவியா மாடலின் எல்&கே டாப் வேரியண்ட் இந்தியாவில் தனியார் நிகழ்ச்ச்சி ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான் படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் காட்சிதந்த 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு...

ஒரு காலத்தில் இந்தியாவில் புதிய புதிய செடான் கார்களாக தான் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அவற்றின் இடத்தை எஸ்யூவி கார்கள் பிடித்துவிட்டன.

அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் காட்சிதந்த 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு...

இருப்பினும் இந்தியாவில் சில செடான் கார்கள் மீது இப்போதும் வாடிக்கையாளர்களின் கவனம் விழுந்து வருகிறது. அத்தகைய கார்களுள் ஒன்று புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா ஆகும்.

அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் காட்சிதந்த 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு...

ஆக்டேவியா, செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் முதன்முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்திய கார்களுள் ஒன்று. இதன் புதிய தலைமுறை கார் வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது.

அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் காட்சிதந்த 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு...

இந்த நிலையில் மும்பையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் புதிய ஸ்கோடா ஆக்டேவியாவின் டாப் எல்&கே வேரியண்ட் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்கள் டீம் பிஎச்பி செய்திதளத்தின் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.

அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் காட்சிதந்த 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு...

வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரையில் புதிய ஆக்டேவியா முன்பை காட்டிலும் ஸ்போர்டியானதாக மாறியுள்ளது. படங்களில் ஆக்டேவியாவின் இந்த டாப் வேரியண்ட் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்களுடன் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்களை மேட்ரிக்ஸ் எல்இடி செட்அப்-இல் கொண்டுள்ளது.

அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் காட்சிதந்த 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு...

முன்பக்க க்ரில் முன்பை காட்டிலும் தாழ்வாகவும், அகலமானதாகவும், கூர்மையானதாகவும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் க்ரில்லை சுற்றிலும் தடிமனான க்ரோம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஃபாக் விளக்குகளின் வடிவமும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் காட்சிதந்த 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு...

புதுமையான டிசைனிற்கு மாற்றப்பட்டுள்ள பொனெட்டினால் புதிய ஆக்டேவியா செடான் காரின் முன்பக்கம் முற்றிலும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. பக்கவாட்டு பகுதியில் பெரிய அளவில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்றாலும், மேற்கூரை கூபே கார்களை போன்று வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டைலிஷான தோற்றத்தில் இந்தியாவில் காட்சிதந்த 2021 ஆக்டேவியா!

இந்த டாப் வேரியண்ட்டின் உட்புறம் முழுவதும் பழுப்பு & கருப்பு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் முழு டிஜிட்டல் தரத்திலும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடனும் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்டைலிஷான தோற்றத்தில் இந்தியாவில் காட்சிதந்த 2021 ஆக்டேவியா!

உட்புறத்தில் சிறப்பம்சங்களாக சன்ரூஃப், புதிய 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இத்தகைய ஸ்டேரிங் சக்கரம் இந்தியாவிற்கு மிக புதியதாகும். ஆக்டேவியாவின் இந்த எல்&கே வேரியண்ட்டில் டிஎஸ்ஜி ட்ரான்ஸ்மிஷனுக்காக ஷிஃப்ட் பை வயர் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டைலிஷான தோற்றத்தில் இந்தியாவில் காட்சிதந்த 2021 ஆக்டேவியா!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய ஆக்டேவியாவில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ற இரு விதமான பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படலாம். 2021 ஆக்டேவியாவின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.18 -22 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 23, 2021, 18:20 [IST]
English summary
2021 Skoda Octavia L&K Top Variant Showcased To Dealers Ahead Of Launch.
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+