உறவினர்கள் முன்னிலையில் பெற்றோரை ஆச்சரியப்படுத்திய மகள்.. இப்படி ஒரு பரிச அவங்க எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!!

உறவினர்கள் சூழ்ந்திருக்க மகன்-மகள் இருவரும் இணைந்து அப்பா-அம்மா இருவரையும் ஆச்சரிய பரிசால் நெகிழ்ச்சிக்கு ஆளாக்கிய சம்பவம் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

திருமண நாளன்று அசத்தலான பரிசு வழங்கிய பிள்ளைகள்... இந்த தகவல் உங்க பெற்றோர் கண்களில் படாமல் பார்த்துக்கோங்க!

இந்தியாவில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது என்பது பொதுவான செயல் ஆகும். பெரும்பாலான இளைஞர்கள் தங்களது வாகனங்களை, தங்களின் பிடித்தமான ஹீரோ அல்லது தெய்வத்தின் புகைப்படத்தைக் கொண்டு அலங்கரித்து வருகின்றனர். ஒரு சிலர் ஜாதி பெருமையை தலையில் தூக்கி சுமக்கும் வகையில் விரும்பதகாத வாசகங்களை ஒட்டிக் கொள்கின்றனர்.

திருமண நாளன்று அசத்தலான பரிசு வழங்கிய பிள்ளைகள்... இந்த தகவல் உங்க பெற்றோர் கண்களில் படாமல் பார்த்துக்கோங்க!

இவற்றைக் காட்டிலும் இந்த வாகனம் எனது தந்தையின் பரிசு, எனது தாயின் பரிசு, தாத்தா-பாட்டியின் பரிசு என குடும்பத்தாரை பெருமைப்படுத்தும் இளைஞர்களே அதிகமாக இருக்கின்றனர். இத்தகைய வாசகங்கள் அடங்கிய வாகனங்களைக் காண்பது மிக மிக சுலபம். இம்மாதிரியான சூழ்நிலையில் தாய்-தந்தையரை இது எங்களின் பிள்ளைகளின் பரிசு எனும் எழுதக்கூடிய வகையில் விலையுயர்ந்த காரை பரிசாக மகன்-மகள் இணைந்து வழங்கியிருக்கின்றனர்.

திருமண நாளன்று அசத்தலான பரிசு வழங்கிய பிள்ளைகள்... இந்த தகவல் உங்க பெற்றோர் கண்களில் படாமல் பார்த்துக்கோங்க!

தெலங்கானா மாநிலத்திலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. அக்கா, தம்பி என இருவரும் இணைந்து அவர்களின் பெற்றோர்களின் 25ம் ஆண்டு திருமண தினத்தை சிறப்பிக்கும் விதமாக கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி காரை பரிசாக வழங்கியிருக்கின்றனர்.

திருமண நாளன்று அசத்தலான பரிசு வழங்கிய பிள்ளைகள்... இந்த தகவல் உங்க பெற்றோர் கண்களில் படாமல் பார்த்துக்கோங்க!

வீட்டை விட்டு வெளியே வருமாறு அழைத்து வந்து திடீரென ஆச்சரியப் பரிசை வழங்கி தாய்-தந்தை இருவரையும் அவர்கள் மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றனர். முன்னதாக உறவினர்கள் சிலரையும் அங்கே தயார்நிலையில் அவர்கள் நிறுத்தி வைத்திருக்கின்றனர். கார் பரிசு வழங்கியதுகுறித்த வீடியோவை தாக்கூர் மோஹன் தீப் சிங் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது.

திருமண நாளன்று அசத்தலான பரிசு வழங்கிய பிள்ளைகள்... இந்த தகவல் உங்க பெற்றோர் கண்களில் படாமல் பார்த்துக்கோங்க!

வீடியோவில், தாய்-தந்தை இருவரும் கண்களைக் கட்டியவாறு ஷோரூமுக்குள் நுழைவதை நம்மால் காண முடிகின்றது. இந்த ஆச்சரிய பரிசைக் காட்டி அக்கா-தம்பி இருவரும் அவர்களின் அம்மா-அப்பாவை ஆச்சரியப்பட வைத்திருக்கின்றனர். இந்த தருணங்கள் அனைத்தையும் நண்பர் ஒருவரின் உதவியின்மூலமாக படமாக எடுத்து, அதையும் நினைவுப் பொக்கிஷமாக அவர்கள் சேமித்திருக்கின்றனர்.

திருமண நாளன்று அசத்தலான பரிசு வழங்கிய பிள்ளைகள்... இந்த தகவல் உங்க பெற்றோர் கண்களில் படாமல் பார்த்துக்கோங்க!

இந்தியாவில் மிக வேகமாக பிரபலமடைந்து வரும் சப் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் கியா சொனெட் காரும் ஒன்று. இந்த கார் ஹூண்டாய் வென்யூ, மாருதி விட்டார ப்ரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மற்றும் புதுமுக வரவான நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது.

திருமண நாளன்று அசத்தலான பரிசு வழங்கிய பிள்ளைகள்... இந்த தகவல் உங்க பெற்றோர் கண்களில் படாமல் பார்த்துக்கோங்க!

இளைஞர்கள் தங்களின் பெற்றோர்களுக்காக வாங்கியிருப்பது சொனெட் மாடலின் ஜிடி லைன் வேரியண்டாகும். இது இக்காரின் உயர் நிலை வேரியண்ட் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வேரியண்டில் தொழில்நுட்பம் அம்சம் தொடங்கி பாதுகாப்பு, சொசுகு என அனைத்துமே மிக தாராளமாக வழங்கப்பட்டிருக்கும்.

திருமண நாளன்று அசத்தலான பரிசு வழங்கிய பிள்ளைகள்... இந்த தகவல் உங்க பெற்றோர் கண்களில் படாமல் பார்த்துக்கோங்க!

எனவேதான் இது உயர்நிலை இடத்தில் சொனெட் வேரியண்டுகளின் பட்டியில் இருக்கின்றது. காற்றோட்டமான இருக்கைகள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், எல்இடி மின் விளக்குகள், 10.25 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் திரை, போஸ் ஸ்பீக்கர் சிஸ்டம், பின்புற ஏசி வென்ட்கள், ஏர் பியூரிஃபையர், ஆம்பிசியன்ட் லைட் மற்றும் பல அம்சங்கள் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன.

Image Courtesy: thakur mohan deep singh

ஜிடி லைன் வேரியண்டில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் இரு விதமான மோட்டார் தேர்வு வழங்கப்படுகின்றது. வீடியோவில் காணப்படும் கார் எந்த இயந்திரம் கொண்டது என்பது துள்ளியமாக தெரியவில்லை. இந்த கார் இந்தியாவில் ரூ. 6.79 லட்சம் தொடங்கி ரூ. 11.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Son & Daughter Gifted All-New Kia Sonet To Her Parents. Read In Tamil.
Story first published: Saturday, March 6, 2021, 19:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X