இன்னும் கொஞ்ச நாள்தான்... ஸ்கோடா ஸ்லாவியா கார் பற்றி வெளியான உற்சாக தகவல்... குஷியில் வாடிக்கையாளர்கள்!

ஸ்கோடா ஸ்லாவியா கார் எப்போது பொது பார்வைக்கு கொண்டு வரப்படும்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்னும் கொஞ்ச நாள்தான்... ஸ்கோடா ஸ்லாவியா கார் பற்றி வெளியான உற்சாக தகவல்... குஷியில் வாடிக்கையாளர்கள்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia). இது செடான் ரக கார் ஆகும். வரும் நவம்பர் 18ம் தேதி ஸ்கோடா ஸ்லாவியா செடான் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அதை தொடர்ந்து கூடிய விரைவில் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படும்.

இன்னும் கொஞ்ச நாள்தான்... ஸ்கோடா ஸ்லாவியா கார் பற்றி வெளியான உற்சாக தகவல்... குஷியில் வாடிக்கையாளர்கள்!

MQB A0 IN பிளாட்பார்ம் அடிப்படையில் ஸ்கோடா ஸ்லாவியா கார் கட்டமைக்கப்படவுள்ளது. ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் காருக்கு சற்று மேலாக ஸ்லாவியா செடான் கார் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இது உருவத்தில் சற்று பெரிதாக இருக்கும் என்பதுடன், போட்டியாளர்களை சமாளிக்கும் வகையில் அதிநவீன வசதிகளையும் பெற்றிருக்கும்.

இன்னும் கொஞ்ச நாள்தான்... ஸ்கோடா ஸ்லாவியா கார் பற்றி வெளியான உற்சாக தகவல்... குஷியில் வாடிக்கையாளர்கள்!

இந்தியாவின் மிட்-சைஸ் செடான் செக்மெண்ட்டில் ஸ்கோடா ஸ்லாவியா கார் நிலைநிறுத்தப்படும். இந்த செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி சியாஸ், ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா ஆகிய கார்களுடன் ஸ்கோடா ஸ்லாவியா போட்டியிடும். ஆனால் இந்தியாவில் மிட்-சைஸ் செடான் செக்மெண்ட் வாடிக்கையாளர்கள் மத்தியில் அவ்வளவு பிரபலம் கிடையாது.

இன்னும் கொஞ்ச நாள்தான்... ஸ்கோடா ஸ்லாவியா கார் பற்றி வெளியான உற்சாக தகவல்... குஷியில் வாடிக்கையாளர்கள்!

மறுபக்கம் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட் கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்கள் இந்த செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதனை புரிந்து கொண்ட ஸ்கோடா நிறுவனம் சமீபத்தில் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் குஷாக் காரை களமிறக்கியது.

இன்னும் கொஞ்ச நாள்தான்... ஸ்கோடா ஸ்லாவியா கார் பற்றி வெளியான உற்சாக தகவல்... குஷியில் வாடிக்கையாளர்கள்!

இந்த காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து மிட்-சைஸ் செடான் செக்மெண்ட்டில் புத்தம் புதிய ஸ்லாவியா காரை ஸ்கோடா நிறுவனம் களமிறக்கவுள்ளது. இந்த காரை பிரபலமாக்குவதற்கு ஸ்கோடா நிறுவனம் என்னென்ன யுக்திகளை கையாள போகிறது? என்பதை காண அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

இன்னும் கொஞ்ச நாள்தான்... ஸ்கோடா ஸ்லாவியா கார் பற்றி வெளியான உற்சாக தகவல்... குஷியில் வாடிக்கையாளர்கள்!

2022 காலாண்டர் ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்கோடா ஸ்லாவியா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி-மார்ச் கால கட்டத்தில், ஸ்கோடா ஸ்லாவியா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்த காரின் ஆரம்ப விலை 10 லட்ச ரூபாயாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் கொஞ்ச நாள்தான்... ஸ்கோடா ஸ்லாவியா கார் பற்றி வெளியான உற்சாக தகவல்... குஷியில் வாடிக்கையாளர்கள்!

அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை 17 லட்ச ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்படும். ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் தனது விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது.

இன்னும் கொஞ்ச நாள்தான்... ஸ்கோடா ஸ்லாவியா கார் பற்றி வெளியான உற்சாக தகவல்... குஷியில் வாடிக்கையாளர்கள்!

இதன் ஒரு பகுதியாக தொடர்ச்சியாக பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஸ்கோடா ஸ்லாவியா காரின் நீளம் 4,541 மிமீ ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் அகலம் 1,752 மிமீ ஆகவும், உயரம் 1,487 மிமீ ஆகவும் இருக்கும். இந்த காரின் வீல்பேஸ் நீளம் 2,651 மிமீ என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் கொஞ்ச நாள்தான்... ஸ்கோடா ஸ்லாவியா கார் பற்றி வெளியான உற்சாக தகவல்... குஷியில் வாடிக்கையாளர்கள்!

அதே சமயம் ஸ்கோடா ஸ்லாவியா காரில், 1.0 லிட்டர், மூன்று-சிலிண்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வும், 1.5 லிட்டர், நான்கு-சிலிண்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவது இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

இன்னும் கொஞ்ச நாள்தான்... ஸ்கோடா ஸ்லாவியா கார் பற்றி வெளியான உற்சாக தகவல்... குஷியில் வாடிக்கையாளர்கள்!

அதே நேரத்தில் இரண்டாவது இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. சக்தி வாய்ந்த இன்ஜின்கள் மட்டுமல்லாது, ஏராளமான வசதிகளையும் ஸ்லாவியா காரில் ஸ்கோடா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் பெரிய டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெறலாம்.

இன்னும் கொஞ்ச நாள்தான்... ஸ்கோடா ஸ்லாவியா கார் பற்றி வெளியான உற்சாக தகவல்... குஷியில் வாடிக்கையாளர்கள்!

மேலும் வயர்லெஸ் சார்ஜிங், 6 ஏர்பேக்குகள், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, மல்டி-ஃபங்ஷனல் ஸ்டியரிங் வீல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது. சரியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், இந்திய வாடிக்கையாளர்களின் மனதை ஸ்கோடா ஸ்லாவியா கவர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda slavia unveil date
Story first published: Friday, October 29, 2021, 23:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X