ரொம்ப ஆசைப்பட்டு வாங்கும் கார்கள்... இதுவே பெண்கள் சுலபமாக விபத்தில் சிக்க காரணம்... ஷாக் ரிப்போர்ட்!!

பெண்கள் மிக சுலபமாக விபத்தில் சிக்குவதற்கு காரணம் என்ன என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ரொம்ப ஆசைப்பட்டு வாங்கும் கார்கள்... இதுவே பெண்கள் சுலபமாக விபத்தில் சிக்க காரணம்... ஷாக் ரிப்போர்ட்!!

போக்குவரத்து விதிமீறல்கள் காரணமாக நாளுக்கு நாள் இந்தியாவில் விபத்தின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. வாகன ஓட்டிகளின் விதிமீறல்களை மட்டுமே விபத்துகளுக்கான முக்கிய காரணம் என கை காட்டிவிட முடியாது. ஏனெனில், தரமற்ற சாலைகளும் விபத்துகளுக்கான ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது.

ரொம்ப ஆசைப்பட்டு வாங்கும் கார்கள்... இதுவே பெண்கள் சுலபமாக விபத்தில் சிக்க காரணம்... ஷாக் ரிப்போர்ட்!!

இந்த நிலையில், பெண்கள் அதிகளவில் விபத்தில் சிக்குவதற்கான முக்கிய காரணம் என்ன என்பது பற்றிய அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இதனை இன்சூரன்ஸ் இன்ஸ்டியூட் ஃபார் ஹைவே சேஃப்டி (IIHS) எனும் அமைப்பே தனது ஆய்வின் அடிப்படையில் வெளியிட்டிருக்கின்றது.

ரொம்ப ஆசைப்பட்டு வாங்கும் கார்கள்... இதுவே பெண்கள் சுலபமாக விபத்தில் சிக்க காரணம்... ஷாக் ரிப்போர்ட்!!

பொதுவாக, ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் சிறிய ரக விரும்புகின்றனர். இதுவே அவர்கள் விபத்துகளில் அதிகளவில் சிக்குவதற்கும், இறப்பதற்கும் காரணமாக இருக்கின்றது. ஆம், பெரிய உருவம் கொண்ட கார்களைக் காட்டிலும் சிறிய உருவமுடைய கார்களில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாதது மற்றும் விபத்தின்போது மிக எளிதில் பெருத்த சேதத்தை சந்திப்பது உள்ளிட்ட காரணங்களால் இவை பாதுகாப்பற்ற வாகனங்களாக கருத்தப்படுகின்றன.

ரொம்ப ஆசைப்பட்டு வாங்கும் கார்கள்... இதுவே பெண்கள் சுலபமாக விபத்தில் சிக்க காரணம்... ஷாக் ரிப்போர்ட்!!

இந்த காரணத்தினாலேயே சிறிய ரக காரைப் பயன்படுத்தும் பெண்கள் அதிகளவில் விபத்தில் சிக்குவதோடு இல்லாமல், இறக்கவும் செய்கின்றனர். சிறிய கார்களைப் பயன்படுத்தும்போது விபத்தைச் சந்தித 20 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை உயிரிழந்திருப்பதாகவும், 37 சதவீதம் தொடங்கி 73 சதவீதம் வரை பெண்கள் மிக கடுமையான காயங்களுக்கு ஆளாகியிருப்பதாகவும் ஆய்வறிக்கை கூறுகின்றது.

ரொம்ப ஆசைப்பட்டு வாங்கும் கார்கள்... இதுவே பெண்கள் சுலபமாக விபத்தில் சிக்க காரணம்... ஷாக் ரிப்போர்ட்!!

1998 தொடங்கி 2015 வரையில் நடைபெற்ற விபத்துக்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே இந்த முடிவை ஐஐஎச்எஸ் வெளியிட்டுள்ளது. பெண்களைக் காட்டிலும் 10 சதவீதம் குறைந்தளவிலேயே ஆண்கள் விபத்தில் சிக்குவதாகவும் இது கூறுகின்றது. அதேசமயம், டரக் வாகனங்களை இயக்கும் ஆண்கள் 20 சதவீதம் விபத்தைச் சந்திப்பதாகவும், பெண்கள் இதில் 5 சதவீத அளவில் மட்டுமே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரொம்ப ஆசைப்பட்டு வாங்கும் கார்கள்... இதுவே பெண்கள் சுலபமாக விபத்தில் சிக்க காரணம்... ஷாக் ரிப்போர்ட்!!

பொதுவாக சிறிய உருவம் கொண்ட கார் அனைத்தும் இலகு ரக எடையிலேயேக் காணப்படுகின்றது. இதனால்தான் விபத்தின்போது மிக சுலபமாக இக்கார்கள் அப்பளம்போல் நொறுங்கிவிடுகின்றன. இத்தகைய பாதுகாப்பற்ற கார்களை அதிகம் பயன்படுத்தும் பெண்கள் மிக சுலபமாக காயங்களுக்கு ஆளாகுகின்றனர். இதனடிப்படையிலேயே பெண்களே அதிகம் விபத்தைச் சந்திப்பவர்கள் என ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ரொம்ப ஆசைப்பட்டு வாங்கும் கார்கள்... இதுவே பெண்கள் சுலபமாக விபத்தில் சிக்க காரணம்... ஷாக் ரிப்போர்ட்!!

குறிப்பாக, சிறிய ரக கார்களில் பயணிக்கும் பெண்களே அதிகளவில் விபத்தைச் சந்திப்பவர்கள் என கூறுகின்றது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வாகன உற்பத்தியாளர்களை உறுதியான தயாரிக்க வழிவகைச் செய்யும் என ஐஐஎச்எஸ் நம்புகின்றது. தொடர்ந்து, எதிர்காலத்தில் தற்போது இருக்கும் கார்களை விட அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார்கள் பயன்பாட்டிற்கு வரலாம் எனவும் அது நம்புகின்றது.

ரொம்ப ஆசைப்பட்டு வாங்கும் கார்கள்... இதுவே பெண்கள் சுலபமாக விபத்தில் சிக்க காரணம்... ஷாக் ரிப்போர்ட்!!

இப்போது விற்பனைக்கு வரும் பெரும்பாலான வாகனங்களில் ஏர் பேக், ஏபிஎஸ், இபிடி, சென்சார்கள் என எக்கசக்க அம்சங்கள் இடம்பெற தொடங்கிவிட்டன. இவை பயணத்தின்போது அதிக பாதுகாப்பை வழங்க உதவியாக இருக்கும். ஆனால், மிக மிக குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களில் இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற தவறிவிடுகின்றன. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதே இப்போதைய ஐஐஎச்எஸ் ஆய்வு முடிவின் நோக்கமாகும்.

Source: HT Auto

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Smaller Cars Are More Prone To Get Damaged Severely Compared To Larger Car. Read In Tamil.
Story first published: Saturday, February 13, 2021, 19:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X