இளைஞர்களை கவர அதிரடி! ஸ்விஃப்ட் காரில் 'சிறப்பு பதிப்பு' அறிமுகம்... ஆனா, இந்த நாட்ல மட்டும்தான் கிடைக்கும்!

உலக புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான சுசுகி, அதன் ஸ்விஃப்ட் காரில் 'சேம்பியன்ஷிப் எடிசன்' எனும் புதிய பதிப்பை அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளைஞர்களை கவர சுசுகி அதிரடி! ஸ்விஃப்ட் காரில் 'சிறப்பு பதிப்பு' அறிமுகம்... ஆனா, இந்த நாட்ல மட்டும்தான் கிடைக்கும்!

சுசுகி நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் ரக காரும் ஒன்று. இந்த காருக்கு இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான கவர்ச்சிமிகு தோற்றம், சூப்பர் திறன் உள்ளிட்டவற்றை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தில் இளைஞர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இளைஞர்களை கவர சுசுகி அதிரடி! ஸ்விஃப்ட் காரில் 'சிறப்பு பதிப்பு' அறிமுகம்... ஆனா, இந்த நாட்ல மட்டும்தான் கிடைக்கும்!

இந்த வரவேற்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் சுசுகி நிறுவனம், இக்கார் மாடலில் சிறப்பு பதிப்பு ஒன்றை வெளியீடு செய்திருக்கின்றது. அதாவது, ஸ்விஃப்ட் சேம்பியன்ஷிப் எடிசன் எனும் புதிய தேர்வை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இளைஞர்களை கவர சுசுகி அதிரடி! ஸ்விஃப்ட் காரில் 'சிறப்பு பதிப்பு' அறிமுகம்... ஆனா, இந்த நாட்ல மட்டும்தான் கிடைக்கும்!

இந்த பிரத்யேக பதிப்பை ஐரோப்பிய வாகன சந்தைக்கு மட்டுமே அறிமுகம் செய்திருக்கின்றது. ஆகையால், இக்கார் பிற நாட்டவர்களுக்கு எட்டக் கானியாக அமைந்துள்ளது. இந்தியர்களுக்கும் இதே நிலைதான். இக்காருக்கு யூரோ மதிப்பில் 20,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 18.44 லட்சம் ஆகும்.

இளைஞர்களை கவர சுசுகி அதிரடி! ஸ்விஃப்ட் காரில் 'சிறப்பு பதிப்பு' அறிமுகம்... ஆனா, இந்த நாட்ல மட்டும்தான் கிடைக்கும்!

இந்த உச்சபட்ச விலையிலேயே சுசுகி சேம்பியன்ஷிப் எடிசன் ஸ்விஃப்ட் கார் ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஸ்பெஷல் எடிசன் கார் வழக்கமான ஸ்விஃப்ட் காரை காட்டிலும் சற்று மாறுபட்ட லுக்கில் காட்சியளிக்கின்றது. தான் ஓர் சிறப்பு பதிப்பு என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த மாற்றம் அமைந்திருக்கின்றது.

இளைஞர்களை கவர சுசுகி அதிரடி! ஸ்விஃப்ட் காரில் 'சிறப்பு பதிப்பு' அறிமுகம்... ஆனா, இந்த நாட்ல மட்டும்தான் கிடைக்கும்!

இதற்காக புதிய நிற தோற்றம், ஸ்பெஷல் ஸ்டிக்கர்கள் மற்றும் பேட்ஜ்கள் உள்ளிட்டவை இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பெயிண்டிங் வேலையே மிகவும் கவர்ச்சிகரமானதாக இக்காரில் அமைந்திருக்கின்றது. நீலம் மற்றும் சில்வர் நிற பெயிண்ட் பூச்சே செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்களை கவர சுசுகி அதிரடி! ஸ்விஃப்ட் காரில் 'சிறப்பு பதிப்பு' அறிமுகம்... ஆனா, இந்த நாட்ல மட்டும்தான் கிடைக்கும்!

இதில் சில்வர் நிற பூச்சானது காரின் மேற்கூரையில் இருந்து முன்பக்க பேனட் மற்றும் பம்பர் வரை நீண்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது. இது காருக்கு கூடுதல் கவர்ச்சியைச் சேர்க்கும் அமைந்துள்ளது. ரேஸ் கார்களில் இருப்பதைப் போல மூன்று கோடுகள் இக்காரின் மீது போடப்பட்டிருப்பது இன்னும் கவர்ச்சியானதாக அமைந்திருக்கின்றது.

இளைஞர்களை கவர சுசுகி அதிரடி! ஸ்விஃப்ட் காரில் 'சிறப்பு பதிப்பு' அறிமுகம்... ஆனா, இந்த நாட்ல மட்டும்தான் கிடைக்கும்!

வெளிப்புறத்தைப் போலவே காரின் உட்பகுதியிலும் பல்வேறு சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், தனித்துவமான லுக்கை வழங்கும் வகையில் மஞ்சள் நிற கூறுகள் பல காருக்குள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, டிரைவர் மற்றும் பயணிகளுக்கான ஆர்ம் ரெஸ்ட், கண்கவர் டேஷ்போர்டு மற்றும் டிரான்ஸ்மிஷன் டனல் என சிறப்பு அம்சங்கள் பல இக்காரின் உட்பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன.

இளைஞர்களை கவர சுசுகி அதிரடி! ஸ்விஃப்ட் காரில் 'சிறப்பு பதிப்பு' அறிமுகம்... ஆனா, இந்த நாட்ல மட்டும்தான் கிடைக்கும்!

இத்துடன், மோட்டோஜிபி போட்டியின் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஜோன் மிர்-இன் கையொப்பம் டேஷ்போர்டில் வழங்கப்பட்டுள்ளது. சுசுகி நிறுவனம் இக்காரில் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட 1.4 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினைப் பயன்படுத்தியிருக்கின்றது. இது 48வோல்ட் திறனை வெளிப்படுத்தக் கூடிய ஹைபிரிட் சிஸ்டம் ஆகும்.

இளைஞர்களை கவர சுசுகி அதிரடி! ஸ்விஃப்ட் காரில் 'சிறப்பு பதிப்பு' அறிமுகம்... ஆனா, இந்த நாட்ல மட்டும்தான் கிடைக்கும்!

இது அதிகபட்சமாக 129 பிஎச்பி வரை வெளியேற்றும். வழக்கமான சுசுகி ஸ்விஃப்ட் காரைக் காட்டிலும் இது 13 பிஎச்பி அதிகம் ஆகும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைந்தே இந்த திறனை இக்கார் வெளிப்படுத்துகின்றது. உச்சபட்சமாக இந்த ஸ்பெஷல் எடிசன் கார் மணிக்கு 210 மைல் எனும் வேகத்தில் இயங்கக்கூடியது.

இளைஞர்களை கவர சுசுகி அதிரடி! ஸ்விஃப்ட் காரில் 'சிறப்பு பதிப்பு' அறிமுகம்... ஆனா, இந்த நாட்ல மட்டும்தான் கிடைக்கும்!

இளைஞர்கள் மத்தியில் கிடைத்து வரும் அமோகமான வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கில் இக்காரை சுசுகி களமிறக்கியிருக்கின்றது. ஆனால், இது இந்தியா வருவது மிக கடினம் ஆகும். அதேசமயம், இக்காரின் புதுப்பிக்கப்பட்ட மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Suzuki Introduced Swift Championship Edition In European Countries. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X