என்னங்க இப்படி சொல்லிட்டாங்க... அது இல்லைனா இன்சூரன்ஸை க்ளைம் பண்ண முடியாது... சுப்ரீம் கோர்ட் அதிரடி!

தகுதியான பதிவு சான்று இல்லை என்றால் காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீட்டை கோர முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவலைக் கீழே காணலாம், வாங்க.

என்னங்க இப்படி சொல்லிட்டாங்க... அது இல்லைனா இன்சூரன்ஸை க்ளைம் பண்ண முடியாது... சுப்ரீம் கோர்ட் அதிரடி!

காப்பீட்டு தொகையை உரிமை கோரியதில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக ஓர் வழக்கு உச்ச நீதிமன்றத்தின் கவனிப்பிற்கு அண்மையில் வந்தது. பிரீமியம் தாரரின் ரூ. 6.17 லட்சம் காப்பீட்டு தொகைக்கான க்ளைமிங்கை காப்பீட்டு நிறுவனம் ஏற்காததன் காரணத்தினால் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. இதன் விளைவாகவே வழக்கு நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்தது.

என்னங்க இப்படி சொல்லிட்டாங்க... அது இல்லைனா இன்சூரன்ஸை க்ளைம் பண்ண முடியாது... சுப்ரீம் கோர்ட் அதிரடி!

குறிப்பிட்ட கார் தகுதியான பதிவெண்ணைக் கொண்டிராத காரணத்தினால் காப்பீட்டு நிர்வாகம் இழப்பீடு உரிமை கோரலை நிராகரித்ததாகக் கூறப்படுகின்றது. இது நியாயமானது என கூறி உச்ச நீதிமன்றம் பிரீமியம் தாரரின் விண்ணப்பத்தை ரத்து செய்தது.

என்னங்க இப்படி சொல்லிட்டாங்க... அது இல்லைனா இன்சூரன்ஸை க்ளைம் பண்ண முடியாது... சுப்ரீம் கோர்ட் அதிரடி!

காணாமல் போனதாகக் கூறப்படும், தற்காலிக பதிவெண் கொண்ட மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி காரின் உரிமைக் கோரலையே உச்ச நீதிமன்றம் நிராகரித்திருக்கின்றது. வாகன காப்பீட்டிற்கு பெயர்போன நிறுவனங்களில் ஒன்றாக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் உள்ளது.

என்னங்க இப்படி சொல்லிட்டாங்க... அது இல்லைனா இன்சூரன்ஸை க்ளைம் பண்ண முடியாது... சுப்ரீம் கோர்ட் அதிரடி!

இந்த நிறுவனத்திடமே மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி காருக்கான காப்பீடு பிரீமியத்தை அதன் உரிமையாளர் பெற்றிருந்தார். இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே காலாவதியாகிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இதைக்கருத்தில் கொண்டும், பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் விதிமீறல்கள் அரங்கேறியிருப்பதைக் கருத்தில் கொண்டும் உச்ச நீதிமன்றம் உரிமை கோரலை தள்ளுபடி செய்தது.

என்னங்க இப்படி சொல்லிட்டாங்க... அது இல்லைனா இன்சூரன்ஸை க்ளைம் பண்ண முடியாது... சுப்ரீம் கோர்ட் அதிரடி!

தொடர்ந்து, "காப்பீட்டு ஒப்பந்தத்தில் உள்ள அடிப்படை நிபந்தனைகளின் மீறல் இருக்கக் கூடாது" என்று நீதிபதிகள் யுயு லலித், எஸ் ரவீந்திர பட் மற்றும் பெலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கி அமர்வு கருத்து தெரிவித்தது. பொலிரோ எஸ்யூவி கார் திருடப்பட்டபோது தகுதியான பதிவு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

என்னங்க இப்படி சொல்லிட்டாங்க... அது இல்லைனா இன்சூரன்ஸை க்ளைம் பண்ண முடியாது... சுப்ரீம் கோர்ட் அதிரடி!

எனவேதான் தகுதியில்லா பதிவு எண்ணை பயன்படுத்தி இருந்த பொலிரோ எஸ்யூவி காருக்கான இழப்பீடு உரிமை கோரலை நீதிமன்றம் ரத்து செய்திருக்கின்றது. அந்த நேரத்தில் வாகனம் தற்காலிக பதிவெண்ணைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. இதனடிப்படையிலேயே, இந்த விவகாரத்தில் பாலிசியை மறுக்க காப்பீட்டாளர்களுக்கு உரிமை உள்ளது என நீதிமன்றம் கூறியது.

என்னங்க இப்படி சொல்லிட்டாங்க... அது இல்லைனா இன்சூரன்ஸை க்ளைம் பண்ண முடியாது... சுப்ரீம் கோர்ட் அதிரடி!

மஹிந்திரா பொலிரோ காரின் உரிமையாளர் ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீகங்காநகரில் வசித்து வருகின்றார். இருப்பினும், இவர் பஞ்சாபில் தனது காருக்கான காப்பீட்டு பாலிசியை அவர் வாங்கியிருக்கின்றார். சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது வாகனம் ஜோத்பூரில் உள்ள ஓர் பார்க்கிங்கில் கலவு செய்யப்பட்டிருக்கின்றது.

என்னங்க இப்படி சொல்லிட்டாங்க... அது இல்லைனா இன்சூரன்ஸை க்ளைம் பண்ண முடியாது... சுப்ரீம் கோர்ட் அதிரடி!

இதையடுத்து கார் காணாமல் போனது குறித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் காரின் உரிமையாளர் வழக்கு பதிவு செய்தார். தற்போது வரை அக்காரை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என காவல்துறை பதில் அளித்துள்ளது. முறையான பதிவெண்ணைப் பயன்படுத்தாதே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.

என்னங்க இப்படி சொல்லிட்டாங்க... அது இல்லைனா இன்சூரன்ஸை க்ளைம் பண்ண முடியாது... சுப்ரீம் கோர்ட் அதிரடி!

இந்த நிலையிலேயே இழப்பீட்டிற்கான உரிமை கோரலையும் மஹிந்திரா கார் உரிமையாளர் இழந்திருக்கின்றார். இந்த நிகழ்வு, வாகனங்களில் முறையான பதிவெண் இருந்தால் மட்டுமே காப்பீடு உரிமை கோரலை மேற்கொள்ள முடியும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

என்னங்க இப்படி சொல்லிட்டாங்க... அது இல்லைனா இன்சூரன்ஸை க்ளைம் பண்ண முடியாது... சுப்ரீம் கோர்ட் அதிரடி!

முறையான காப்பீட்டு பாலிசி என்பது ஒவ்வொரு வாகனத்திற்குமே காட்டாயமானது. இது, களவு மற்றும் எதிர்பாராத அசம்பாவிதங்களில் இழப்புகளை ஈடு செய்ய உதவும். எனவேதான் அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும், நாம் அறியாமல் செய்யும் சில தவறுகளால் மேலே பார்த்த நிகழ்வை சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகின்றது. எனவேதான் பாலிசி போன்றவற்றை எடுக்கும் முன்னர் அனைத்து நிபந்தனைகளையும் ஒரு முறை பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

Source: HT Auto

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Supreme court says no insurance claim if vehicle driven without valid registration
Story first published: Friday, October 1, 2021, 12:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X